ஹிட்லர் சினிமா விமர்சனம் (HITLER MOVIE REVIEW) : ஹிட்லர் பெயருக்கு ஏற்ற கம்பீரமும், புதுமையும் இல்லை | ரேட்டிங்: 2/5

0
635

ஹிட்லர் சினிமா விமர்சனம் (HITLER MOVIE REVIEW) : ஹிட்லர் பெயருக்கு ஏற்ற கம்பீரமும், புதுமையும் இல்லை | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன், சரண் ராஜ், தமிழ் (இயக்குனர்), ஆடுகளம் நரேன், விவேக் பிரசன்னா, ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுதி இயக்கியவர் : டானா எஸ்.ஏ
தயாரிப்பு : டி.டி.ராஜா – டி.ஆர். சஞ்சய் குமார்
தயாரிப்பு நிறுவனம் : பிலிம் இன்டர்நேஷனல்
ஒளிப்பதிவு : நவீன் குமார்
இசை : விவேக் – மெர்வின்
கலை : சி.உதயகுமார்
படத்தொகுப்பு : சங்கத்தமிழன்
பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், கு.கார்த்திக், பிரகாஷ் பிரான்சிஸ்
நடனம் : பிருந்தா, லீலாவதி
சண்டைக்காட்சி : முரளி ஜி
ஆடை வடிவமைப்பாளர் ;: அனுஷா ஜி
ஸ்டில்ஸ் : அருண் பிரசாத்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏஐஎம்)

தேனி மாவட்ட மலை கிராமம் ஒன்றில் மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் ஆற்றில் நீர் அதிகரித்த நிலையில் ஆற்றை கடக்க பாலங்கள் இல்லாததால் சிக்கித் தவிக்கும் கூலித் தொழிலாளி பெண்கள் மூழ்கிய பாதையை கடக்க முயலும் போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. கதை அப்படியே நகர்ந்து சென்னைக்கு வருகிறது. தேர்தல் நெருங்கி வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது தமிழ் திராவிட சமுதாய கட்சி. இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ராஜவேலு (சரண்ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார். கட்சியின் தலைவர் ஊழல் அரசியல்வாதி ராஜவேலுவை பார்த்து “பணத்தில் பாதியை தின்றால், அது நியாயமான செயல், ஆனால் அதையெல்லாம் நீங்களே வைத்திருக்க விரும்பினால் அது தவறு” என்று எச்சரிக்கிறார். ராஜவேலு எப்படியாவது மக்களுக்கு பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதற்கு உண்டான ஏற்பாட்டை செய்கிறார். ஆனால் தொகுதிக்கு பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ அடையாளம் தெரியாத நபர் அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்து விட்டு பணத்தை திருடிவிட்டு செல்கிறார்கள். ராஜவேலு தொடர்ந்து தனது கருப்பு பணத்தை இழக்கிறார். இந்த கொலைகளை பற்றி விசாரிக்கும் துணை கமிஷனர் சக்தி (கௌதம் வாசுதேவ் மேனன்)  பிரபல அரசியல்வாதி சரண் ராஜின் கூட்டாளிகளை கொன்று அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்த நபரை தேடி வருகிறார். மறுபுறம் சென்னைக்கு வேலை தேடி வரும் செல்வா (விஜய் ஆண்டனி) கருக்காவேல் (ரெடின் கிங்ஸ்லி) உடன் அறையில் தங்குகிறார். ரயில் நிலையத்தில் லோக்கல் ரயிலில் ஏறும் சாராவை (ரியா சுமன்) பார்த்ததும் அவர் மேல் காதல் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் ரியா சுமனை உள்ளூர் ரயிலில் சந்திக்கும் போதெல்லாம் இந்த கொலை மற்றும் ராஜவேலு அனுப்பும் பணம் திருட்டு நடைபெறுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர் யார், ஊழல் அரசியல்வாதிகள் விளையாட்டு என்ன? செல்வாவுக்கும் இந்த கொலை மற்றும் திருட்டுக்கு சம்மந்தம் உள்ளதா? துணை கமிஷனர் சக்தி கொலையாளியை கண்டுபிடித்து திருடப்பட்ட பணத்தை மீட்டாரா? தேனி மாவட்ட மலை கிராமத்தில் கூலித் தொழிலாளி பெண்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்ததற்கும் சென்னையில் நடைபெறும் இந்த சம்பவத்துக்கு என்ன தொடர்பு என்பது படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் விஜய் ஆண்டனியின் நடிப்பு எந்த வகையிலும் காண்போரை கவரவில்லை. ஹிட்லர் படமும் அந்த வரிசையில் பங்கு பெறும். ஆக்ஷன் ஹீரோவாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் விஜய் ஆண்டனி ஆக்ஷன் ஹீரோவுக்கான தன்மையை அவர் இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துணை கமிஷனர் சக்தியாக கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கே உரிய ஸ்டைலில் வழக்கம் போல் பார்வையாளர்களை கவரும் வகையில் அசால்டாக நடித்துள்ளார்.

ரியா சுமன், செல்வாவின் காதலி சாராவாக ரொமான்ஸ் காட்சிகளுடன் திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதை அவர் நேர்த்தியாக செய்துள்ளார்.

சரண்ராஜ், தமிழ் (இயக்குனர்), ஆடுகளம் நரேன், விவேக் பிரசன்னா, ரெடி கிங்ஸ்லி போன்றோர் வந்து செல்கின்றனர்.

மேலும் அவர்களுடன் சேர்ந்து அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, வழக்கமான கதைக்களம் என்பதால் அவர்களின் திரை ஈர்ப்பு அதிகம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.படத்தில் முரளி.ஜி சண்டைக் காட்சிகள் மட்டும் சற்று ஆறுதல் அளிக்கிறது.

தமிழ் சினிமாவில் காலம் காலமாக தேய்ந்து போன காலாவாதியான ஒரு அரசியல் பின்னணி ஜானரை எடுத்து, அதில் எந்த ஒரு புது விஷயத்தையும் சொல்லாமல், எளிதில் கணிக்கக்கூடிய காட்சிகளை புகுத்தி, சுவாரஸ்யம் இல்லாத தடுமாற்றமான திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் டானா எஸ்.ஏ.

மொத்தத்தில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா – டி.ஆர். சஞ்சய் குமார் தயாரித்துள்ள ஹிட்லர் பெயருக்கு ஏற்ற கம்பீரமும், புதுமையும் இல்லை.