யானை விமர்சனம்: மதம்(சாதி) பிடித்த  மனித சாதி வெறியை துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் நிறைந்த யானை | மதிப்பீடு: 3|5

0
550

யானை விமர்சனம்: மதம்(சாதி) பிடித்த  மனித சாதி வெறியை துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் நிறைந்த யானை | மதிப்பீடு: 3|5

ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரித்து அருண் விஜய், ராஜேஷ், ராதிகா சரத்குமார், பிரியாபவானி சங்கர், அம்மு அபிராமி , சமுத்திரக்கனி,  போஸ் வெங்கட், கேஜிஎஃப் ராமச்சந்திரா ராஜீ,ஆடுகளம் ஜெயபாலன், சஞ்சீவ், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யானை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி.
இசை  – ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கோபிநாத், கலை-மைக்கேல்,எடிட்டர்-ஆண்டனி, பாடல்கள்- சினேகன், ஏகாதேசி. அறிவு, சண்டை-அனல் அரசு, இணை இயக்குனர்-ஜான் ஆல்பர்ட், நடனம்-பாபா பாஸ்கர்,தினா, தயாரிப்பு நிர்வாகி- சின்னா ஆர். ராஜேந்;திரன், ஒப்பனை-முனியராஜ், உடை-ரங்கசாமி, நிவேதா ஜோசப், நீது, மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

பி.வி.ஆர் குடும்பம் ராமநாதபுரத்தில் பல தொழில்கள் செய்து வசதியுடன் வாழ்பவர்கள். மறைந்த முதல் தாரத்து மகன்கள் சமுத்திரகனி, போஸ் வெங்கட் மற்றும் சஞ்சீவ். இரண்டாவது தாரம் ராதிகாவின் மகன் அருண்விஜய். இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்தாலும், முதல் தாரத்து அண்ணன்கள் எப்பொழுதும் அருண் விஜய்யிடம் ஒத்து போகாமல் வாழ்கின்றனர். இதைப் பற்றி கவலைப்படாமல் அருண் விஜய் குடும்பத்தில் அனைவருடனும் பாசமாக இருக்கிறார். பி.வி.ஆர் குடும்பத்திற்கும் சமுத்திரம் குடும்பத்திற்கும் தொழிலில் தொடங்கும் பகை சிறை வரை செல்கிறது. சமுத்திரத்தின் (ஆடுகளம் ஜெயபாலன்) இரட்டை மகன்களில் ஒருவர் பகையால் இறக்க, மற்றொரு மகன் லிங்கம் (கேஜிஎஃப் ராமச்சந்திரா) ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருகிறார். லிங்கத்தின் ஒரே குறிக்கோள் பிவிஆர் குடும்பத்தை அழிப்பது என்பதை அறிந்து அருண் விஜய் சமாதானமாக போக முயற்சிக்கிறார். ஆனால் இதற்கு மற்ற அண்ணன்கள், மற்றும் சமுத்திரம், லிங்கமும் ஒத்து போகாமல் தடையாக இருக்கின்றனர். இதனிடையே சமுத்திரகனியின் மகள் அம்மு அபிராமி இஸ்லாமிய காதலனுடன் ஒடிப்போக, இதற்கு காதல் விஷயம் எல்லாம் தெரிந்த அருண் விஜய் தான் காரணம் என்று கருதி சாதி வெறி பிடித்த அண்ணன்கள் அருண்விஜய்யையும், தாய் ராதிகாவையும் தள்ளி வைக்கின்றனர்.  வீட்டை விட்டு வெளியேறும் அருண் விஜய் அம்மு அபிராமியை தேடி கண்டுபிடிக்க முனைப்புடன் இருக்க, அண்ணன்களோ அவளை கொல்ல ஏற்பாடு செய்கின்றனர். லிங்கம் ஒருபுறம் பிவிஆர் குடும்பத்தை அழிக்க பல சதிகளை செய்ய, அருண் விஜய் அம்முவை தேடி கண்டுபிடித்து. அண்ணன்களுக்கு வரும் ஆபத்தை தடுத்து, குடும்பத்தை எப்படி ஒற்றுமையாக அரவணைத்து காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

ரவிச்சந்திரனாக அருண்விஜய் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ஆபத்து வந்தால் அதிரும் புஜபலத்துடன் களமிறங்கி குடும்பத்திற்காக அதிரடி ஆக்ஸனில் மாஸ் காட்டி விறுவிறுப்புடன் படம் முழுவதும் ஒருவித எனர்ஜி பூஸ்டருடன் நடித்து பாசம் கலந்த முரட்டு இளைஞராக அதகளம் பண்ணியிருக்கிறார்.

மூத்த சகோதரர்களாக சமுத்திரக்கனி , போஸ் வெங்கட், சஞ்சீவ், தந்தையாக ராஜேஷ், தாயாக ராதிகா சரத்குமார், காதலியாக பிரியா பவானி சங்கர், ஆடுகளம் ஜெயபாலன், அம்மு அபிராமி, கே.ஜி.எஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, புகழ்ஆகியோர் இயல்பாக தங்கள் கதாபாத்திரங்களில் முத்திரை பதித்துள்ளனர். யோகி பாபுவின் நகைச்சுவையை விட சென்டிமெண்ட் நடிப்பு பரவாயில்லை.

ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்து முணுமுணுக்க வைத்துள்ளார். பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு கடல் சார்ந்த காட்சிகள், ராமநாதபுரத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சண்டை, துரத்தல் காட்சிகள் என்று விறுவிறுப்புடன் இயக்குனர் ஹரி எண்ணம் போல் பதிவு செய்துள்ளார்.

ஸ்டண்ட்  இயக்குனர் அனல் அரசு, ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

கூட்டு குடும்ப உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்க நினைக்கும் இளைஞன் பகை, சாதிவெறி, கடத்தல், கொலை ஆகியவற்றிலிருந்து குடும்பத்தை காப்பாற்றி காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்து அக்மார்க் டிரெண்டுடன் ஹரி இயக்கியுள்ளார். பரபரக்கும் சண்டை காட்சிகள், விறுவிறுப்பான காட்சி நகர்வுகளுடன் சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. இறுதியில் படம் முடிந்தும் கூட காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது போன்ற உணர்வை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரிப்பில் மதம்(சாதி) பிடித்த  மனித சாதி வெறியை துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் நிறைந்த யானை.