கடைசி காதல் கதை திரைப்பட விமர்சனம் : கடைசி காதல் கதை இரட்டை அர்த்தங்களுடன் உங்களை சிரிக்க வைக்கும் காமெடி கலாட்டா | ரேட்டிங்: 2.5/5

0
395

கடைசி காதல் கதை திரைப்பட விமர்சனம் : கடைசி காதல் கதை இரட்டை அர்த்தங்களுடன் உங்களை சிரிக்க வைக்கும் காமெடி கலாட்டா | ரேட்டிங்: 2.5/5

நடிப்பு: ஆகாஷ் பிரேம் குமார், மைம் கோபி, எனாக்ஷி கங்குலி, புகழ், விஜே ஆஷிக், சாம்ஸ், நோபில், பிரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா, நிசார், சுவப்னா, கிருத்திகா. இவர்களுடன் இயக்குனர் ஆர் கே வியும் நடித்துள்ளார்.

தயாரிப்பு : எஸ் கியூப் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்: இ.மோகன்
இசை: சேட்டன் கிருஷ்ணா
ஒளிப்பதிவு :சிவசுந்தர்
இயக்கம்: ஆர் கே வி
பி ஆர் ஒ: சுரேஷ் சுகு, தர்மதுரைஆகாஷ் பிரேம்குமார், புகழ் உள்ளிட்ட 4 நண்பர்கள் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். ஆகாஷ் பிரேம்குமாரை தவிர மாற்ற மூன்று நண்பர்களுக்கும் தங்கள் காதலியுடன் லூட்டியடித்து ஜல்சா பண்ணுகிறார்கள். காதலி கிடைக்காமல் தவிக்கும் ஆகாஷுக்கும்  ஒரு கட்டத்தில் காதலியாக எனாக்ஷி கிடைக்கிறார். ஆகாஷின் காதலி முத்தம் கொடுக்காமல், மற்றும் ஒருவரை ஒருவர் தொடாமல் அதாவது மற்றவர்கள் காதலிப்பதை போல் இல்லாமல் இருவரும் பிளாட்டோனிக் லவ் (உடல் ரீதியாக நெருக்கமான உறவாக மாற அனுமதிக்காமல், ஒருவருடன் அன்பான உறவைக் கொண்டிருப்பது), காதலிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். முதலில் ஒப்புக் கொண்டாலும் ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் எல்லை மீறுகிறார் ஆகாஷ். அதை ஏற்காமல் ஆகாஷுடனான காதல் பிரேக் அப் ஆகிறது. எனாக்ஷி விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் தன் ஈகோவால் கோபத்தில் வேறு மாப்பிளையை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதனால் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் மன அழுத்தத்திற்கு ஆளாகி அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவித்து பித்தம் பிடித்தது போல் இருந்த ஆகாஷை மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்குள்ள டாக்டர் சிகரெட் பிடிக்கும் புகைப்பதை மறக்க புதுவிதமான வைதியத்தை கடைபிடிக்கிறார். அதாவது, சிகரெட் பிடிக்க நினைக்ககும் போது குழந்தைகள் சப்பும் ரப்பர் நிப்பிளை வாயில் வைத்து சப்பி அந்த சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை மறக்க முயலுகிறார். சிகிச்சையிலிருக்கும் ஆகாஷிடம் மன அழுத்தத்திலிருந்து வெளி வர ஒரு சில புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார்கள். அப்படி படித்தால் காதல் தோல்வியிலிருந்து விடுபட்டு தன் கவனத்தை வேறு பக்கம் மாற்றலாம் என்று கூறுகிறார்கள். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதாவது, உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு குடியெத்துக்கு சென்று பழங்குடியினர் போல் வாழலாம் என முடிவெடுக்கிறான். உடனே மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியேறுகிறார். இந்த புதிய சிந்தனையை தனது நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். இந்த எண்ணத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுகிறான். அது வைரலாக பரவுகிறது. இதேபோல் பாதிக்கப்பட்ட பல வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் போலீசுக்கு அதிக நெருக்கடி மேல் இடத்திலிருந்து வருகிறது.  அதைச் செயல்படுத்த நினைத்து களமிறங்கியபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.இதில் காதலில் தோல்வியடைந்து மன நோயாளியாகும் கதாபாத்திரத்தில் ஆகாஷ் பிரேம்குமார், பொருத்தமாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி, மைம் கோபி, காவல்துறை அதிகாரியாக வரும் சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா நாயகனின் நண்பர்களாக வரும் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல், மனநல மருத்துவராக இயக்குனர் ஆர் கே வி ஆகியோர் அவரவர் வேலையைச் சிறப்பாக செய்து ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்கி மிரள வைக்கிறார்கள்.

சேத்தன் கிருஷ்ணா இசை மற்றும்; பின்னணி இசை, சிவசுந்தர் ஒளிப்பதிவு, பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு ஆகியோரின் தொழில் நுட்ப வித்தை குபீர் சிரிப்பில் அரங்கை அலறவிடும் படம் வேகமாக நகர உதவுகிறது.

வியக்கத்தக்க வசீகரமான காதல்கள், செக்ஸ் காமெடிகள் நீண்ட காலமாக சினிமா சிரிப்பின் தூணாக இருந்து வருகிறது. சமீப வருடங்களில் இந்தத் திரைப்படங்கள் சற்று அதிகரித்து விட்டாலும், மேலும் புதியது எப்போது வெளிவருகிறது என்பதைக் கவனிப்பதை இன்றைய சினிமா நிச்சயமாக நிறுத்தாது. நவீன செக்ஸ் நகைச்சுவையின் நுணுக்கங்களைப் காதல் கதையில் பொருத்தி பெரும்பாலும் மிகவும் இரட்டை அர்த்த வசனங்களால் நகைச்சுவைகள் நிரப்பி கதை, திரைக்கதை, வசனம் எழுதி அடல்ஸ் ஒன்லி படமாக இயக்கியுள்ளார் ஆர்.கே.வித்யாதரன்.

மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நீங்கள் தொலைந்து போனதாகவும் குழப்பமாகவும் உணர்ந்தால், எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் இ.மோகன் தயாரித்திருக்கும் கடைசி காதல் கதை இரட்டை அர்த்தங்களுடன் உங்களை சிரிக்க வைக்கும் காமெடி கலாட்டா.