காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் சினிமா விமர்சனம் :  காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்! | ரேட்டிங்: 2/5

0
496

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் சினிமா விமர்சனம் :  காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்! | ரேட்டிங்: 2/5

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இட்னானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். இவர்களுடன் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். மக்கள் தொடர்பு டி.ஒன் ரேகா, சுரேஷ் சந்திரா.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வரும் தமிழ்செல்வி (சித்தி இட்னானி)க்கு சொந்தமாக நூறு ஏக்கர்  உள்ளன. ஊரில் உள்ள தமிழ்செல்வியின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருத்தர் தமிழ்செல்வியை மணந்து சொத்துக்களை கையகப்படுத்த திட்டமிடுகின்றனர். இதனால் அந்த இரு வீட்டாரும் வெவ்வேறு வழிகளில் தமிழ்செல்வியை திருமணம் செய்து வைக்க வற்புறுத்துவதுடன், வேறு யாராவது தமிழ்செல்வியை திருமணம் செய்ய வந்தால் அவர்களை மிரட்டி விட்டு ஓடவிடுகின்றனர். இந்நிலையில் மதுரை சிறையில் உள்ள  ‘காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்’ (ஆர்யா) தமிழ்ச்செல்வியின் முறைப்பையன்கள் உட்பட அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார். யார் இந்த காதர்பாட்சா என்கிற காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்? காதர்பாட்சாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் என்ன சம்பந்தம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கரடுமுரடான காதர் பாஷாவாக படத்தை எடுத்துச் செல்லும் ஆர்யாவின் நடிப்பு ஓரளவு ஈர்க்கிறது. ஆனால், சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கினாலும், அவரது டயலாக் டெலிவரி மற்றும் எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடவில்லை.

நடிகை சித்தி இத்னானியை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. தன் கதாபாத்திரத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி நியாயம் செய்திருக்கிறார்.
இஸ்லாமிய சமூகத்தின் தலைவராக கம்பீரமாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார் நடிகர் பிரபு.
திரைக்கதையில் இடம் பெற்றிருக்கும் ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், கே.ஜி.எஃப் வில்லன் புகழ் அவினாஷ், ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் உட்பட அனைத்து முரட்டு வில்லன்களும் மற்றும் பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், தீபா, ரேணுகா, மாஸ்டர் மகேந்திரன் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக கதையோடு நம்மை ஒன்ற வைக்க கிராமத்து களத்தை கண்முன் நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஆனால் அவரது உழைப்புக்கு ஜி.வி. யின் இசை மற்றும் பின்னணி இசையும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பும் சப்போர்ட் செய்ய வில்லை.

கொம்பன், விருமன் மற்றும் தேவராட்டம் ஆகிய  படங்களை தொடர்ந்து சாதி வெறியை மையப்படுத்தி  மீண்டும் ஒரு சாதி வெறியை கருவாக வைத்து கிராமப்புறங்களில் உள்ள சில குடும்பங்கள் தங்கள் செல்வத்தை வைத்து மற்ற குடும்பங்களின் செல்வத்தை அபகரிக்க எப்படி திருமணத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூலம் இயக்குனர் முத்தையா, ஆக்‌ஷன், காதல், பாடல்கள் அனைத்தையும் திரைக்கதையில் கலந்து ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சலிப்பு தட்டி தலை சுற்றும் பல கிளை கதைகள் புகுத்தி பார்வையாளர்களை சோர்வடைய செய்துள்ளார் இயக்குனர் முத்தையா.

மொத்தத்தில் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.