வாரிசு விமர்சனம் : வாரிசு ஒன் மேன் ஷோவின் பெரிய திரை சீரியல் | ரேட்டிங் 2.5|5

0
1169

வாரிசு விமர்சனம் : வாரிசு ஒன் மேன் ஷோவின் பெரிய திரை சீரியல் | ரேட்டிங் 2.5|5

நடிகர்கள் :
விஜய், ராஷ்மிகா மந்தனா, ஆர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், சுமன்,  ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீPமன், விடிவி கணேசன்,பரத் ரெட்டி, சஞ்சனா, சதீஷ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் – வம்ஷி பைடிப்பள்ளி
தயாரிப்பாளர் – ராஜு, ஷிரிஷ்
தயாரிப்பு – ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் – ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி, ஸ்ரீ ஹர்ஷிதா
இசை – தமன் எஸ்
கதை, திரைக்கதை – வம்ஷி பைடிப்பள்ளி, ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன்
வசனங்கள், கூடுதல் திரைக்கதை, பாடல்கள் – விவேக்
ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி
எடிட்டர் – பிரவீன் கே.எல்
தயாரிப்பு வடிவமைப்பு – சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி
விஎப்எக்ஸ் – யுகாந்தர்
ஸ்டண்ட் இயக்குனர் – ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின் மற்றும் திலிப் சுப்பராயன்
நடன இயக்குனர் – ஜானி, ஷோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அகமது

கதை:

ஜெய் (ஸ்ரீகாந்த்) அஜய் (ஷாம்) மற்றும் விஜய் (விஜய்) ஆகிய 3 மகன்களுக்கு ராஜேந்திரன் (ஆர்.சரத்குமார்) கோடீஸ்வரர் அப்பா. தனி அடையாளத்துடன் தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வாழ நினைக்கும் இளைய மகன் விஜய். அதனால் விஜய் தனது தந்தையின் ஆடம்பர சாம்ராஜ்யத்தை, தந்தை ஏற்பாடு செய்திருந்த அடுத்த வாரிசு போட்டி அறிவிப்பு குடும்ப விழாவில் நிராகரிக்கிறார். அதனால் கோபமடைந்த கோடீஸ்வரர் அப்பா மகன் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்,  அண்ணன் ஜெய் (ஸ்ரீகாந்த்) தம்பி அஜய்க்கு இடையில் வாரிசுக்கான போட்டியில் பிரச்சனை ஏற்படுகிறது. டாக்டர் நண்பர் பிரபு, ராஜேந்திரனுக்கு கேன்சர் நோய் இருப்பதை சொல்ல இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று டாக்டரிடம் கேட்டுக் கொள்கிறார். அப்பா, அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு அம்மா வற்புறுத்தலால் விஜய் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வருகிறார். அவர் இல்லாமல் அவரது குடும்பம் எவ்வளவு சிதைந்துள்ளது என்பதை அங்கு அவர் அறிந்து கொள்கிறார். மணவிழாவில் அண்ணன் ஜெய் (ஸ்ரீகாந்த்) தம்பி அஜய்க்கு இடையே கருத்து வேறுபாட்டால்  தந்தை அவமானம் அடைகிறார். அப்போது தான் இளைய மகன் விஜய் தனி அடையாளத்துடன் தன் உழைப்பால் உயாந்த செய்தியை செய்திதாளில் வந்த கட்டுரை பார்த்து தெரிந்து கொள்கிறார். குடும்ப விழா முடிந்ததும் விஜய் வீட்டை விட்டு வெளியேறும் போது தந்தை அவரை இங்கேயே தங்கும் படி கேட்கிறார். ஆனால் விஜய் வீட்டிலிருந்து புறப்படுகிறார். அப்பா சரத்குமார் கேன்சரால் பாதிப்படைந்திருப்பதை விஜய்யிடம் மட்டும் டாக்டர் சொல்ல மீண்டும் விஜய் வீட்டிற்கு திரும்புகிறார். அப்பாவுக்காக அவர்களது கம்பெனி நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறார் விஜய். அது பிடிக்காத அவரது அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டை விட்டு வெளியே போகிறார்கள். அதனால் குடும்பம் கலைகிறது. மறுபக்கம் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம் இருவரையும் வைத்து சரத்குமார் பிசினஸை அழிக்க நினைக்கிறார். அவற்றை அந்த சதியிலிருந்து விஜய் எப்படி சமாளித்தார்? பிரிந்த கூட்டுக் குடும்பத்தை மீண்டும் சேர்த்து தந்தையின் கனவுகளை மகன் விஜய் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜயின் நடிப்பில் புதுசா ஒன்றும் மாற்றம் இல்லை. வாரிசு படத்தில் டான்ஸ், சண்டைக் காட்சி, ரொமான்ஸ், ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என ஒன் மேன் ஷோவாக தனது வழக்கமான பாணியில் நடித்துள்ளார் விஜய்.

விஜய்யின் அப்பாவாக ஆர்.சரத்குமாருக்கு அப்பா-மகன் பந்தத்தில் பின் பாதியில் உணர்ச்சிகளைக் காட்டி கதையின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார்.

அதே போல ஜெயசுதா அம்மாவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை. சும்மா விஜய்யுடன் நானும் ஜோடியாக நடித்துள்ளேன் என்று மட்டுமே அவர் சொல்லிக் கொள்ளலாம். படத்தில் இயக்குனர் அவரை கவர்ச்சிக்காக பாடல் காட்சிகளில் பயன்படுத்தியுள்ளார். அவ்வளவு தான்.

பிரகாஷ் ராஜ் வில்லனாக எடுபடவில்லை.

டாக்டர் நண்பராக பிரபு ஓகே.

விஜய்யின் சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அளவுக்கு அவர்களது சரியான பங்களிப்பு இல்லை. குறிப்பாக ஷாம் டோட்டல் வேஸ்ட். அவரது நடிப்பு எந்த உணர்ச்சிகளையும் தூண்டவில்லை.

யோகி பாபு விஜய்க்கு ஈடு கொடுத்து பங்களிப்பை அளித்த நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகி உள்ளது. சதாராண கதைக்கு இவரது நகைச்சுவை அவர் தோன்றும் காட்சிகளில் கொஞ்சம் ரிலீப் தருகிறது.

சுமன், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேசன், பரத் ரெட்டி, சஞ்சனா, சதீஷ் கதையில் ஒரு சில எபிசோட்டில் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளனர்.

தமன் இசை, பிஜிஎம் மற்றும் பாடல்கள் சுமார் ரகமாகவே உள்ளன.

ஜானி, ஷோபி நடனத்தில் ஒன்றும் புதுமை இல்லை என்றாலும் விஜய் அந்த டான்ஸ் கம்போசிங்கிற்கு நியாயம் செய்துள்ளார்.

வீட்டை பிரம்மாண்டமான செட்டாக உருவாக்கயுள்ளார்கள்.

யுகாந்தரின் விஎப்எக்ஸ் சுமார்.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

எடிட்டர் பிரவீன் கே.எல் க்கு என்ன ஆச்சு. ஏறக்குறைய மூன்று மணி நேரப் படத்தை அளித்து சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது அவரது எடிட்டிங்.

குடும்ப கதைக்கு எற்றது போல ஆக்ஷன் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்துள்ளனர் ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின் மற்றும் திலிப் சுப்பராயன்.

ஏற்கனவே பார்த்து பழகிய கதை தான். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்ற பலவீனமான செய்தியை முன்வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி. முதல் பாதி சாதாரணமாக இருந்தாலும், இரண்டாம் பாதி பெரிய திரையில் சீரியல் பார்ப்பது போல உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு, ஷிரிஷ் சேர்ந்து தயாரித்துள்ள வாரிசு ஒன் மேன் ஷோவின் பெரிய திரை சீரியல்.