ஹாஸ்டல் விமர்சனம்: ‘ஹாஸ்டல்” ஒரு தடவை சிரிக்க மட்டுமே செல்லலாம்

0
138

ஹாஸ்டல் விமர்சனம்: ‘ஹாஸ்டல்” ஒரு தடவை சிரிக்க மட்டுமே செல்லலாம்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ஹாஸ்டல்.
இதில் அசோக் செல்வன்,  பிரியா பவானி சங்கர்,  சதீஷ், நாசர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் யோகி, கிரிஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-போபோ சாஷி, ஒளிப்பதிவு-பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் – ராகுல், பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

நாசர் நடத்தி வரும் கல்லூரி மாணவர்கள் ஹாஸ்டலில் நாயகன் அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் தங்கி படித்து வருகின்றனர். ரவி மரியாவிடம் தன் நண்பனுக்காக கடன் வாங்கி கொடுத்து பண பிரச்சனையில் சிக்கும் அசோக் செல்வனுக்கு நாயகி பிரியா பவானி சங்கர் உதவ முன் வந்து அதற்கு பிரதிபலனாக பாய்ஸ் ஹாஸ்டலுக்கு ஒரு இரவு மட்டும் தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறார்.அசோக் செல்வனும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பிரியா பவானி சங்கரை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் தப்பி வெளியே வந்தாரா?வார்டனாக இருக்கும் முனீஸ்காந்த்திடம் சிக்கிக் கொண்டாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டல் உள்ளே செல்ல உண்மையான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

காமெடி கதாபாத்திரத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், ரவிமரியா, சதீஷ், நாசர், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

போபோ சாஷி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு  ஹாஸ்டலில் காட்சிக் கோணங்களனால் அசர வைத்துள்ளார்.

மலையாள படமான அடி கப்பியரே கூட்டாமணி என்ற படத்தின் மறுஉருவாக்கம் தான் இந்த ஹாஸ்டல்.தேர்ந்த நடிகர்களுடன் டார்க் காமெடியை மையமாக வைத்து கொஞ்சம் திகில் கலந்து கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் அளப்பறைகளை முடிந்தவரை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில்  ‘ஹாஸ்டல்” ஒரு தடவை சிரிக்க மட்டுமே செல்லலாம்.