அன்யாஸ் டுடோரியல் விமர்சனம் : அன்யாஸ் டுடோரியல்  வலைதளத்திற்குள் ஒரு திகில் அனுபவம் | மதிப்பீடு: 3|5

0
491

அன்யாஸ் டுடோரியல் விமர்சனம் : அன்யாஸ் டுடோரியல்  வலைதளத்திற்குள் ஒரு திகில் அனுபவம் | மதிப்பீடு: 3|5

அர்கா மீடியா சார்பில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் டெவினெனி தயாரித்து பல்லவி கங்கிரெட்டி இயக்கிய அன்யாஸ் டுடோரியல் தொடரில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ், பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர்: அர்ரோல் கொரேலி, ஒளிப்பதிவு: விஜய் கே.சக்கரவர்த்தி,எடிட்டர்: ரவி தேஜா கிரிஜாலா,மக்கள் தொடர்பு – யுவராஜ்.
தந்தையை இழந்து தாயின் பராபரிப்பில் வளரும் சகோதரிகள் மது, லாவண்யா. குடும்பத்தில் பிரச்னை ஏற்பட வெளியேறி தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறார் லாவண்யா.அந்த குடியிருப்பில் அவளைத் தவிர வேறு யாரும் தங்குவதில்லை. கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தால் வேறு வழிதெரியாமல், தைரியமாகவும் தனிமையாகவும் இருக்கும் லாவண்யா  இன்ஸ்டாகிராமில் அன்யாஸ் டுடோரியல் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருப்பது அக்கா மதுவிற்;குப் பிடிக்காமல் போகிறது. தனிமையில் இருக்கும் லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்.   ஒரு நாள் மேக்கப் பற்றி லைவ் கொடுக்க அவளுக்குப் பின்னால் பேய் இருப்பதைப் பின்தொடர்பவர்கள் கவனிக்கிறார்கள். அதன் மூலம் லாவண்யா சமூக வலைதளங்களில் பிரபலமாகி பின்தொடர்பவர்கள் அதிகரிக்க சிலர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்த பணம் கொடுக்கிறார்கள். லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது லாவண்யாவின் அக்கா மது (ரெஜினா) தன் தங்கை செய்வதெல்லாம் குப்பை என்கிறாள். சிறுவயதில் இருந்தே பேய், பிசாசு கிடையாது என்பது லாவண்யாவுடன் தனக்கும் தெரியும் என்கிறாள். மது செய்யும் ஒரு காரியத்தால் லாவண்யாவின் அன்யாஸ் டுடோரியல் பக்கம் பின்தொடர்பவர்களை இழக்க நேரிடுகிறது. அதன்பிறகு, இன்னொரு லைவ் செய்த லாவண்யா, தன் மூத்த சகோதரி தன்னை ஒரு குழந்தையாக இருக்கும் போது  எப்படி நடத்தினாள் என்று கூறுகிறார். லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன திகில் மறைந்திருக்கிறது? அக்கா மதுவுடன் அவளுக்கு என்ன சண்டை? லாவண்யாவின் வாடகை வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளது உண்மையா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமான கதாபாத்திரங்களில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் சகோதரிகளாக சண்டை, பயமுறுத்தல், என்று கடந்தகாலம், நிகழ்காலம் வெவ்வேறு காட்சிகள், படத்தில் திகில்காட்சிகளுக்கு உத்திரவாதம் தருகின்றனர். மற்றும் பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.

அர்ரோல் கொரேலி இசை படத்தின் ஆமானுஷ்ய காட்சிகளில் அதிர்வை ஏற்படுத்துகிறார்.

விஜய் கே.சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிகளிலும் வைத்திருக்கும் கோணங்கள் பிரமிப்பை ஏற்படுத்தி பயத்தை அதிகரிக்க செய்திருப்பதில் வெற்றி பெறுகிறார்.

ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு சிறப்பு.

இரு சகோதரிகள் சம்பந்தப்பட்ட ஒரு உளவியல் த்ரில்லர் கதையில் இருவருக்குள்ளும் ஏற்படும் சம்பவங்களின் கோர்வையாக,இக்கால தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து திகிலான வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் பல்லவி கங்கிரெட்டி. கொஞ்சம் மெதுவாக நகரும் கதைக்களம் இறுதியாக வரும் தொடர்களில் மும்முரமாக செல்வது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் அர்கா மீடியா சார்பில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் டெவினெனி தயாரித்திருக்கும் அன்யாஸ் டுடோரியல்  வலைதளத்திற்குள் ஒரு திகில் அனுபவம்.