வீரன் திரைப்பட விமர்சனம் : வீரன், குழந்தைகள் கொண்டாடும் சூப்பர் பவர் ஹீரோ | ரேட்டிங்: 3/5

0
727

வீரன் திரைப்பட விமர்சனம் : வீரன், குழந்தைகள் கொண்டாடும் சூப்பர் பவர் ஹீரோ | ரேட்டிங்: 3/5

‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி, இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் வீரன். வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டிமோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு டி.ஒன், ரேகா, சுரேஷ்சந்திரா.

மின்னலால் தாக்கப்பட்ட ஒரு இளைஞனை (ஹிப்ஹாப் தமிழா ஆதி ) பற்றிய கதை. வீரனூர் கிராமத்தைச்  சேர்ந்தத குமரன் மாணவனாக இருந்தபோது, தனது கிராம தெய்வமான வீரனின் சக்தியை நம்ப மறுப்பதாகக் கூறியதால், குமரன் மீது மின்னல் தாக்கி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுகிறது. இந்த விபத்து சம்பவம் அவனை பல நாட்கள் செயலிழக்கச் செய்தாலும், சிறந்த சிகிச்சை பெறுவதற்காக, அவனது தந்தை அவனை அவரது சகோதரியுடன் சிங்கப்பூருக்கு அனுப்புகிறார். அது அவனது வாழ்க்கையை கடுமையாக மாற்றி அசாதாரண திறன்கள் வெளிப்படுகின்றன. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு, குமரன் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார்,அங்கு அவர் தனது நண்பர்களான சக்கரை (சசி செல்வராஜ்) மற்றும் செல்வி (அதிரா ராஜ்) ஆகியோருடன் மீண்டும் இணைகிறார். இந்நிலையில், வீரனூர் கிராம மக்கள், வீரன் என்று பெயர் பெற்ற தங்கள் கடவுளை நம்பாமல் இருக்க ஆனால் பூசாரி மட்டும் வீரன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, துன்பத்தில் இருக்கும் அவர்களை கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.அதே நேரத்திலும், வீரன் இரண்டு சுவாரஸ்யமான சக்திகளைக் கொண்டிருப்பதாக தன் நண்பர்களுக்கு காட்டுகிறார். அவரால் குறைந்த மின்னழுத்த மின்சார அதிர்வளைவுகளைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் அவர் தனது விருப்பப்படி யாரையும் மின்சார அதிர்வளைவுகள் மூலம் சுமார் 90 வினாடிகள் கையாண்டு தன் வசப்படுத்த  முடியும். ஆனால் வீரன் ஒரு வெடி விபத்தில் அந்த கிராமம் அழிந்துவிடும் என்பதை அறிந்து கொள்கிறார். அந்த அழிவுக்கு அந்த கிராமத்தில் நடக்க இருக்கும் உயர் சக்தி கேபிள் திட்டமே அதற்கு காரணமாக இருக்கும் என்று குமரன் பலமாக சந்தேகிக்கிறார். மேலும் அதை உறுதியும் செய்கிறார். ஏராளமான கிராமங்களை பாதிக்கும் அபாயகரமான நிலத்தடி லேசர் கேபிள் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அப்பாவி உயிர்களை அழிக்கக்கூடிய தொழில்நுட்ப அச்சுறுத்தலில் இருந்து தனது கிராமத்து மக்களை பாதுகாக்கவும் போராடவும் தனது இரண்டு நண்பர்களுடன் சக்கரை (சசி) மற்றும் செல்வி (அதிரா ராஜ்) ஆகியோருடன் ஒரு பயணத்தை  தொடங்குகிறார். பேரழிவைத் தடுக்க, குமரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து, வீரனின் கட்டுக்கதையை பயன்படுத்தி, திட்டத்திற்கு எதிராக செயல்பட கிராம மக்களை நம்ப வைக்கிறார், மேலும் அவரது வல்லமையை பயன்படுத்தி, தனது மக்களைக் காப்பாற்ற குமரனின் முயற்சிகளைச் சுற்றியே படம் சுழல்கிறது.

மின் வளைவுகளை உருவாக்கி, மின்காந்த அலைகளை பயன்படுத்தி மூளைத் தூண்டுதல்களை கையாளக்கூடிய ஒரு வீரன் கதாபாத்திரத்தில், அதே நேரத்தில் அவரது சிக்கலான, முரண்பட்ட கதாபாத்திரத்திற்கு போதுமான நம்பகத்தன்மையை அளித்து, குழந்தைகளை கவரும் விதத்தில் ஆதி சூப்பர் ஹீரோவாக ஒரு உறுதியான நடிப்பை வெளிப்படுத்தி ஜொலிக்கிறார்.

ஆதியின் நண்பனாக வரும் சசி செல்வராஜ், தனது காதலை திறமையாக சித்தரிக்கும் நாயகியாக வரும் அதிரா ராஜ், பார்வை குறைபாடு கொண்ட தோட்டக்காரராக வரும் ஜென்சன், பிரசன்னா பாலச்சந்திரன், சாவித்ரி உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்த்துள்ளனர்.

படத்தின் உண்மையான பெரிய ஹைலைட் காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காமெடி. இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்ததால் தியேட்டரில் சிரிப்பலை எதிரொலிக்கிறது. அதோ போல முருகானந்தம் அவ்வப்போது சிரிப்பை வர வைத்துள்ளார்.

ஹீரோவுக்கு சமமான வில்லன் இதில் இல்லை. மெயின் வில்லனாக வரும் வினயக்கு  படம் முழுக்க ஓவர் பில்டப் மட்டுமே மிச்சம். வில்லன் கதாபாத்திரம் இன்னும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.

திரைப் பிரவேசம் மிக குறைவாக இருந்தாலும் படத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக சின்னி ஜெயந்த் ஹீரோவால் ஹிப்ஹாப் ஆதியால் கட்டுப்படுத்தப்பட்டு மாறி மாறி பேசும் காட்சி, அதே போல் கட்டுப்படுத்தப்பட்ட வில்லனின் தம்பி பத்ரி சாமியாடும் காட்சியிலும் நடிப்பால் இருவரும் கலக்கி விட்டார்கள்.

ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும் ஓகே, பின்னணி இசை சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கானது போல் இல்லை.

கிராமத்தின் எழில் அழகை தீபக் மேனனின் கேமரா கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இந்தப் படம் உள்ளூர் தெய்வங்களை உள்ளடக்கியதன் மூலம் ஒரு பிராந்திய தொடுதலை உள்ளடக்கிஆன்மீகத்தின் மீதான ஒருவரின் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள உணர்ச்சிகரமான கருத்தை சமநிலையாக அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டு இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் விஷயத்தில் ஏமாற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள வீரன், குழந்தைகள் கொண்டாடும் சூப்பர் பவர் ஹீரோ.