பட்டத்து அரசன் விமர்சனம் : பட்டத்து அரசன் கிராமத்து விளையாட்டை சுவாரஸ்யம் கலந்து கொடுத்து பழி தீர்க்கும் மதம் கொண்ட பேரரசன் | ரேட்டிங்: 3/5

0
435

பட்டத்து அரசன் விமர்சனம் : பட்டத்து அரசன் கிராமத்து விளையாட்டை சுவாரஸ்யம் கலந்து கொடுத்து பழி தீர்க்கும் மதம் கொண்ட பேரரசன் | ரேட்டிங்: 3/5

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில்  ராஜ்கிரண், அதர்வா, ஆஷிகா ரங்கநாதன், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு ஆகியோர் நடித்துள்ளனர்.பட்டத்து அரசன் திரைப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார்.
இசை: ஜிப்ரான்,ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீPனிவாஸ்,படத்தொகுப்பு: ராஜா முகமது,கலை இயக்கம்: அந்தோணி,பாடல் வரிகள்: விவேக்-மணி அமுதவன்,ஆடை வடிவமைப்பு: நட்ராஜ், ஒப்பனை: சசி குமார், சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன், நடன இயக்குநர்: பாபி ஆண்டனி ஷெரிஃப்,தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன், நிர்வாகத் தயாரிப்பாளர்: நாராயணன், தயாரிப்பு மேற்பார்வை- ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டிஒன்.

காளையார்கோவில் கிராமத்தில் கபடியில் சிறந்து விளங்கி வெற்றியால் பேரும் புகழும் பெற்றவர் ராஜ்கிரண். இவர் இரண்டு மனைவிகள், மகன், பேரன்களோடு ஒற்றுமையாக கூட்டு குடும்பமாக வாழ்கிறார். எதிர்பாராத விதமாக இரண்டாவது மனைவியின் மகன் ஆர்.கே.சுரேஷ் இறக்க, அதற்கு காரணம் ராஜ்கிரண் என்று நம்பும் மருமகள் ராதிகா சண்டையிட்டு சொத்தை பிரித்து தனியே மகன் அதர்வாவுடன் சென்று விடுகிறார். பல வருடங்களாக இரு குடும்பங்களும் பகையோடு இருக்கிறது. தன் தாத்தா ராஜ்கிரணுடன் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார் அதர்வா. அதற்காக முயற்சி செய்தாலும் அவமானமே அதர்வாவிற்கு ஏற்படுகிறது.இதனிடையே எதிர்பராத சம்பவத்தால் ராஜ்கிரணின் இன்னொரு பேரன் இறந்து விடுகிறான். இதை காரணமாக வைத்து ஊர் பஞ்சாயத்து தலைவர் பேரன் ராஜ்கிரண் குடும்பத்தை சூழ்ச்சி செய்து ஊரை விட்டே தள்ளி வைக்கிறான். அதர்வா தன் தம்பியின் சாவிற்கு களங்கம் ஏற்படுத்திய ஊர் பஞ்சாயத்து தலைவர் பேரனை பழி வாங்கினாரா? ஊர் மக்களை எதிர்த்து குடும்பத்தை ஒருங்கிணைத்து கபடி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தாரா? இழந்த கௌரவத்தை மீட்டாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

இளைஞராக, முதியவராக இருவித கெட்டப்பில் கம்பீர நடை, பார்வை, வசன உச்சரிப்பு என்று கபடி வீரராக வாழ்ந்திருக்கிறார் ராஜ்கிரண்.

பேரனாக, அண்ணனாக, மகனாக உணர்ச்சிபூர்வமான காட்சிகளோடு அசத்தியுள்ளார் அதர்வா, ஆஷிகா ரங்கநாதன், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு ஆகியோர் அனைவருமே சில காட்சிகள் என்றாலும் பங்களிப்பு கச்சிதம்.

இசை-ஜிப்ரான்,ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,படத்தொகுப்பு: ராஜா முகமது,கலை இயக்கம்: அந்தோணி ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு விறுவிறுவிப்பை கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கபடியை மையமாக வைத்து செண்டிமெண்ட் கலந்து போட்டி, பொறாமை என்ற கிராமத்து வில்லங்க அம்சங்களை புகுத்தி விளையாட்டுடன் சம்பந்தப்படுத்தியுள்ளார் இயக்குனர் சற்குணம். முதல் பாதி பொத்தாரி குடும்பத்தின் கதை, சண்டை, கபடி போட்டி என்று நகர இரண்டாம் பாதி குடும்ப ஒற்றுமை, கபடி போட்டியில் கலந்து கொண்டு ஜெயிப்பது என்ற கோணத்தில் இயக்கியுள்ளார் சற்குணம். இதில் குடும்ப உறுப்பினர்கள் வயது வித்தியாசமின்றி ஒரே அணியாக திரண்டு கபடி போட்டியில் ஜெயிப்பது என்ற கோணத்தில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சற்குணம்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் பட்டத்து அரசன் கிராமத்து விளையாட்டை சுவாரஸ்யம் கலந்து கொடுத்து பழி தீர்க்கும் மதம் கொண்ட பேரரசன்.