பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ ஒரு முறை பார்க்கலாம்

0
492

பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ ஒரு முறை பார்க்கலாம்

அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’. இதில் நடிகர்கள் நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மும்பை மொடலிங் மங்கை காயத்ரி ஐயர், ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (AIM).

மாறன் (விவேக் பிரசன்னா) ஒரு நிறுவனத்தின் தலைவரும் யாமினி (காயத்ரி ஐயர்) என்ற பிரபலமான நடிகையின் கணவர் ஆவார். மாறனின் நிறுவனம் ஊழலில் சிக்கியுள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகிறது. இந்த ஊழலில் இருந்து மாறனை காப்பாற்றுவதாக யாமினி கூறுகிறாள். இந்த விஷயம் முடியும் வரை மாறனை வெளியில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக தங்கும் படி ஏற்பாடு செய்கிறார் யாமினி. மனைவி மீது மிகுந்த அன்பு கொண்ட மாறன், தனது மனைவியை நம்புகிறார், எனவே அவர் சொன்னதைச் செய்கிறார். யாமினி தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாக ஊடகங்களுக்கு பொய் சொல்கிறாள்.  மாறன் தங்கியிருக்கும் அந்த ஊரில் சின்ன சின்ன திருட்டு மற்றும், அடிதடிகள் செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்ட் ஆதி (நிஷாந்த் ரூசோ). போலீசுக்கு பெட்டி கேஸ் போட்டு கேசை முடிக்க ஆள் தேவைப்படும் போது ஆதியை பயன் படுத்துவார்கள். மாறனை அவரது மனைவியால் ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டி ஒரு காட்டில் அமைந்துள்ள தோட்டத்திற்கு மாறனை அழைத்துச் செல்கிறார். அப்போது ஒரு கும்பலால் மாறன் தாக்கப்படுகிறார். கொலையாளிகள் அவர் இறந்துவிட்டதாக திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில் ஆதி ஒரு நாள் காவல் நிலையத்தில் கையெழுத்து போட அங்கு இருக்கும்  சமயத்தில், மிளகு காட்டில் யாரையோ கொலை செய்து போட்டிருப்பதாக போலீசிற்கு தொலைபேசியில் தகவல் வருகிறது. அந்த இடத்திற்கு வழி காட்டச் சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியுடன் செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும் வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு ஆதியிடம் கூறுகிறார் போலீஸ் அதிகாரி போஸ். அங்கே கிடப்பது மாறன் என்று ஆதிக்கும் கோலீஸ்க்கும் தெரியாது. அந்த நேரத்தில் மாறனுக்கு உயிர் இருப்பது ஆதிக்கு தெரிய வருகிறது. மாறன் ஆதியிடம் தன்னை பெ;படியாவது காப்பாற்றும் மாறும் கேட்கிறார். ஒரு திருப்பத்தில், ஆதி மாறனை காப்பாற்ற வருகிறார். மாறன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கொலையாளிகளுக்கு தெரிந்து, பாதியாக முடிக்கப்பட்ட வேலையை முடித்து வைக்க மறபடியும் அந்த இடத்திற்கு திரும்புகிறார்கள் கொலையாளிகள். ஆங்கே மாறனை கொல்ல ஆளை அனுப்பியது யார்? எதற்காக கொலை செய்ய முயற்சி நடந்தது? கொலையாளிகளை தடுத்து நிறுத்தி மாறனைக் காப்பாற்றினாரா ஆதி? என்கிற கேள்விகளுக்கு பருந்தாகுது ஒரு குருவி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நாயகன் நிஷாந்த் ரூசோ சிறப்பான நடிப்பை வழங்கியுள் ளார்.  காட்டு பகுதியில் விவேக் பிரசன்னாவை முதுகில் சுமந்து நடக்கும் காட்சிகளை பார்க்கும் போது அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. அடுத்தடுத்த படங்களில் அவர் நடிப்பில் மேலும் மெருகேற்றி ஜொலிப்பார் என்பது உறுதி. வாழ்த்துக்கள் நிஷாந்த்.

விவேக் பிரசன்னா கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார்.

மும்பை மொடலிங் மங்கை காயத்ரி ஐயர், ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்கள்.

காட்டை அழகாக படம் பிடித்த அஸ்வினின் ஒளிப்பதிவும், ரஞ்சித் உன்னியின் பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

த்ரில்லர் கதையை கையாளும் போது கண்டிப்பாக தெளிவான திரைக்கதையும் காட்சியமைப்பும் மிகமிக அவசியமானது. இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் நிச்சயம் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘பருந்தாகுது ஊர் குருவி’ ஒரு முறை பார்க்கலாம்.