2 கே லவ் ஸ்டோரி சினிமா விமர்சனம் : 2கே லவ் ஸ்டோரி எந்த கிட்ஸ்சையும் கவரவில்லை | ரேட்டிங்: 2.5/5
நடிகாகள் : ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி.முத்து, வினோதினி, நிரஞ்சன் ஜெயபிரகாஷ், ஹரிதா.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
இயக்குனர்: சுசீந்திரன்
தயாரிப்பாளர்: விக்னேஷ் சுப்ரமணியன் (சிட்டி லைட் பிக்சர்ஸ்)
இசையமைப்பாளர்: டி. இமான்
ஒளிப்பதிவாளர்: ஆனந்த கிருஷ்ணா
படத்தொகுப்பாளர்: தியாகு
நடன இயக்குனர்கள்: ஷோபி பால்ராஜ்
ஆடை வடிவமைப்பாளர்: மீரா எம்
தயாரிப்பு நிர்வாகி: டி முருகேசன்
ஒப்பனை: தசரதன்
பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் (ஏஐஎம்)
ஸ்டில்ஸ்: சூர்யா
திரையரங்க வெளியீடு – ஜி தனஞ்செயன் (கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ்; மற்றும் விநியோகஸ்தர்கள்)
கார்த்திக்கும் (ஜெகவீர்), மோனியும் (மீனாட்சி கோவிந்தராஜன்) பள்ளி பருவத்திலிருந்து இணை பிரியாத உயிர் நண்பர்கள். மோனி பற்றி ஒவ்வொரு விஷயமும் கார்த்திக்கு தெரியும். சுற்றியிருப்பவர்கள் அவர்கள் நெருக்கத்தைப் பார்த்து வருங்காலத்தில் இருவரும் காதலில் விழுவார்கள் என கூறும் அளவுக்கு இருவரும் நெருங்கிய உறவு வளர்த்துள்ளனர். ஆனால் இருவரும் அந்த சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் நட்பைத் தொடர்கிறார்கள். மேலும் கார்த்திக்கும் மோனியும் ப்ரீ வெட்டிங் ஸ்டுடியோ நடத்துகிறார்கள். அவர்கள் டீமில் புதிதாக சேரும் ‘90 கிட்ஸ்’ ஆன ஆண்டனி பாக்யராஜ், கார்த்திக் – மோனி நட்பில் காதல் இருக்கிறது என்று கூறும் போது, அவர்கள் அப்படிபட்டவர்கள் இல்லை. நாங்க 2 கே கிட்ஸ், என்று அந்த டீமில் இருக்கும் பாலசரவணன் பதிலடி கொடுக்கிறார். இந்நிலையில், கார்த்திக் – மோனி உறவுக்குள் பவித்ரா கார்த்திக் காதலியாக நுழையும் போது பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. அவை என்ன? கார்த்திக்கிற்கும் மோனிக்கும் உள்ள நட்பு என்ன ஆனது? இருவருக்குள் காதல் மலர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு படத்தின் மீதிகதை விடையளிக்கும்.
ஜெகவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ் தங்களது கதாபாத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். என்றாலும் உணர்வுபூர்வமான காட்சிகளில் மீனாட்சி ஜொலிக்கிறார்.
இவர்களுடன் லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி.முத்து, வினோதினி, நிரஞ்சன் ஜெயபிரகாஷ், ஹரிதா உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பு தந்து சாதாராண திரைக்கதையை நகர்த்த முயற்சித்துள்ளனர். படத்தில் காமெடி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
டி. இமானின் இசை மற்றும் பின்னணி இசை, ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பாளர் தியாகு உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பெப்பே இல்லாத திரைக்கதைக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்குனர் சுசீந்திரன் ஏற்கனவே வெளியான படங்களான புதுவசந்தம் (1990) மற்றும் பிரியமான தோழி (2003) ஆகியவற்றிலிருந்து சில முக்கிய கருப்பொருள்களை எடுத்துக்கொண்டு, புதுமையும் உற்சாகமும் இல்லாத ஒரு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். அதற்கு ‘2கே லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டு, ‘நாங்க 2கே கிட்ஸ்’ என்று அடிக்கடி இடம் பெறும் வசனத்தை நம்பியே காட்சிகளை கடத்தி உள்ளார் இயக்குனர் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் சொல்ல வந்த இந்த இணைபிரியா நட்பு பற்றிய விஷயத்தை இயக்குனர் விக்ரமன் 1990 மற்றும் 2003 காலகட்டத்திலேயே ஒரு அற்புதமான படைப்பாக தந்து விட்டார்.
மொத்தத்தில் சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள 2கே லவ் ஸ்டோரி எந்த கிட்ஸ்சையும் கவரவில்லை.