குலு குலு விமர்சனம்: குலு குலு பெயர் மட்டும் தான் குளிர்ச்சியாக இருக்கிறது படம் அயர்ச்சியை தருகிறது | ரேட்டிங்: 2/5

0
432

குலு குலு விமர்சனம்: குலு குலு பெயர் மட்டும் தான் குளிர்ச்சியாக இருக்கிறது படம் அயர்ச்சியை தருகிறது | ரேட்டிங்: 2/5

நுடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன்.
ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன்
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
தயாரிப்பு: – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன்
இயக்கம் – ரத்னகுமார்
வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பிஆர்ஒ : யுவராஜ்;

அமேசான் காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். அந்த பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல சிறு வயது சந்தானம் அதிலிருந்து தப்புகிறார். நாடு நாடாக சுற்ற,p போகும் இடத்தில் அந்தந்த மொழிகளை கற்றுக்கொண்டு வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிந்து கடைசியாக சென்னையில் வந்து வசிக்கிறார். 13 மொழிகளைப் பேசும் திறமை கொண்ட சந்தானத்திற்கு தமிழும், தமிழகமும் பிடித்துப் போவதால் இங்கேயே தங்கிவிடுகிறார். கூகுள் என அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி கேட்டாலும் ஒடோடி வந்து செய்பவர். தங்கள் நண்பனை யாரோ கடத்திவிட்டதாக மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்க நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இது ஒருபுறமிருக்க இறந்து போகும் கோடீஸ்வர அப்பாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவியின் மகள் பிரான்சிலிருந்து இவரின் இறுதிச் சடங்கிற்கு வர, சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவாளோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிடும் இரு அண்ணன்கள். இந்த சம்பவதிற்குள் சந்தானம் எப்படி வந்தார்? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த பெண்ணை காப்பாற்றினாரா? காணாமல் போனவரை சந்தானம் கண்டுபிடித்தாரா இல்லையா? ஏன்பதே மீதக்கதை.

எப்போதும் நக்கல், நய்யாண்டி, கிண்டல், கலகலப்பு, கலாய் போன்ற கதாபத்திரத்தில் தோன்றும் சந்தானம் இதுவரை பண்ணாத ஒரு ரோலை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் சந்தானமே படம் முழுக்க காமெடி பண்ணியிருக்கலாம், இந்த கூகுள் கதாபாத்திரம் சந்தானத்திற்கு துளியும் ஒட்டவில்லை. சோகம், இறுக்கம் நிறைந்த முகத்துடன், வித்தியாசமான தோற்றத்தில் அமைதியாக வந்து போவது தான் ஆச்சர்யம். ஆனால் குலுகுலு மற்ற சந்தானம் படங்களில் இருந்து மாறுபட்டு தெரிகிறது.

வில்லனாக பிரதீப் ராவத், அதுல்யா சந்திரா, சாய் தீனா, ‘நக்கலைட்ஸ்’ கவி, ஹரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, யுவராஜ், மௌரீஷ், மரியம் ஜார்ஜ், லொள்ளு சபா மாறன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரங்;களை குறையில்லாமல் சிறப்பாகச் செய்துள்ளனர்.

டார்க் காமெடி கதையம்சத்திற்கு சந்தோஷ் நாராயணின் இசையில் சம்திங் (ஒர்க் அவுட் ஆகல) மிஸ்ஸிங்.ஆனால் பாடகி தி பாடிய ஒரு பாடல் கவனம் ஈர்க்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் படஓட்டத்திற்கு ஆறுதல் அளிக்கிறது.

இப்படத்தில் குறையாக எதை சொல்வது, சுவாரஸ்யமே இல்லாத கதை, திரைக்கதை. சரி காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது தான் அதற்காக என்னென்னமோ சொல்கிறார்கள்!படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். தாங்கமுடியலை. சந்தானம் படம் கதை இருக்கோ இல்லையோ, காமெடி இருக்கும் சந்தோஷமா பார்த்துவிட்டு வருவோம் என்றால்! ஆங்காகே வரும் சின்ன சின்ன டைமிங் வசனங்களை தவிர வேறு காமெடியும் இல்லை.

நல்ல சீரியஸான கதையா? காமெடி கதையா? ஃப்ரண்ட்ஸ் கேங் கதையா? என சில பல கிளைக் கதைகளுடன் தொய்வு நிறைந்த திரைக்கதை அமைத்த இயக்குனர் ரத்னகுமார் இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம்.

மொத்தத்தில் குலு குலு பெயர் மட்டும் தான் குளிர்ச்சியாக இருக்கிறது படம் அயர்ச்சியை தருகிறது.