விடுதலை பாகம் 1 திரைப்பட விமர்சனம்: விடுதலை பாகம் 1 ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவும் ஒரு அற்புதமான படம்! | ரேட்டிங்: 4.5/5

0
1046

விடுதலை பாகம் 1 திரைப்பட விமர்சனம்: விடுதலை பாகம் 1 ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவும் ஒரு அற்புதமான படம்! | ரேட்டிங்: 4.5/5

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விடுதலை பாகம் 1. சூரி போலீசாக நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ.
ஒளிப்பதிவு வேல்ராஜ், கலை ஜாக்கி, எடிட்டிங் ராமர், சண்டை பயிற்சி சிவா, இசை இசைஞானி இளையராஜா.
தயாரிப்பு எல்ரெட் குமார்.
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா, ரேகா, டிஒன்.
வெற்றி மாறனின் பெயரைச் சொன்னாலே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது, விடுதலைப் பாகம் 1 அவற்றை எளிதாக விஞ்சுகிறது. இத்திரைப்படம் 80 களின் பின்னணியில் உருவாகிறது, அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடுகிறது அரசு. அரசு உத்தேசிக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறது. வாத்தியார் என்ற பெருமாள் தலைமையிலான இந்த படையை அழிக்கும் பணி காவல்துறைக்கு இருந்தது, ஏனெனில் அரசாங்கம் தொழில்துறைக்கு உகந்த அடையாளத்தை மாநிலத்திற்கு வழங்க விரும்புகிறது. வாத்தியார் என்று அழைக்கப்படும் பெருமாளையும் (விஜய் சேதுபதி), மக்கள் படையையும் தேடும் போலீஸ் வேட்டையும், பெருமாளின் மீது பச்சாதாபம் காட்டியவர்களிடம் நடந்த கொடூரமும்தான் படத்தில் நாம் பார்க்கிறோம்.
ஒரு ரயில் குண்டுவெடிப்பின் பின்விளைவுகளை சித்தரிக்கும் ஒரு அற்புதமான ஒற்றை-ஷாட் காட்சியுடன் படம் தொடங்குகிறது, கண்ணிவெடியால் ஏற்பட்ட ரயில் விபத்தின் நீளமான சிங்கிள் டேக் காட்சியுடன் படம் துவங்குகிறது. வேல்ராஜின் பிரேம்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தையும் அந்த நிகழ்வின் தீவிரத்தைப் பற்றிய ஒரு செய்தியை நமக்கு வழங்குகிறது. வெற்றிமாறன், கதையின் நாயகனாக நிழலுலக கிளர்ச்சித் தலைவர் பெருமாளை (விஜய் சேதுபதி) பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் பிரிவில்  டிரைவர் குமரேசனாக (சூரி)  புதிதாகப் பணியமர்த்தப்படுகிறார். காடுகளின் எல்லையில் பல மாதங்களாக சிக்கி, போதிய வசதிகள் இல்லாமல், அடிப்படை உணவுகளை செய்து, பெருமாளின் தோழர்களால்; தாக்கப்படும் அபாயத்தில் இருக்கும் காவல் துறைக்கு ஓட்டுனராகவும், சமையல் காரராகவும், வேலை செய்யத் தொடங்குகிறார். கிளர்ச்சியாளர்கள் பிராந்தியத்தில் முன்மொழியப்பட்ட சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். போலீஸ் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளேயும் வெளியேயும் அந்த கிராம மக்களின் நலனுக்காக செயல்படும் பெருமாளின் ஒரு புகைப்படமும் காவல்துறையிடம் இல்லை. இந்நிலையில் குமரேசன் ஒரு பழங்குடி பெண்ணின் உயிரைக் காப்பாற்றுகிறார், அதனால் அவரது மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளானார். மேலதிகாரியிடம் மன்னிப்பு கேட்காததால் தண்டனையாக கடுமையான வேலைகளை மேலதிகாரி தருகிறார். மனசாட்சிபடி செயல்படும் குமரேசன் தான் தவறு எதுவும் செய்ய வில்லை எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி  தனக்கு வழங்கப்பட்ட கடுமையான வேலைகளை செய்கிறார். ஆர்வலர் குழுவின் தலைவர் வாத்தியாரை (விஜய் சேதுபதி) கைப்பற்றி அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக “பேய் வேட்டை”யைத் உயர் அதிகாரி சுனில் மேனன் (கௌதம் மேனன்) தலைமையில் துறை தொடங்குகிறது. குமரேசன் பழங்குடிப் பெண் தமிழரசியை (பவானி ஸ்ரீ) காதலிக்கும் போது, வாத்தியாரைப் பிடிக்க போலீஸ் படை மக்கள் மீது தங்கள் அதிகாரத்தைப் கொடூரமாக பயன்படுத்தத் தொடங்குகிறது. வாத்தியாரின் இருப்பிடம் யாருக்கும் தெரியாத நிலையில், வாத்தியாருக்கு வேரூன்றிய அந்த எண்ணற்ற அப்பாவி உயிர்களை காப்பாற்ற வாத்தியார் இருக்கும் இடம்  தனக்கு தெரியும் என்று கூறுகிறார். அதன் பின் நடப்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். க்ளைமாக்ஸ் துரத்தல் மற்றும் போலீஸ் சித்திரவதைகள் இணையாக விடுதலை பாகம் 1 முடிவில், வெற்றி மாறன் வரவிருக்கும் இரண்டாம் பாகத்தின் காட்சிகளுடன் பார்வையாளர்களை கவர்கிறார், அந்த காட்சிகளில் உள்ள வியத்தகு தருணங்களைப் பார்க்கும்போது,  விடுதலை பாகம் 2 பற்றி எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்துகிறது.
அனைவருக்கும் சூரி ஒரு நகைச்சுவை நடிகர் என்று தான் தெரியும். ஆனால் அவருக்குள் இவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகன் இருக்கிறான் என்பதை இயக்குனர்  வெற்றிமாறன் கண்டுபிடித்து குமரேசன் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக உணர்ந்து கதையின் நாயகனாக சூரியை பயன்படுத்தியுள்ளார். குமரேசனின் அப்பாவித்தனமும், அறியாமையும், கருணை உள்ளம் கொண்ட போலீசாக வரும் சூரி படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் முடிவில் ஒரு ஹீரோயிச ஆக்ஷன் ஹீரோவாக அவர் அற்புதமாக மாறுகிறார். குமரேசன் கதாப்பாத்திரத்திற்கு சூரி தனது வாழ்க்கையின் சிறப்பான நடிப்பின் மூலம் நியாய படுத்தியுள்ளார். இந்தப் படம் அவரை இண்டஸ்ட்ரியில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும். 2023-ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் சூரியின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.
மக்கள் போராளியாக வரும் விஜய் சேதுபதிக்கு படத்தில் குறைந்த தருணங்கள் மட்டுமே, ஆனால் அவை ஒவ்வொன்றும் ‘மாஸ்’ தருணங்கள். என்றாலும் கதை முழுவதும் அவரது இருப்பை அனைவரும் உணர்வீர்கள். விஜய் சேதுபதியின் வெறித்தனமான இந்த நடிப்பு அவரது திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
மற்றொரு மறக்க முடியாத கதாபாத்திரம் பாப்பா என்கிற தமிழரசி. நாயகி பவானி ஸ்ரீ இந்த கதாபாத்திரத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
போலீஸ் உயர் அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன் கச்சிதமாக பொருந்தி உள்ளார் . சேத்தன், ராஜீவ் மேனன், தமிழ், மூணார் ரமேஷ், இளவரசு, சரவண சுப்பையா மற்றும் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு தீவிரமான நடிப்பின் மூலம் நல்ல பங்களிப்பை வழங்கி நம் மனதில் பதிகின்றன.
வேல்ராஜின் ஒளிப்பதிவு,  ஜாக்கி அவர்களின் கலை இயக்கம், ராமரின் எடிட்டிங் என அனைத்தும் சேர்ந்து நம்மையும் மலைக்கிராமத்தில் ஓட்டு வீட்டின் மீது உருண்டு பிரண்டு, குறுகிய சந்துக்களின் வழியே ஓட வைக்கும் சிவாவின் ஸ்டண்ட் மற்றும் உலகத்தரம் வாய்ந்த க்ளைமாக்சில் வரும் துப்பாக்கிச் சண்டை காட்சி என அனைத்தும் படத்திற்கு மிகப்பெரிய பலம், மேலும் இளையராஜாவின் இசை மற்றும் பவர் பேக் செய்யப்பட்ட பின்னணி ஸ்கோர் பார்வையாளர்களை முழுமையாக மூழ்கடிக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு கதையின் நாயகனாக சூரியை தேர்வு செய்து பிரமிக்க வைக்கும் விதத்தில் இயக்கியுள்ளார் வெற்றிமாறன். காவலில் போராளியின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, நிர்வாண கர்ப்பிணிப் பெண்ணின் தலையில் இரக்கமில்லாமல் அடிக்கும் காட்சி, ஒரு அறையில் ஒரு பெண் கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருக்கும் காட்சி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சி என பல நெஞ்சை பதற வைக்கும் மற்றும் வன்முறையை அப்படியே சித்தரிக்கும் காட்சிகள் அமைந்திருப்பது தான் படத்தின் உண்மையான ஹைலைட்.
இன்றைய இயக்குனர்கள் அனைவரும் எப்படி திரைக்கதை அமைத்து, அதை எவ்வாறு காட்சி படுத்த வேண்டும் என்பதை இயக்குனர் வெற்றிமாறனிடம் கற்றுக்கொள்ளலாம். வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பொக்கிஷம். வருங்கால இயக்குனருக்கு அவர் ஒரு மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக விளங்குவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஹாட்ஸ் அப் வெற்றிமாறன். மற்றொரு தேசிய விருது காத்திருக்கிறது உங்களுக்கு.
மொத்தத்தில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள விடுதலை பாகம் 1 ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவும் ஒரு அற்புதமான படம்!