லில்லி ராணி விமர்சனம் : லில்லி ராணியை சிதைத்து விட்டனர் | ரேட்டிங்: 2/5

0
270

லில்லி ராணி விமர்சனம் : லில்லி ராணியை சிதைத்து விட்டனர் | ரேட்டிங்: 2/5

நடிகர்கள்: சாயா சிங் – ராணி,  ‘பேபி’ ராஃஅத் பாத்திமா – லில்லி, தம்பி ராமையா – சம்பவ மூர்த்தி,  துஷ்யந்த் – மைக்கேல், ஜெயப்பிரகாஷ் – மந்திரி அற்புதம்.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்: கிளாப்பின் சினிமாஸ் – செந்தில் கண்டியார்

இயக்குனர்: விஷ்ணு ராமகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: சிவ தர்ஷன்

இசை: ஜெர்வின் ஜோஷுவா

பின்னணி இசை சேரன்

படத்தொகுப்பு: பேஸ்வந்த் வெங்கடேஷ்

கலை: விஜய வீரன்

பாடலாசிரியர்: ஞானகரவேல்

மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீ வெங்கடேஷ்

ஒரு பாலியல் தொழிலாளி அரிதான மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை காப்பாற்ற ஒரு ஆணைத் தேடி செல்லும் ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது.

பாலியல் தொழிலாளியாக இருக்கும் பெண்ணுக்கு (சாய் சிங்) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு உடம்பில் ஒரு பிரச்சனை இருக்கிறது அந்த பிரச்சனையை தீர்க்க இந்த குழந்தையின் அப்பா வேண்டும் என்கிறார் மருத்துவர். இதனால் நாயகி குழந்தையின் அப்பாவை தேடுகிறாள். நீண்ட தேடுதலுக்கு பிறகு அப்பாவை கண்டுபிடிக்கிறார், அவர்தான் வயதான போலீஸ்காரர் சம்பவமூர்த்தி (தம்பி ராமையா). பிறகு தம்பி ராமையா ஒரு திட்டம் தீட்டுகிறார். அதே நாளில் நாயகி இன்னொருவருடன் இருந்திருக்க அவரிடம் பணம் பறிக்க திட்டம் போடுகிறார்இ கடைசியில் அந்த குழந்தைக்கு மருத்துவம் வழங்கப்பட்டதா? இல்லையா? தம்பி ராமையாவின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை

சம்பவ மூர்த்தியாக (தம்பி ராமையா) மற்றும் ராணியாக(சாயா சிங்) இருவரும் வழத்தியாசமான கதாபாத்திரத்தில் ஓவர் ஆக்டிங் என்றில்லாமல் எதர்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் (துஷ்யந்த்) நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரிக்கு கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். லில்லி (பேபி ராஃஅத் பாத்திமா) மற்றும் பலர் நடித்துள்ளனர். மந்திரி அற்புதமாக ஜெயபிரகாஷ் க்ளைமாக்ஸில் மட்டுமே தோன்றி ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கிறார்.

ஒளிப்பதிவு: சிவ தர்ஷன்இ இசை: ஜெர்வின் ஜோஷுவாஇ பின்னணி இசை சேரன்இ படத்தொகுப்பு: பேஸ்வந்த் வெங்கடேஷ்இ இவை அனைத்தும் ஓகே ரகம்.

இப்படம் ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை எமோஷனல் டிராமாவாக ஆரம்பித்து விறுவிறுப்பான த்ரில்லராக முடிக்க இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணனின் எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால் ஒரு சுவாரஸ்யமான கதையை சரியான திரைக்கதை அமைக்க தவறிவிட்டார் இயக்குனர்.

மொத்தத்தில் கிளாப்பின் சினிமாஸ் – செந்தில் கண்டியார் தயாரித்துள்ள லில்லி ராணியை சிதைத்து விட்டனர்.