மாமனிதன் விமர்சனம் : மாமனிதன் மனசாட்சிக்கு பயந்து ஒடும் மனிதனின் தொலைந்த யதார்த்தமான வாழ்க்கை பயணம் | ரேட்டிங் 3/5

0
201

மாமனிதன் விமர்சனம் : மாமனிதன் மனசாட்சிக்கு பயந்து ஒடும் மனிதனின் தொலைந்த யதார்த்தமான வாழ்க்கை பயணம் | ரேட்டிங் 3/5

ஒய்எஸ்ஆர் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் வெளியீட்டில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் நடித்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. இசை-இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சுகுமார், பிஆர்ஒ-நிகில்

ஆட்டேர் ஒட்டுனராக நன்மதிப்புடன் மனைவி குழந்தைகளுடன் பண்ணைபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. குழந்தைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க பணம் சம்பாதிக்க நினைத்து நிலஅதிபரிடம் புரோக்கராக இருந்து மக்களிடம் பத்து லட்சத்தை வாங்கி கொடுக்கிறார். நிலஅதிபர் அந்த பணத்துடன் தலைமறைவாகி விட ஊர் மக்கள் பணத்தை கேட்டு வீட்டிற்கு வரஇ விஜய் சேதுபதி இவர்களிடமிருந்தும்இ போலீசிடமிருந்தும் தப்பித்து ஊரை விட்டே ஒடி விடுகிறார். அதன் பின் நிலஅதிபரை தேடி கேரளா செல்லஇ அங்கேயும் ஏமாற்றமடையும் விஜய் சேதுபதி வேலையில் சேர்கிறார். மனைவிஇ குழந்தைகளை விட்டு விட்டு வந்த சோகம் ஒருபுறம்இ பணம் கிடைக்காமல் ஊருக்கு திரும்ப முடியாத நிலை மறுபுறம், இறுதியில் விஜய் சேதுபதி என்ன ஆனார்? குடும்பத்துடன் சேர்ந்தாரா? பட்ட கடனை அடைத்தாரா? என்பதே கதையின் முடிவு.

விஜய் சேதுபதி எப்பொழுதும் போல் அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி, ஆதாங்கத்தையும், இயலாமையையும் சிறப்பாக முக பாவங்களில் கொண்டு வந்து சந்தோஷ வாழ்க்கையை இழந்து வாடும் மனிதராக இறுதியில் காசியில் போடும் ஆட்டம் வரை தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

இவருடன் காதல் மனைவியாக சோகமான கதாபாத்திரத்தில் காயத்ரி, நண்பராக குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இசை படத்திற்கு ப்ளஸ்.

சுகுமாரின் ஒளிப்பதிவு பண்ணைபுரத்து கிராமத்தை அச்சு அசலாக கொடுத்து, கேரளா அழகையும், காசியில் நடக்கும் சம்பவங்களையும்இ ஆட்டம் பாட்டங்களையும் வர்ணஜாலமாக கொடுத்து அசத்தியுள்ளார்.

குடும்பத்தை நேசிக்கும் எளிய மனிதன் குடும்பத்திற்காக பயணித்து உழைத்து மாமனிதானாக வெளிப்படுவதை யதார்த்தமாக திரைக்கதையின் மூலம் இயல்பான சம்பவங்களையும்இ கிராமத்து வாழ்வியலையும் ஒருங்கிணைத்து உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.  ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாந்தவர்களுக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் நிலையை அப்பட்டமாக சொல்லிஇ இவர்களின் வாழ்க்கையும் பரிதாபத்துகுரியது,  அவர்களின் குடும்ப நிலையும் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாறுவதை திறம்பட கையாண்டு சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

மொத்தத்தில் ஒய்எஸ்ஆர் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் வெளியீட்டில் மாமனிதன்  மனசாட்சிக்கு பயந்து ஒடும் மனிதனின் தொலைந்த யதார்த்தமான வாழ்க்கை பயணம்.