அகிலன் விமர்சனம்: அகிலன் உலக பசியை போக்க கப்பல் பயணத்தை தேர்ந்தெடுத்தவன் | ரேட்டிங்: 3.5/5

0
454

அகிலன் விமர்சனம்: அகிலன் உலக பசியை போக்க கப்பல் பயணத்தை தேர்ந்தெடுத்தவன் | ரேட்டிங்: 3.5/5

ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி லிட்  தயாரிப்பில் அகிலன் படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், சிரக் ஜானி, தருண் அரோரா, மதுசூதன் ராவ், ஹரீஷ் பெரடி, ஹரீஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
அகிலன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என். கல்யாண கிருஷ்ணன்.இசை-சாம் சி.எஸ், ஒளிப்பதிவு-விவேக் ஆனந்த் சந்தோஷம், எடிட்டிங்-என்.கணேஷ்குமார், கலை-ஆர்.கே.விஜய் முருகன், சண்டை-மிரக்கிள் மைக்கேல், பாடல்கள்-விவேக், நடனம் – ஈஸ்வர் பாபு, எம்.ஷெரிஃப், உடை-பல்லவி சிங், தயாரிப்பு நிர்வாகி-ஏபி.ரவி, பிஆர்ஒ-நிகில்.

கப்பல் கன்டெய்னர்களில் சட்ட விரோதமாக பொருட்களை கடத்தும்  தொழில் செய்யும் தாதா பரந்தாமன் (ஹரீஷ் பெரடி) அவனின் அடியாள் கிரேன் ஆபரேட்டர் அகிலன்(ஜெயம்ரவி). பல வருடங்களாக அடியாளாக வேலை செய்தாலும் உரிய பணம் கிடைக்காததால், தனியே கடத்தல் தொழிலை செய்ய முடிவு செய்கிறான் அகிலன். தாதா பரந்தாமனை மீறி கடத்தல் தொழில் செய்து இந்திய பெருங்கடலின் ராஜாவாக உருவெடுக்கிறான். இதனை கண்டு கோபமடையும் பரந்தாமன், அகிலனின் அடுத்த முயற்சியை எவ்வாறு தடுக்கிறான்? அகிலன் உலக மக்களின் பசியை போக்க என்ன  திட்டம் போடுகிறான்? அதற்காக என்ன செய்தான்? அவனின் ஆசை நிறைவேறியதா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஜெயம் ரவி டைட்டில் ரோலில் அகிலனாக வலம் வந்து தன்னுடைய முழு திறமையையும் காட்டி, படத்தின் ஆணிவேறாக இருந்து வழி நடத்தி செல்கிறார். அவரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது.

பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், சிரக் ஜானி, தருண் அரோரா, மதுசூதன் ராவ், ஹரீஷ் பெரடி, ஹரீஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ்சின் அதிரடி பின்னணி இசை படம் முழுவதும் எதிரொலிக்கிறது.
விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் காட்சிக் கோணங்கள் பிரம்பிப்பை ஏற்படுத்துகிறது.

அகிலன், பெரும்பாலான தமிழ் படங்களைப் போல இல்லாமல், துறைமுகத்தின் செயல்பாடுகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. முதல் பாதி முழுவதும், நெகடிவ் கதாபாத்திரமாக சித்திரக்கப்பட்டும் இரண்டாம் பாதியில் ஹீரோவின் வில்லத்தனமான செயல்கள் நியாயமான ஒரு புதிய  உலக பசி பிரச்சனைகள் பற்றிய குறிக்கோளோடு செயல்படுவதாக காட்டி நல்லவனாக சித்தரிக்க படாதபாடு பட்டு இயக்கியிருக்கிறார் கல்யாண கிருஷ்ணன். இரண்டாம் பாதியில் சொல்லப்பட்ட விதம் தோய்வோடு இருப்பதும், துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் கடினமானது, அத்தனையும் சுலபமாக கடந்து தன்னுடைய இலக்கை எட்டும் கதாநாயகனாக சித்தரித்து காட்டியிருப்பது மிகையாக உள்ளது. இப்படத்தில் இன்னும் திரைக்கதையை அழுத்தமாக கொடுத்திருந்தால் விறுவிறுப்பாக சென்றிருக்கும்.

மொத்தத்தில் ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி லிட் தயாரிப்பில் அகிலன் உலக பசியை போக்க கப்பல் பயணத்தை தேர்ந்தெடுத்தவன்.