வெள்ளிமலை விமர்சனம்:  ரேட்டிங்: 2.5/5

0
439

வெள்ளிமலை விமர்சனம்:  ரேட்டிங்: 2.5/5

சூப்பர்ப் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்து ஒம் வெள்ளிமலை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஓம் விஜய்.
இதில் சூப்பர் குட் சுப்ரமணியன், வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா, கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -மணிபெருமாள், எடிட்டர்- சதீஷ் சூர்யா , இசை -என்.ஆர். ரகுநந்தன்,  கலை இயக்குனர் – மாயபாண்டியன், பாடல்கள் – கார்த்திக், கருமத்தூர் மணிமாறன், லைன் பிரொடியூசர்-விக்னேஷ், ஒலி-ராம்ஜி, ஸ்டில்ஸ்-மனோகரன், பிஆர்ஒ-சுரேஷ்சந்திர, ரேகா டிஒன்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள வெள்ளிமலையின் அடிவாரமான கீழ் வெள்ளிமலை கிராமத்தில், தன் மகள் மனோன்மணியுடன் (அஞ்சு கிருஷ்ணா)  வாழ்ந்து வருகிறார் சித்த வைத்தியரான அகத்தீசன் (சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணியன்). பல வருடங்களுககு முன்பு சிறு வயதில் சித்த வைத்தியம் செய்த ஒருத்தர் இறந்து விட, அந்த கிராமமே சித்த வைத்தியர் குடும்பத்தை தள்ளி வைத்து வைத்தியம் பார்க்க வருவதில்லை. அவரிடம் மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பது, அவர் தயாரிக்கும் மருந்துகளையும் கிண்டல் செய்கிறார்கள் அந்த கிராமத்தினர். இந்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் அகத்தீசன், என்றாவது ஒரு நாள் ஊர் மக்கள் திருந்தி தன்னிடம் சித்த வைத்தியம் பார்க்க வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் தயாரித்த மூலிகை மருந்துகளால் எந்த பயனும் இல்லாததால் மருத்துவர் மன உளைச்சலில் இருக்கிறார்.இதுபோன்ற சூழ்நிலைகளில், அப்பகுதி மக்கள் விசித்திரமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மொத்த கிராமத்தினரும் துடிதுடித்துப் போகிறார்கள், சிலர் செத்து மடிகிறார்கள். அத்தருணத்தில் அகத்தீசன் சித்த மருந்துகளை ஏற்க மறுக்கிறார்கள். இருப்பினும், கிராமமே மருத்துவ உதவியை நாட தயங்குகிறது. ஆனால், அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் வந்து மூலிகை மருந்தைப் பெற்று பூரண குணமடைந்ததும், அந்த ஊர் மக்கள் இவரை நாடி வருகிறார்கள். மூலிகை மருத்துவரின் பிரச்சனை தீர்ந்து விட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நாட்டு வைத்தியர் அகத்தீசன் மற்றும் போகர் ஆகிய இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருக்கும் குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சூப்ரணியன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கதையின் நாயகன் என்பதால் நடிப்பில் வித்தியாசம், வித்தியாசம் காட்டுகிறோம் என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் தனது வழக்கமான பாணியில் நடித்த சுப்ரமணி, காமெடி கலந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஓரளவு நியாயமும் சேர்த்திருக்கிறார். ஆனால் மிக முக்கியமான தருணத்தில் திரைக்கதை குழப்பத்தால் அவரின் வைத்தியர் கதாபாத்திரம் பலவீனமடைகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வனராஜாவாக  வீரசுபாஷ் மற்றும் கிராமத்து பெண்ணாகவும், மகளாகவும் மனோன்மணியாக அஞ்சு கிருஷ்ணன் இருவரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். மொரட்டாளாக கிரிராஜ், புயல்ராசுவாக விஜயகுமார், காட்டுத்தீயாக சார்லஸ் பாண்டியன், கரும்பாரையாக கவிராஜ், பயில்வானாக பழனிச்சாமி ஆகிய அந்தந்த கதாபாத்திரங்கள் அவர்களின் உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் காட்சிகளில் பல காட்டு மலைகளைக் கடந்து இயற்கை சூழலுடன் கடுமையாக உழைத்திருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் அனைத்துப் பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

எடிட்டர்- சதீஷ் சூர்யா மற்றும் கலை இயக்குனர் மாயபாண்டியனின் பங்களிப்பு கச்சிதம்.

சித்த வைத்தியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சியில் எதார்த்தமான கிராமத்தையும் மக்களையும் கொண்டு, படத்தின் கதையை எழுதி பல எதிர்பார்ப்புகளுடன் கதையை நகர்த்தும் போது திரைக்கதையின் இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் தோய்வு ஏற்படும் நகைச்சுவை காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அதே போல் க்ளைமேக்ஸில் சித்த வைத்தியர் அகத்தீசனின் கதாபாத்திரத்தை சப்புன்னு ஆக்கிவிட்டார் இயக்குனர் ஓம் விஜய்,

மொத்தத்தில் சூப்பர்ப் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்திருக்கும் வெள்ளிமலை பார்க்கலாம்.