நதி விமர்சனம்: நதி சாதி அரசியல் கலந்து மாயமாகும் ஜீவநதி |மதிப்பீடு: 2.5/5

0
254

நதி விமர்சனம்: நதி சாதி அரசியல் கலந்து மாயமாகும் ஜீவநதி |மதிப்பீடு: 2.5/5

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரித்திருக்கும் நதி படத்தில் கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், பிரவீன்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.தாமரைசெல்வன்.ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ், எடிட்டர்: ஆர்.சுதர்ஷன், வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்,கலை இயக்குனர்: விஜய் தென்னரசு,நடன இயக்குனர்: தினேஷ், விஜயா ராணி, மக்கள் தொடர்பு : சதீஷ் ஏய்ம்.

கல்லூரியில் படிக்கும் சாம் ஜோன்ஸ் நண்பர்களுடன் சகஜமாக பழகும் தன்மையில்லாமல் இருந்தாலும் பேட்மிண்டன் விளையாட்டில் சாம்பியனாக திகழ்கிறார். அவர் விளையாட்டில் சாதித்து நல்ல பதவியில் வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.அதே வகுப்பில் படிக்கும் கயல் ஆனந்தி சாம் ஜோன்ஸிடம் நட்பாக பழக ஆரம்பிக்கிறார். கயல் ஆனந்தியின் குடும்பம் சாதி அரசியல் செல்வாக்கு நிறைந்தது. ஆனந்தியின் பெரியப்பா வேல ராமமூர்த்தி நட்பாக பழகும் இவர்களை பிரிக்க சதி செய்து சாம் ஜோன்ஸை செய்யாத கொலைக்கு உடந்தை என்று ;கூறி ஜெயிலுக்கு அனுப்புகிறார். இதனால் கோபமடையும் ஆனந்தி சாம் ஜோன்ஸை ஜாமீனில் விடுவித்து காதலிக்க தொடங்குகிறார். இதை கேள்விப்படும் வேல ராமமூர்த்தி காதலர்களை பிரிக்க என்ன சூழ்ச்சி செய்தார்? இதிலிருந்து காதலர்கள் தப்பித்தார்களா? அதன் பின் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், பிரவீன்குமார் ஆகியோர் படத்திற்கேற்ற இயல்பான தோற்றம் மாறாமல் செவ்வென செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ், எடிட்டர்: ஆர்.சுதர்ஷன், வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்,கலை இயக்குனர்: விஜய் தென்னரசு மதுரையை மையமாக வைத்து அடிதடி கதைக்கேற்றவாறு சிறப்பாக அனைவரும் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

மதுரை என்றாலே சாதி, அரசியல், காதல், அடிதடி என்ற கான்சப்டோடு பல கதைகள் வந்திருப்பது போல இந்த கதையும் அதைச் சார்ந்தே பழி வாங்கும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் தாமரைசெல்வன். இறுதியில் மட்டும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்து தன்னை அழிக்க நினைப்பவர்களை உயிரே போனாலும் பரவாயில்லை என்று துணிந்து  நினைத்ததை சாதித்து முடிக்கும் உறுதி கொண்ட பெண்ணின் நிலைமையை இயலாமையை சிறப்பாக விவரித்துள்ளார்.

மொத்தத்தில் மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரித்திருக்கும் நதி சாதி அரசியல் கலந்து மாயமாகும் ஜீவநதி.