பியூட்டி விமர்சனம்: பியூட்டி காதலின் ஆழத்தையும், ஆபத்தையும் ஒருசேர புரிய வைத்து அகஅழகை உணர செய்யும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
216

பியூட்டி விமர்சனம்: பியூட்டி காதலின் ஆழத்தையும், ஆபத்தையும் ஒருசேர புரிய வைத்து அகஅழகை உணர செய்யும் படம் | ரேட்டிங்: 2.5/5

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரிப்பில் ரிஷி,  கரீனா , காயா கபூர், ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா. இப்படத்தில் ஒளிப்பதிவு- தயாரிப்பாளர் ஆர்.தீபக் குமார், இசை -இலக்கியன், பாடல்கள்-வெ.இறையன்பு, தமிழ் முருகன், எடிட்டிங்-சங்கர்.கே, நடனம்-கூல் ஜெயந்த், சண்டை- ஃபயர் கார்த்திக், கலை-ரவிவர்மா, பிஆர்ஒ- கிளாமர் சத்யா.

அழகில்லாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் வங்கியில் வேலை செய்யும் ரிஷி. தீ விபத்தில் முகம் பாதித்த பெண் கரீனா ஷாவை பார்;த்தவுடன் பிடித்து போக, காதலிக்க தொடங்குகிறார். சில மாதங்கள் சென்றவுடன் கரீனா தன் முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார். ரிஷிக்கு இந்த விஷயம் தெரிய வர, அதிர்ச்சியாகி கரீனாவின் முகத்தை பழையபடி பாதிப்பு உள்ளாக்க திட்டம் போடுகிறார். ரிஷி ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்? காரணம் என்ன? கரீனா ரிஷியிடமிருந்து தப்பித்தாரா? யார் காப்பாற்றினார்கள்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கதையின் நாயகனாக ரிஷி  தந்தை, மகன் என்ற இரு வேடங்களில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், முதலில் அவருடைய கதாபாத்திரம் குழப்பமானதாக காட்டி, பின்னர் அவரின் கடந்த கால பாதிப்பால் ஏற்பட்ட காயத்தை  மறக்க முடியாமல் தவிக்கும் இளைஞராக திருந்தி மனமாற்றம் ஏற்படும் கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். நடனம், ஆக்ஷன் காட்சிகளில் கச்சிதம்.

அழகான காதலியாக  கரீனா படம் முழுவதும் வருகிறார் மற்றும் காயா கபூர், ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  தடம் பதித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- தயாரிப்பாளர் ஆர்.தீபக் குமார், இசை -இலக்கியன், பாடல்கள்-வெ.இறையன்பு, தமிழ் முருகன், எடிட்டிங்-சங்கர்.கே, நடனம்-கூல் ஜெயந்த், சண்டை- ஃபயர் கார்த்திக், கலை-ரவிவர்மா ஆகியோர் படத்திற்குகேற்ற உழைப்பை கொடுத்து விறுவிறுப்பாக்கியுள்ளனர்.

சித்தியால் ஏற்பட்ட ஆறாத தழுப்பு வளர்ந்த பிறகும் வெறுப்பாக உருவாகி, அழகு ஆபத்து என்பதை ஆழமாக பதிந்து விட, அதிலிருந்து காதலனை மீட்டெடுக்க உயிரையே தியாகம் செய்ய துணியும் காதலியின் முடிவால் திருப்பம் ஏற்படுத்தும் திரைக்கதையாக்கி சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் கோ.ஆனந்த் சிவா.

மொத்தத்தில்  ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்திருக்கும் பியூட்டி காதலின் ஆழத்தையும், ஆபத்தையும் ஒருசேர புரிய வைத்து அகஅழகை உணர செய்யும் படம்.