கண்ணை நம்பாதே: கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ihம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
346

கண்ணை நம்பாதே: கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ihம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் கண்ணை நம்பாதே படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஆத்மிகாவும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை: சித்து குமார்,
ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: என்.கே. ராகுல் பி.எஃப்.ஏ,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பிரபாகரன், வினோத் குமார் சி,
தயாரிப்புக் கட்டுப்பாடு: சுந்தரம் ரூ கார்த்திக்,
சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். திலகப்ரியா சண்முகம்,
ஒப்பனை: முனியராஜ்,
படங்கள்: ராமசுப்பு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அருண் (உதயநிதி ஸ்டாலின்) ஒரு வீட்டைத் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார், ஏனெனில் அவரது வீட்டு உரிமையாளர் தனது வாடகைதாரர் தனது ஒரே மகளை காதலிப்பதைக் கண்டறிந்து ஒரு நாளில் அவரை வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறார். . எனவே, விரைவில் அந்த இடத்தைக் காலி செய்யும் இளமாறனுடன் (பிரஸ்ஸனா) ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்வதில் உதய் குடியேறினார். அருண், இளமாறன் மற்றும் அருணின் நண்பர் (சதீஷ்) விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு பாரில் மது அருந்த, அருண் அழைப்பு எடுக்க வெளியே செல்கிறார். அன்று மழை பெய்து கொண்டிருக்க, அப்போது அருண் ஒரு விபத்தை நேரில் பார்க்கிறார், அங்கு ஒரு பெண் (பூமிகா) தனது காரை சாலைத் தடுப்பில் மோதிவிட்டு பின் ஓட்ட முடியாமல் தவிக்கிறாள். ஆவள் தனக்கு உதவும்படி கேட்கிறாள். முதலில் மறுத்த ஆருண் பின்பு அவளை அவளது வீட்டிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஒப்புக் கொள்கிறார். வீட்டை அடைந்ததும் பதிலுக்கு, பூமிகா தனது காரை அருண் க்கு கொடுத்து, மறுநாள் திருப்பித் தருமாறு கேட்கிறார். இருப்பினும், மறுநாள் காலை, அருண் காரின் டிக்கியில் பூமிகா இறந்து கிடப்பதைக் கண்டான். அருண் நடந்ததை கூற காவல்துறைக்கு செல்லுவதாக கூறும்போது, அவரது புதிய ரூம்மேட் சோமு (பிரசன்னா) அதன் பின் வரும் விளைவுகளைப் பற்றி கூறி அருணை எச்சரிக்கிறார், மேலும் இருவரும் ஆதாரங்களை கண்டுபிடித்து உடலை அகற்ற போராடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் தடங்களை மறைக்க முயற்சிக்கும் போது, அவர்கள் இன்னும் ஒரு தவறைச் செய்கிறார்கள், ஒரு புதிய துப்பு விட்டுச் செல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது, காரில் பூமிகா பிணம் எப்படி வந்தது என்பதை அருண் கண்டுபிடித்தாரா? கொலையாளி யார் என்று தெரிந்ததா? என்பதே மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் அடக்கமான மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார்.

நாயகி ஆத்மிகா அழகாகவும் அத்துடன் நடிப்பிலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
பூமிகாவின் த்ரில்லான கதாபாத்திரம் கதைக்கு பலம் சேர்க்கிறது.
மர்மமான கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, வசுந்தரா ஆகியோர் அசால்டா நடித்து ‘ஸ்கோர்’ செய்து இருக்கிறார்கள்.
ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, மாரிமுத்து, சுபிக்ஷா, சதீஷ், சென்றாயன், ஆதிரா என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு க்ரைம் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையை சித்து குமார் கொடுத்திருக்கிறார். டிட்டர் சான் லோகேஷ், கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம். ஜலந்தர் வாசனின் மிரட்டலான ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

விபத்தில் சிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் அப்பாவி இளைஞர் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் என்ற கருவை மையமாக வைத்து சஸ்பென்ஸ் கிரைம் ஸ்டோரி அமைத்து திரைக்கதையில் இரவு நேரத்தில் பெரும் பால காட்சிகள் அமைத்து மிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் மாறன்.

மொத்தத்தில் LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ihம் த்ரில்லர்.