1982 அன்பரசின் காதல் திரைவிமர்சனம் : 1982 அன்பரசின் காதல், வசீகரிக்கும் காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். | ரேட்டிங்: 2.5/5

0
223

1982 அன்பரசின் காதல் திரைவிமர்சனம் : 1982 அன்பரசின் காதல், வசீகரிக்கும் காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். | ரேட்டிங்: 2.5/5

தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின் கலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உல்லாஷ் சங்கர் இயக்கியிருக்கும் படம் ‘1982 அன்பரசின் காதல்’.  இதில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா ஆகியோருடன் இயக்குநர் உல்லாஷ் சங்கரும் நடித்துள்ளார்.

ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், கிரேசன் படத்தொகுப்பையும், எஸ். சிந்தாமணி இசையையும், சிபு கிருஷ்ணா கலையையும், டின்ஸ் ஜேம்ஸ் சண்டைப் பயிற்சியையும், நிதின் கே. உதயன் புகைப்படங்களையும், ராயீஸ் சுல்தான் நடன பயிற்சியையும், அனுமோட் சிவராம், பென்னி இருவரும் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர். மக்கள் தொடர்பு விஜயமுரளி.

கேரள எல்லையோரம் வசிக்கும் கதையின் நாயகனான அன்பரசு (ஆஷிக் மெர்லின்)  மலையாள பெண் சந்தனாவை மூன்று வருடமாய் காதலிக்கிறான்.  அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். ஆனாலும் காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறான். இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர். இந்த நிலையில் ஆஷிக் மெர்லினை சந்தனா போனில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்படி கூறுகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அன்பரசு அவளிடம் காதலை கூறிவிட முடிவு செய்து போகிறான். அன்பரசு கேரளா சென்று சந்தனாவை அழைத்துக் கொண்டு மலைக்காடுகள் வழியாக பயணிக்கும்போது ரவுடிகள் மறிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகின்றனர். உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து மீண்டும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். அவரிடம் இருவரும் சிக்கினார்களா? அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா ? உல்லாஷ் சங்கர் ஏன் அவ்வாறு நடந்துக் கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இளம் காதலனாக ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் துடிப்பான இளைஞனாக, அவரது காதலியாக சந்தனா, இன்னொரு நாயகனாக வரும் அமல் ரவீந்திரன் மற்றும் அவரது காதலியாக வரும் அருணிமா ராஜ் ஆகியோர் தேவையான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். வசீகரிக்கும் இரண்டு கதாநாயகிகளும் இளசுகளை எளிதில் கவர்ந்து விடுவார்கள்.

அருணிமா ராஜின் தந்தையாகவும் வில்லன் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் உல்லாஷ் சங்கர். மற்றும் ஹரிஷ் சிவப்பிரகாசம், செல்வா, சுமதி தாஸ், தமிழன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மலை பிரதேசத்தின் இயற்கை அழகை கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன். எஸ். சிந்தாமணியின் இசையும், அனுமோட் சிவராம், பென்னி இருவரின் பின்னணி இசையையும், கிரேசன் படத்தொகுப்பும் கதை நகர்விற்கு உதவி இருக்கிறது.

இரண்டு எளிமையான காதல் கதையை ஆரம்பம் முதல் உச்சகட்ட காட்சி வரை திரில், மர்மம், ஆக்சன், காமெடி, என திரைக்கதையில் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் உல்லாஷ் ஷங்கர்.

மொத்தத்தில் தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின் கலை தயாரித்துள்ள 1982 அன்பரசின் காதல், வசீகரிக்கும் காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.