டிரைவர் ஜமுனா விமர்சனம் : டிரைவர் ஜமுனா த்ரில் கலந்த பழி தீர்க்கும் பயணம் | ரேட்டிங்: 3/5

0
651

டிரைவர் ஜமுனா விமர்சனம் : டிரைவர் ஜமுனா த்ரில் கலந்த பழி தீர்க்கும் பயணம் | ரேட்டிங்: 3/5

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் டிரைவர் ஜமுனா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கின்ஸ்லின்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கோகுல் பெனாய், இசை-ஜிப்ரான், எடிட்டர்-ராமர், ஸ்டண்ட்-அனல் அரசு, மக்கள் தொடர்பு-யுவராஜ்.
நம்பிக்கைக்குரிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவர் ஜமுனா என்ற ரோட் த்ரில்லருடன் திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கதை:
ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒரு கால்டாக்சி டிரைவர். அவருடைய தந்தையும் வாடகை கார் ஓட்டுபவராக இருந்தவர். தந்தை, தாய், தம்பி என அமைதியான வாழ்க்கை நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தில் சூறாவளியாக அப்பாவின் கொலை சம்பவம் நிகழ்கிறது. அவரை கூலிப்படையினர் கொடூரமாக வெட்டிக் கொள்கின்றனர். அந்த படுகொலை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தையே உலுக்கி எடுக்கிறது. இதனால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவை (ஸ்ரீரஞ்சனி) கவனித்துக்கொள்கிறார். தம்பி ஊரை விட்டு செல்கிறார். தந்தையின் இறப்பிற்குப் பிறகு, தந்தை ஓட்டிக் கொண்டிருந்த கால் டாக்சி டிரைவராக மாறுகிறார் ஜமுனா. ஒரு அரசியல் தலைவரை கொலை செய்யும் நோக்கில் புறப்படும் மூன்று ஒப்பந்த கூலி படைகளிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கிக் கொள்கிறார். அதாவது, இந்த இரக்கமற்ற கொலையாளிகள் உண்மையான இலக்குகள் முன்னாள் எம்எல்ஏ மரகதவேல் (ஆடுகளம் நரேன்) மற்றும் அவரது மகன் மாணிக்கம் (மணிகண்டன்). கூலிப்படையினர் மூன்று பேர், அவர்களில் ஒருவர் போதைக்கு அடிமையானவர். அவர்களின் கார் சிறு விபத்தில் சிக்கி பழுதடைந்து போகிறது.  அதனால் செங்கல்பட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு சவாரி செய்ய கால்டாக்சி பதிவு செய்கிறார்கள். கால் டாக்ஸியில் ஜமுனா அவர்களை அழைத்துச் செல்கிறார். ஆர்வமுள்ள இசைக்கலைஞரான அபிஷேக் அவர்களுடன் சவாரி-பகிர்வு அடிப்படையில் இணைகிறார். உள்ளூர் போலீஸ் காரர்களிடமிருந்து ஜமுனாவுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஜமுனாவுடன் பயணிக்கும் மூன்று ஆண்களும் ஒப்பந்த கொலையாளிகள் மற்றும் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் என்று ஜமுனாவிடம் கூறும்போது விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இந்த பயங்கரமான சூழ்நிலையிலிருந்து ஜமுனா தப்பித்தாரா ?அந்த கூலிப்படை அரசியல் தலைவரை ஏன் கொல்ல சதி செய்தது? ஜமுனாவின் தந்தை எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஜமுனாவின் தம்பி ஏன் ஊரை விட்டு செல்கிறார்? இந்த அனைத்து முக்கிய கேள்விகளுக்கும் படத்தில் விடை தெரியும்.

ஒரு கால்டாக்சி டிரைவர் ஜமுனா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதை தனது ஆற்றல் நிரம்பிய நடிப்பால் மீட்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் நரேன், அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக் குமார், கவிதா பாரதி, இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட மற்ற அனைத்து கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்புத் திறனை திரையில் வெளிப்படுத்த கதைக்களம் நன்றாக உள்ளது மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் உண்மையில் நன்றாக நடித்துள்ளனர். குண்டர்கள் குழு அவர்களின் இயல்பான நடிப்பால் திரைக்கதை பயணத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஜிப்ரானின் இசையும், கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும் சில காட்சிகளை உயர்த்தி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
 எடிட்டிங் பரவாயில்லை விறுவிறுப்பை சற்று கூட்டியிருக்கலாம் எடிட்டர் ராமர், பெரிய அளவில்  எதிர்பார்த்த அனல் அரசு ஸ்டண்ட் ஏமாற்றத்தை தான் தருகிறது.
இயக்குனர் கின்ஸ்லின் எளிமையான த்ரில்லரை தேர்வு செய்து கிளைமாக்ஸ் சீன் வரும் ட்விஸ்ட் யாரும் எளிதில் யூகிக்க முடியாத திரைக்கதையில் சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் கின்ஸ்லின்.
மொத்தத்தில் 18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் டிரைவர் ஜமுனா த்ரில் கலந்த பழி தீர்க்கும் பயணம்.