பபூன் விமர்சனம் : அரசியல் சதியாட்டத்தில் சிக்கி தவிக்கும் அப்பாவி இளைஞர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் த்ரில்லிங் அனுபவத்தை இறுதியில் கொடுக்கும் | ரேட்டிங்: 3/5

0
338

பபூன் விமர்சனம் : அரசியல் சதியாட்டத்தில் சிக்கி தவிக்கும் அப்பாவி இளைஞர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் த்ரில்லிங் அனுபவத்தை இறுதியில் கொடுக்கும் | ரேட்டிங்: 3/5

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பபூன் படத்தை இயக்கியிருக்கிறார் அசோக் வீரப்பன்.

இதில் வைபவ், அனகா, ஆத்தங்குடி இளையராஜா, ஜோஜோ ஜார்ஜ், ஆடுகளம் நரேன், தமிழரன், ஆடுகளம் ;ஜெயபாலன், மூணார் ரமேஷ், மதுரை விஸ்வநாதன், ராஜ்குமார், குமார் கணகப்பன், கஜராஜ், சிந்தார், சங்கிலி சக்தி, சிவபாண்டி, சௌந்தர்யா, உமா மகேஷ்வரி, சரண்யா ரவிச்சந்திரன், தங்கம், சுபாஷ், பழனி, வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-தினேஷ் புருஷோத்தமன், இசை-சந்தோஷ் நாராயணன், கலை-குமார் கணகப்பன், எடிட்டிங்-வெற்றி கிருஷ்ணன், சண்டை-விக்கிநந்தகோபால். தினேஷ் சுப்பராயன், நடனம்-ஷேரிஃப், உடை-தினேஷ் மனோகரன், தயாரிப்பு மேற்பார்வை- சேதுராமலிங்கம், ஒப்பனை- பாலாஜி, தயாரிப்பு ஒறுங்கிணைப்பாளர்-ராஜ்குமார், மதன், தயாரிப்பு நிர்வாகி-அசோக் நாராயணன், துணை தயாரிப்பு-பவன் நரேந்திரா, இணை தயாரிப்பு-சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், பிஆர்ஒ-நிகில்.

தென் மாவட்ட கடலோர பகுதி அரசியல்வாதியும் செல்வாக்கு நிறைந்த ரங்கராஜன்(ஆடுகளம் நரேன்) தன் கட்சியின் முதல்வரிடம் (ஆடுகளம் ஜெயபாலன்) விரிசல் ஏற்பட்டு வேறு கட்சிக்கு செல்ல திட்டமிடுகிறார். இதனை கண்டிக்கும் ஜெயபாலன், ரங்கராஜனுக்கு எதிராக அதிகாரத்தை வைத்து அவருக்கு வலது கரமாக இருக்கும் தாதா தனபாலை பகடைக் காயாக வைக்க திட்டமிடுகிறார். இதனிடையே கூத்துப்பட்டறை நாடகக் கலைஞரான குமரன்(வைபவ்) மற்றும் அவரது நண்பர் முத்தையா (ஆத்தங்குடி இளையராஜா) ஆகியோர் தங்கள் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கஷ்டப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய பணம் சேர்க்க தாதாவின் அடியாள் அன்சாரி(ராஜ்குமார்) சிபாரிசு செய்ய லாரி டிரைவராக சேர்கிறார்கள். முதல் நாளே இவர்கள் ஒட்டி சென்ற லாரியில் போதைப் பொருட்கள் இருக்க, காவல்துறையிடம் மாட்டிக் கொள்கின்றனர். அதே சமயம் பிடிபட்ட போதைப் பொருளை தாதா தனபால் அடியாட்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அடிதடி செய்து எடுத்துச் சென்று விடுகிறார். இவர்கள் போதைப் பொருட்கள் கடத்தும் தனபாலனின் ஆட்கள் என்று முத்திரை குத்தி எஸ்.ஐ.ஹரிதாஸ் (தமிழரசன்) பழி போட பார்க்க, போலீஸ் வண்டியிலிருந்து குமரனும், முத்தையாவும் தப்பித்து ஒடுகின்றனர். அதன் பின் தன் காதலி இலங்கை தமிழரான அனாகாவின் உதவியுடன் குமரனும், முத்தையாவும் படகில் தப்பித்து வெளிநாடு செல்ல திட்டமிட்டு கேரளாவிற்கு செல்கின்றனர். அங்கே கள்ளத்தனமாக படகில் செல்லும் போது கடலோர காவல் படையிடம் சிக்க, கடலில் குதித்து தப்பித்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகிறார் குமரன். அன்சாரியிடம் மீண்டும் சென்று உதவி கேட்க அவரும் தாதா தனபால் ஊரில் தங்க வைக்கிறார். ரங்கராஜனின் வலது கையாக இருக்கும் தனபாலை தனக்கு எதிராக சதி செய்வதாக நினைத்து அவரை போட்டுத்தள்ள ரங்கராஜன் ஆட்களை அனுப்புகிறார். எஸ்.ஐ. ஹரிதாசும் தாதா தனபாலை பிடிக்க வியூகம் அமைக்கிறார். அதே சமயம் போதைப் பொருள் வழக்கில் சிக்க விட்டு தன்னை ஒட விட்ட தனபாலை கொல்ல வைபவும் களமிறங்குகிறார். பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த தாதா தனபால் திட்டம் போட, அந்த திட்டத்தை அறிந்து ரங்கராஜன் ஆட்கள், போலீஸ் படைகள், வைபவ் ஆகியோர் அந்த இடத்திற்கு வருகின்றனர். இறுதியில் தாதா தனபால் யாரிடம் சிக்கினார்? வைபவ் நிரபராதி என்பதை நிரூபித்து தண்டனையிலிருந்து தப்பித்தாரா? வைபவ் தன் பழைய வாழக்கைக்கு திரும்பினாரா? யார் சிக்கினார்கள்? யார் தப்பித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

வைபவ் நாடக கூத்துக் கலைஞராக பன்முக நடிப்பை வசனத்துடன் ஆட்டம், பாட்டத்துடன் கலகலப்பாக செய்துள்ளார். அதே சமயம் அப்பாவியான தன்னை போதைப் பொருள் கடத்தலில் மாட்டிக் கொண்ட பிறகு படும் அவஸ்தைகளும், அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும், அத்தனையும் வீணாகி போக போலீஸ், அரசியல்வாதி, தாதா ஆகியோரிடம் இருந்து தப்பிக்கவும், நிரபராதி என்று நிரூபிக்க திட்டம் போடுவது என்று ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக செல்வதற்கு பெரு உதவி செய்துள்ளார். பாராட்டுக்கள்.

நண்பராக ஆத்தங்குடி இளையராஜா சிறப்பான தேர்வு, நடை, உடை, பாவனை என்று தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். படத்தில் காமெடி குறையை சில இடங்களில் தீர்;த்து வைத்து படத்திற்கு பலமாக இருந்து முத்திரை பதித்துள்ளார்.

தாதா தனபால் கதாபாத்திரத்தில் ஜோஜோ ஜார்ஜ் சில காட்சிகள் மட்டும் வந்து போனாலும், கதைக்களம் இவரைச் சுற்றியே பின்னப்பட்டு பெரிய பில்டப்புடன் வலம் வருகிறார். சாந்தமான முகத்துடன், அழுத்தமான வசனம் பேசி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். தனபால் யார் என்று முதலிலேயே நமக்கு காட்டி விட்டாலும், மற்றவர்களுக்கு அவர் யார் என்ற தேடுதல் வேட்டையை இறுதி வரை வைத்திருப்பது படத்தின் முக்கிய அம்சம்.

பாதி படத்தில் வந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தமிழ் பெண்ணாக அனகா கச்சிதம்.

அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக தமிழரன், முதல்வராக ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ், மதுரை விஸ்வநாதன், ராஜ்குமார், குமார் கணகப்பன், கஜராஜ், சிந்தார், சங்கிலி சக்தி, சிவபாண்டி, சௌந்தர்யா, உமா மகேஷ்வரி, சரண்யா ரவிச்சந்திரன், தங்கம், சுபாஷ், பழனி, வேலுசாமி மற்றும் பலர் படத்தின் தூண்களாக இருந்து முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

தென் கடலோர பகுதிகளையும், மீனவ வாழ்க்கையும், கூத்துக் கலைஞர்களின் நாடக அரங்கேற்றம், ஒப்பனை, படகு சவாரி, இலங்கை அகதிகளின் பரிதாப நிலை, துரத்தல் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள், தீவில் நடக்கும் சண்டை, போதைப் பொருள் கடத்தல் என்று காட்சிக் கோணங்களில் நம்பகத்தன்மையோடு படமாக்கி தந்துள்ளார் தினேஷ் புருஷோத்தமன்.

சந்தோஷ் நாராயணன் கிராமத்து பாடல்கள், கூத்துப் பட்டரை வாத்தியங்கள் என்று இசையில் அதகளம் பண்ணியுள்ளார். பின்னணி இசையும் குறிப்பிடத்த வகையில் அமைந்துள்ளது.

எடிட்டிங்-வெற்றி கிருஷ்ணன் விறுவிறுப்பை படம் முழுவதும் கொடுத்துள்ளார்.

கலை-குமார் கணகப்பன், சண்டை-விக்கி நந்தகோபால், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் படத்திற்கேற்றவாறு கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

இரண்டு கூத்துக் கலைஞர்கள் அரசியல் அதிகார விளையாட்டில் கைக்குழந்தைகளாக மாறி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட போலீஸ் வேட்டையை அவர்கள் எவ்வளவு காலம் தவிர்க்க முடியும்? என்பதை திரைக்கதையுடன் அசத்தலாக கொடுத்துள்ளார் இயக்குனர் அசோக் வீரப்பன். தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள், குண்டர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பைப் படம்பிடிக்கும் ஒரு திடமான த்ரில்லர். குமரனுக்கும் இளையாளுக்கும் இடையிலான காதல் ட்ராக் மட்டுமே நம்பத்தகுந்ததாக இல்லை. சதித்திட்டத்தின் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகித்தாலும், அதை சிறப்பாக எழுதியிருக்க வேண்டும்.

இயக்குனர் அசோக் வீரப்பன் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். பிரச்சனை என்னவென்றால், காட்டப்படாத நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இலங்கை அகதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிலை போன்ற பல பிரச்சினைகளைப் பற்றி அவர் பேச முயன்று அவர் விவாதிக்க முயற்சிக்கும் தலைப்புகள் குறிப்பிடத்தக்கவை என்றாலும் – படத்தில் பல்வேறு காட்சிகள்; வந்து போவதால் இயக்குனர் அவர் சொல்ல விரும்பிய முக்கிய யோசனையில் தடுமாறிவிட்டதாக உணர செய்து விடுகிறார். தேவையற்ற காட்சிகள் இல்லாமல் முக்கிய விஷயத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தால் பஃபூன் ஒரு சிறந்த த்ரில்லராக இன்னும் சிறப்புடன் தடம் பதித்திருக்கும்.

மேலும், முதல் பாதியில் பல காட்சிகள் இடைநிறுத்தப்படாமல் எடிட் செய்யப்பட்டு, இரண்டு மணி நேர டிரெய்லரை உருவாக்க முயற்சிப்பது போல் உள்ளதால் நம்மை திரையில் பதற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. மற்றபடி, கூத்துப் பட்டரை கலைஞர்கள், போலீஸ், போதைப்பொருள் மாஃபியா மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையேயான தொடர்பைச் சித்தரிக்கும் நல்ல த்ரில்லர்.கதையும் அமைப்பும் நம்பும்படியாக இருக்கிறது ஆக்‌ஷன் காட்சிகளும் தேர்வில் தேர்ச்சி பெற போதுமானவை. குறிப்பாக க்ளைமாக்ஸில் படம் தனிமைப்படுத்தப்பட்ட தீவுக்குச் செல்லும் போது அனைத்து வெவ்வேறு குழுக்களும் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிடும் போது அற்புதமாக செய்துள்ளார் இயக்குனர் அசோக் வீரப்பன்.

மொத்தத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பபூன் அரசியல் சதியாட்டத்தில் சிக்கி தவிக்கும் அப்பாவி இளைஞர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் த்ரில்லிங் அனுபவத்தை இறுதியில் கொடுக்கும்.