காட்டேரி விமர்சனம் : காட்டேரி பெயருக்கேற்ற பயமுறுத்தல் இல்லை | ரேட்டிங்: 2/5

0
142

காட்டேரி விமர்சனம் : காட்டேரி பெயருக்கேற்ற பயமுறுத்தல் இல்லை | ரேட்டிங்: 2/5

‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா, அபி மற்றும் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினாஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டிகே.இசை: எஸ்.என்.பிரசாத், ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு,எடிட்டங் – பிரவீன் கே.எல், கலை-செந்தில் ராகவன், சண்டை- டான் அசோக், மக்கள் தொடர்பு: யுவராஜ்

வைபவ்; தன்னை எமாற்றிய நண்பனையும், புதையலையையும் தேடி கிராமத்திற்கு பயணிக்கிறார். இவருடன் மனைவி சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா ஆகியோர் செல்;கின்றனர்.தேடிச் சென்ற கிராமத்தில் ஆமானுஷ்ய விஷயங்கள் நடக்க, அந்த கிராம மக்கள் எல்லாம் பேயாக உலாவுகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றனர்.அது மட்டுமில்லாமல் தப்;பித்து சென்றாலும் மீண்டும் அந்த கிராமத்திற்கே திரும்பும்படி பாதைகள் இருக்கிறது. வழியில் வரலட்சுமி மாதம்மா பேயாக வந்து கேள்விகள் கேட்டு பயமுறுத்துகிறது. இவரிடமிருந்து வைபவ் மற்றும் நண்பர்கள் தப்பித்தார்களா? புதையலை கண்டுபிடித்தார்களா? அல்லது காட்டேரியிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.

வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, ஜான் விஜய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

இசை: எஸ்.என்.பிரசாத், ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு இருவரும் மிரட்டலான காட்சிகளுக்கு உத்திரவாதமான பங்களிப்பை கொடுத்து பயமுறுத்தியுள்ளனர்.

திகில், த்ரில், காமெடி கலந்து வித்தியாசமான கதைகளத்துடன் திரைக்கதையமைத்திருக்கும் இயக்குனர் டிகே இன்னும் சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கலாம். யாமிருக்க பயமேன் படத்தை எடுத்த இயக்குனர் டிகே ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்ய தவறிவிட்டார். இருந்தாலும் இயக்குனர் டிகேயின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா, அபி மற்றும் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினாஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் காட்டேரி பெயருக்கேற்ற பயமுறுத்தல் இல்லை.