மஞ்சக்குருவி விமர்சனம்: மஞ்சக்குருவி சுமார் ரகம் | ரேட்டிங்: 2/5

0
177

மஞ்சக்குருவி விமர்சனம்: மஞ்சக்குருவி சுமார் ரகம் | ரேட்டிங்: 2/5

வி. ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் படம் மஞ்சக்குருவி.
மஞ்சக்குருவியில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன் கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன்சின்னத்தம்பி.

கதை சுருக்கம்
குணா. இந்த பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. கும்பகோணத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் வாழ்பவன் ரவுடி குணா. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலைநடுங்கும். ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு நந்தினி என்ற ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வருகிறாள். அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்து வருகி்னறனர். அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறான். தங்கைக்கு அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை. ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை அண்ணன் குணாவை ரவுடியிசத்தை விட்டு விட சொல்கிறார். அண்ணன் ஆள் கடத்தலில் தன் பள்ளி நண்பனை கொலை செய்ததால் அண்ணன் மீது தங்கை வெறுப்படைய செய்ய அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் முடியவில்லை. தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்குகிறான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வர தன்னுடைய அண்ணனின் கொலைவெறியையும் யாரையும் காதலிக்கமாட்டேன் என்று நந்தினி அண்ணனின் ரவுடியிசத்தை பற்றி கதிரிடம் கூறுகிறாள். காதலிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை நந்தினியை அவள் குணாவிடம் சேர்த்து வைக்க கதிர் ஆசைபடுகிறான். அதனால் குணாவிடம் கொஞ்ச கொஞ்சமாக மனித வாழ்வியலை உணரவைக்கிறான். முடிவில் குணா தங்கைக்காக ரவுடியிசத்தை கைவிட்டு போலிசில் சரணடைய வருகிறார். குணாவின் பரம எதிரி சங்கிலி வாத்தியார் கொலை செய்ய முற்படுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது? அண்ணன் தங்கை ஒன்று சேர்ந்தார்களா? கதிர் காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதி கதை.ரவுடி குணாவாக கிஷோர், காதலன் கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா, கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் அவரவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

வில்லன் பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் கம்பீரத்தை காட்ட முயற்சித்துள்ளார்.தொழில் நுட்பம் பெருத்தவரை சௌந்தர்யன் இசை, ஆர்.வேல் ஒளிப்பதிவு, ராஜா முகமது எடிட்டிங், மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள், கே.எம்.நந்தகுமார் கலை ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதையுடன் கடுகளவில் தான் பயணிக்கிறது. அதனால் தொழில் நுட்பத்தை பற்றி பெரிதாக சொல்ல இயலவில்லை.

அண்ணன் தங்கை கதையில் ரவுடி, காதல், கொலைகள், ரவுடிக்குள் ரவுடி, பழிதீர்க்க நினைக்கும் ரவுடி. இவை அனைத்தும் ஏற்கனவே பல கதைகள் வந்துவிட்டது. மஞ்சகுருவியில்  புதியதாக ஒன்றும் இல்லை. எல்லோரும் சுலபமாக யூகிக்கக்கூடிய விறுவிறுப்பு இல்லாத க்ளைமேக்ஸ் புகுத்தி பலவீனமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் அரங்கன்சின்னத்தம்பி.


மொத்தத்தில் வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் மஞ்சக்குருவி சுமார் ரகம்.