பனாரஸ் விமர்சனம்: டைம் டிராவலிங் மற்றும் டைம் லூப் திரைப்படங்களை விரும்புவோருக்கு, ‘பனாரஸ்’ ஈர்க்கக்கூடியதாகவும் மாயாஜாலத்துடன் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும் | ரேட்டிங்: 3/5

0
270

பனாரஸ் விமர்சனம்: டைம் டிராவலிங் மற்றும் டைம் லூப் திரைப்படங்களை விரும்புவோருக்கு, ‘பனாரஸ்’ ஈர்க்கக்கூடியதாகவும் மாயாஜாலத்துடன் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :

ஜையீத் கான் – சித்தார்த் சிம்ஹா

சோனல் மோன்டோரியோ – தனி

சுஜய் சாஸ்திரி – ஸாம்பு

அச்யுத் குமார் – நாராயண் சாஸ்திரி

பரக்கத் அலி – பீட்டர் ஜாக்சன்

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து – இயக்கம்: ஜெயதீர்த்தா

ஒளிப்பதிவு : அத்வைதா குருமூர்த்தி

படத்தொகுப்பு: கே. எம். பிரகாஷ்

இசை : பி. அஜனீஷ் லோக்நாத்

தயாரிப்பு நிறுவனம் : என் கே புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள் : திலகராஜ் பல்லால் மற்றும் முஸ்ஸாமில் அஹமத் கான்

தமிழ்நாடு வெளியீடு : பி. சக்திவேலன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

சித் (ஜையீத் கான்) ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த குறும்புக்கார பையன். சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் பாசமிகு அரவணைப்பில் வளர்பவன்.பெற்றோரை இழந்து, மாமாவிடம் அடைக்கலமாக இருக்கும் தனி (சோனல்) ஒரு நல்ல பாடகியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.நண்பர்களுடன் ஒரு சவாலுக்காக, அவர் தனியை டைம் டிராவில் இருப்பது போல் சிக்க வைக்கிறார். அந்த பொய்யுடன், சித் செய்த ஒரு செயலுக்காக நிறைய அவமானங்களைச் சந்தித்து தனி பனாரஸ{க்கு செல்கிறார். அவளிடம் மன்னிப்பு கேட்க அங்கு செல்லும் சித்துக்கு ‘பனாரஸ்’ படத்தில் சில விசித்திரமான அனுபவங்களை கொடுக்க தற்செயலாக நேர வளையத்தில் சிக்கிக் கொள்கிறார்.இதற்கு என்ன காரணம்? இருவரும் சந்தித்து காதலிக்க தொடங்கினார்களா? அந்த டைம் லூப்பில் அவர் சிக்கியதற்கான உண்மையான காரணம் என்ன? இதற்கான விடையை  தெரிந்து கொள்ள தியேட்டரில் படம் பார்க்க வேண்டும்.

புதுமுகம் ஜையீத் கான் தனது முதல் படத்திலேயே நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நடனம், சண்டைக்காட்சிகளில் சிறந்து விளங்கி நடிப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். நடிப்பை சீரியஸாக எடுத்துக் கொண்டால், ஜையீத் கானுக்கு திரையுலகில் நிச்சயம் எதிர்காலம் இருக்கிறது.

பக்கத்து வீட்டுப் பெண்ணை உணர்த்தும் சோனல் மான்டிரோ ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகாகவும் இயற்கையான நேர்த்தியையும் வெளிப்படுத்துகிறார், மேலும ஜையீத் கான் உடனான அவரது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அப்பாவாக வரும் தேவ்ராஜ், அச்யுத் குமார், ஆகியோர் வழக்கம் போல் தங்கள் தொழில்முறை மற்றும் முதிர்ந்த நடிப்பால் படத்தை அழகுபடுத்துகிறார்கள். நடிகர் சுஜய் சாஸ்திரி ஷம்பு என்ற முக்கிய கதாபாத்திரத்தில் புகைப்பட கலைஞராக நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி ஜெயதீர்த்தாவின் கற்பனைக்கு கேமரா லென்ஸின் கூரான கண் மூலம் உயிர் கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார்.

அஞ்சீஷ் லோகநாத்தின் இசை மற்றும் பின்னணி இசை, குறிப்பாக மாய கங்கா பாடல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஜானர் படங்களை எடுப்பது ஜெயதீர்த்தாவின் சிறப்பு. இம்முறை ‘பனாரஸ்’ படத்துக்காக டைம் லூப் கான்செப்ட்டை தேர்வு செய்துள்ளார். முதல் 15 நிமிடங்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் ‘பனாரஸ்’, இடைவேளை வரை சாதாரண காதல் கதையாகவே செல்கிறது. ஆனால் இடைவேளையில் ஒரு திருப்பம் இரண்டாம் பாதிக்கு பெரும் முன்னிலையை அளிக்கிறது. அங்கிருந்து பார்வையாளர்களை நெகிழ வைக்கும் திருப்பங்கள் ஏராளம். டைம் லூப் வகைக் கதையில், அதே காட்சி மீண்டும் மீண்டும் வருகிறது. காதல் கதையாகத் தொடங்கும் ‘பனாரஸ்’ பின்னர் அறிவியல் புனைகதையாக மாறுகிறது.

மொத்தத்தில் டைம் டிராவலிங் மற்றும் டைம் லூப் திரைப்படங்களை விரும்புவோருக்கு, ‘பனாரஸ்’ ஈர்க்கக்கூடியதாகவும் மாயாஜாலத்துடன் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.