மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைவிமர்சனம்:  மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் OTT தளத்திற்கு ஏற்ற க்ரைம் த்ரில்லர் ​| ரேட்டிங்: 3/5

0
288

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைவிமர்சனம்:  மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் OTT தளத்திற்கு ஏற்ற க்ரைம் த்ரில்லர் ​| ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: வரலக்ஷ்மி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணியம் சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி மற்றும் சந்திராசட்
இசை: மணிகாந்த் கத்ரி
எடிட்டிங் : ப்ரீத்தி பாபு
ஸ்டண்ட் :  சேத்தன் டிசோசா
பாடல்கள் : தயால் பத்மநாபன்
இயக்குனர்: தயாள் பத்மநாபன்
தயாரிப்பாளர்: டி பிக்சர்ஸ் மற்றும் தயாள் பத்மநாபன்
ஸ்ட்ரீமிங் தளம்: ஆஹா தமிழ், பிஆர்ஒ-டிஒன், சுரேஷ்சந்திரா.

ஜெய் (மகத் ராகவேந்திரா) ஒரு நாள் இரவு வேலையில் இருந்து திரும்பும் போது அவரது காதலி சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சனாவிடம் இருந்து (வரலக்ஷ்மி சரத்குமார்) அழைப்பு வர, தனது பைக்கை ஒரு தொழிற்சாலை அருகில் நிறுத்தி அர்ச்சனாவிடம் பேசத் தொடங்கும் போது, ஒரு இளம் பெண்ணின் கைகள் சுவரின் வேலிக்கு மேல் அசைவதை அவர் கவனிக்கிறார், உதவிக்காக முறையிடுவது போல் தெரிய ஜெய் அழைப்பைத் துண்டித்து, வளாக சுவர் வழியே பார்க்கும் போது, ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்தி செல்வதை பார்க்கிறார். இதை யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு விரைகிறார்.அவர் ஸ்டேஷனை அடைந்ததும், இன்ஸ்பெக்டர் குருநாதன் (அமித் பார்கவ்) வெளியே நிற்பதைப் பார்க்கிறார். அவர் இன்ஸ்பெக்டரிடம் பிரச்சனையை விவரிக்கிறார், அவர் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறார். இருவரும் தொழிற்சாலையை அடைகின்றனர். அந்த இடம் கடத்தல் உட்பட பல குற்றங்களுக்களை செய்யும் பிரபல நில அபகரிப்பாளர் நாகாவின் (சுப்பிரமணியம் சிவா) தலைமையிடம். இருவரும் உள்ளே சென்றதும், இன்ஸ்பெக்டர் குருநாதனும் அந்த கும்பலை சேர்ந்தவன் என்பதை ஜெய் உணர்கிறான். ஜெய் தனது தொலைபேசியில் உள்ள வீடியோவின் கிளிப்பிங்கை அனாதை இல்லத்தில் ஒன்றாக வளர்ந்த நெருங்கிய நண்பர்களான காதலி அர்ச்சனா, பாலா (சந்தோஷ்) யாசர் மற்றும் விவேக் ராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி விடுகிறார். அன்று இரவே அந்த கும்பலால் ஜெய் கொலை செய்யப்படுகிறான். ஜெய்யை கொலை செய்தது நாகா மற்றும் இன்ஸ்பெக்டர் குருநாதன் என்பதை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சனா (வரலட்சுமி சரத்குமார்), பாலா (சந்தோஷ் பிரதாப்), யாசர் மற்றும் விவேக் ராஜகோபால், தங்களது நண்பனின் இறப்பிற்கு பழிவாங்க திட்டமிடுகின்றனர். இவர்களின் திட்டத்தை நிறைவேற்ற, சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சனா கொலை சம்பவம் நடந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேனுக்கு மாற்றலாகி வருகிறாள். குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும் புகார்தாரர்களாகவும் அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக காவல் நிலையத்திற்கு வருகிறார்கள். அவர்களின் திட்டம் முதலில் இன்ஸ்பெக்டரை (அமித் பார்கவ்) கொல்லுவது தான். திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் போது ரவுடி நாகா (சுப்பிரமணியம் சிவா) இன்ஸ்பெக்டர் குருநாதனை சந்திக்க வருகிறார்.  இதனால் தங்களுடைய திட்டத்தை நிறுத்தும்படி அர்ச்சனா கண்ஜாடை மற்றும் குறுஞ்செய்தி மூலம் மற்ற நண்பர்களுக்கு தெரிவிக்கிறார். இந்நிலையில், இன்ஸ்பெக்டருடன் நாகா உரையாடும் போது மின்சாரம் தடைபடுகிறது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் குருநாதன் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அவருக்கு முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நாகாவும் கொல்லப்படுகிறார். தாங்கள் செயல்படுத்த நினைத்த இந்த கொலை திட்டம் போல், சம்பவம் நடந்ததை கண்டு அதிர்ச்சியில் நண்பர்கள் உறைகின்றனர். அதைச் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஏசிபி நெடுஞ்செழியன் (ஆரவ்) மேற்பார்வையில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை வேட்டை தொடங்குகிறது.இந்த சம்பவத்தை செய்தது யார்? ஏசிபி நெடுஞ்செழியன் குற்றவாளியை கண்டு பிடித்தாரா? இந்த கேள்விகளுக்கான விடையை பல திருப்பங்களுடன் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் பதில் அளிக்கிறது.

வரலக்ஷ்மி சரத்குமார், மஹத் ராகவேந்திரா, சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால், மற்றும் அமித் பார்கவ், ஆகியோர் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
திரைக்கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறிது நேரம் தோன்றினாலும் கொல்லப்படும் அப்பாவி இளைஞராக மஹத் சிறப்பாக நடித்துள்ளார்.

தாதா நாகாவாக சுப்ரமணியம் சிவா வந்தார் அசால்டா நடித்து மக்கள் மனதை வென்றார்.

ஏசிபி நெடுஞ்செழியனாக ஆரவ் தோன்றும் போது, கதையில் சூடு பிடிக்கிறது. கம்பீரமான போலீஸ் உடுப்பில் அச்சுறுத்தும், கண்டிப்பான, மற்றும் வசீகரம் தோற்றம். உடல் மொழி, குறிப்பாக அவருடைய கண்கள் மூலமே சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் ஆரவ்.

மற்றும் யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி மற்றும் சந்திராசட் திரைக்கதை நகர்விற்கு பலம் சோர்த்துள்ளனர்.

சேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை மற்றும் ப்ரீத்தி பாபுவின் படத்தொகுப்பு திரைக்கதை நகர்வுக்கு உதவியுள்ளது இவர்களது தொழில்நுட்ப பங்களிப்பு.

தயாள் பத்மநாபன் எழுதி இயக்கிய மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் பல பில்டப் திருப்பங்கள் நிறைந்த கொலை த்ரில்லர். கதை மிகவும் எளிமையானது. இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் டி பிக்சர்ஸ் மற்றும் தயாள் பத்மநாபன் தயாரித்துள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் OTT தளத்திற்கு ஏற்ற க்ரைம் த்ரில்லர்.