அம்முச்சி 2 விமர்சனம்: அம்முச்சி 2 சிறுவர் முதல் பெரியவர் வரை கிராமத்து அட்ராசிடியை பார்த்து ரசித்து சிரித்து மகிழலாம் | ரேட்டிங் – 3/5

0
108

அம்முச்சி 2 விமர்சனம்: அம்முச்சி 2 சிறுவர் முதல் பெரியவர் வரை கிராமத்து அட்ராசிடியை பார்த்து ரசித்து சிரித்து மகிழலாம் | ரேட்டிங் – 3/5

இரும்புகள் நெட்வொர்க் தயாரிப்பில் சின்னமணி, மித்ரா ரங்கராஜ், சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைத்தீஸ்வரி, ரோகிணி நடராஜன், அருண்குமார், சசி செல்வராஜ், பிரசன்னா பாலசந்திரன், சந்திரகுமார், ராஜேஷ் பாலசந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ்,  சிவன் மூர்த்தி, முத்தமிழ், சஷ்டி பிரநேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, ஆதன் குமார், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி. இசை-விவேக் சாரோ, ஒளிப்பதிவு-சந்தோஷ்குமார் எஸ்.ஜே., எடிட்டர்-கண்ணன் பாலு, கலை- ஆசை தம்பி, ஒலி வடிவமைப்பு-விக்ரமன், பாடல்கள்-கிருஷ்ணகாந்த், ராஜேஷ்வர் காளிசாமி, சண்டை-ரவிராஜ், உடை-நவீனா,தீபிகா, தயாரிப்பு மேற்பார்வை-வினோத் குமார். எஸ்., மக்கள் தொடர்பு-யுவராஜ்.ஆஹா ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.

அருண் தன் காதலி மித்ரா போனில் அவசரமாக அழைக்க கோடங்கி பாளையத்திற்கு செல்கிறார். அங்கே அவளது தந்தை திருமண ஏற்பாடு செய்திருப்பதையும், மேற்படிப்பு படிக்க அனுமதி தராதது பற்றியும் அறிகிறார். அங்கே சசியின் குடும்பத்தினருடன் அருண் தங்குகிறார். பின்னர் தன் நண்பன் சசியுடன் சேர்ந்து மித்ரா தந்தையுடன் பேச செல்கிறார். ஆனால் மித்ரா தந்தை இவர்களிடம் சண்டையிட்டு, ஐந்து போட்டிகளில் கலந்து கொண்டு தான் பார்த்த மாப்பி;ள்ளையிடம் ஜெயிப்பவர்களுக்கே மித்ராவை திருமணம் செய்து வைப்பேன் என்று முரண்டு பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் அருண் சம்மதம் சொல்லிவிட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தீவிரமாக பயிற்சி எடுக்கிறார். இறுதியில் அருண் இந்த போட்டிகளில் வென்றாரா? தன் காதலியை திருமணத்திலிருந்து காப்பாற்றி படிக்க வைத்தாரா? சசியின் அம்முச்சி எடுக்கும் தடுப்பு முயற்சிகளை முறியடித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

சின்னமணி, மித்ரா ரங்கராஜ், சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைத்தீஸ்வரி, ரோகிணி நடராஜன், அருண்குமார், சசி செல்வராஜ், பிரசன்னா பாலசந்திரன், சந்திரகுமார், ராஜேஷ் பாலசந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ்,  சிவன் மூர்த்தி, முத்தமிழ், சஷ்டி பிரநேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, ஆதன் குமார், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன் ஆகியோர் கிராமத்து கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகாந்த், ராஜேஷ்வர் காளிசாமி ஆகியோரின் வரிகளில் பாடல்கள் மட்டுமல்ல இசையிலும் இன்னிசை விருந்து படைத்துள்ளார் விவேக் சாரோ.

சந்தோஷ்குமார் எஸ்.ஜே., ஒளிப்பதிவு காட்சிக்கோணங்களில் கி;ராமத்து இயற்கை எழிலையும், சூழலையும் அழகாக படம் பிடித்து, கிராமத்து போட்டிகளையும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

எடிட்டர்-கண்ணன் பாலு சிறப்பாக செய்துள்ளார்.கலை- ஆசை தம்பி, ஒலி வடிவமைப்பு-விக்ரமன், சண்டை-ரவிராஜ், உடை-நவீனா,தீபிகா கிராம பின்னணிக்கேற்ற அசத்தல் ரகம்.

கல்வியை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் கிராமத்து காதல் கதைக்களத்தில் காமெடி, குடும்ப செண்டிமென்ட் கலந்து போட்டி, அடிதடி சண்டைக் காட்சிகளுடன் விறுவிறுப்பு குறையாமல் அதகளத்துடன் மெச்சும்படி இயக்கியுள்ளார் ராஜேஷ்வர் காளிசாமி. ஆரம்பம் முதல் இறுதி வரை தோய்வு ஏற்பாடவாறு சிறப்பாக காட்சிகளை அமைத்து வெற்றி வாகை சூடியுள்ளார் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி.

மொத்தத்தில் இரும்புகள் நெட்வொர்க் தயாரிப்பில் அம்முச்சி 2 சிறுவர் முதல் பெரியவர் வரை கிராமத்து அட்ராசிடியை பார்த்து ரசித்து சிரித்து மகிழலாம்.