ஸ்டார் சினிமா விமர்சனம் : ‘ஸ்டார்’ – ஜொலிக்கிறான் | ரேட்டிங்: 3/5

0
571

ஸ்டார் சினிமா விமர்சனம் : ‘ஸ்டார்’ – ஜொலிக்கிறான் | ரேட்டிங்: 3/5

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இளன் இயக்கி இருக்கும் படம் ‘ஸ்டார்’.

நடிகர்கள் :
கவின் – கலையரசன்
லால் – பாண்டியன்
அதிதி போஹங்கர் – சுரபி
ப்ரீத்தி முகுந்தன்- மீரா மலர்கொடி
கீதா கைலாசம் -கமலா
மாறன் – அன்வர் பாய்
காதல் சுகுமார் – சுகுமார்
நிவேதிதா ராஜப்பன் – செல்வி
தீப்ஸ் – குலாபி
ராஜா ராணி பாண்டியன் – சுரபி அப்பா
சஞ்சய் ஸ்வரூப் – சன்னி வர்மா
தீரஜ் – ஆபீஸ் பாஸ்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – இளன்
எழுத்தாளர் – இளன்
ஒளிப்பதிவு – எழில் அரசு கே
இசை – யுவன் ஷங்கர் ராஜா
படத்தொகுப்பு – பிரதீப் ஈ ராகவ்
தயாரிப்பு – ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா
இணை தயாரிப்பாளர்கள் – பி ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன்
தயாரிப்பாளர்கள் – பி.விஎஸ்.என்.பிரசாத், ஸ்ரீநிதி சாகர்
எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வெளியீடு
மக்கள் தொடர்பு – யுவராஜ்

சவால்களை எதிர் கொண்டாலும் நடிகராக வேண்டும் என்ற தனது கனவை இடைவிடாமல் தொடரும் கலை என்ற இளைஞனை சுற்றியே கதைக்களம் சுழல்கிறது. கலை (கவின்) ஒரு திரைப்பட நட்சத்திரமாக ஆகவேண்டும் என்ற கனவோடு சிறு வயதிலிருந்து தனது புகைப்படக் கலைஞர் தந்தை பாண்டியனின் (லால்) ஊக்கிவிப்புடன் வளர்ந்து வருகிறார். சினிமா ஆர்வலர் மற்றும் எப்போதுமே நடிகராக வேண்டும் ஆர்வமுள்ள கலை, தலைவர் ரஜினிகாந்தின் படங்களுக்கு டிக்கெட் விற்பது முதல் அவர், விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் கட்அவுட்டுகளுடன் படங்கள் எடுப்பது வரை அனைத்தையும் செய்கிறார். அவரது தாய் கமலா (கீதா கைலாசம்) மகனின் கனவுக்கு ஆதரவாக இல்லாததால் அவரால் விஸ்காம் சேர முடியவில்லை. மாறாக அவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு அவர் தனது நண்பர்கள் மற்றும் காதலி மீராவின் (ப்ரீத்தி முகுந்தன்) பெரும் ஆதரவுடன் நடிப்பை நோக்கிச் செயல்படத் தொடங்குகிறார். நடிப்பு பற்றி பயில மும்பையில் உள்ள ஒரு பயிற்சி பட்டறையின் ஆடிஷனுக்காக கலை செல்கிறார், அங்குள்ள பொறுப்பாளரால் நிராகரிக்கப்படுகிறார். அவர் நம்பிய அளவுக்கு நடிப்பு அவருக்கு உண்மையில் புரியவில்லை என்பதை உணர்ந்த பிறகு, பல போராட்டங்களுக்குப் பின் கலை தன் லட்சியத்தை அடையும் வேளையில், படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லும் போது நடக்கும் கார் விபத்தில் முகத்தில் காயம் ஏற்பட்டு அவரது தன்னம்பிக்கையை குலைத்து, சினிமாவை விட்டு விலகச் செய்து தனது கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அதன் பின் கலையின்  வாழ்க்கையில் சுரபி (அதிதி போஹங்கர்) வருகைக்கு பின் அவர் மீண்டும் தனது விருப்பத்திற்கு எவ்வாறு செல்கிறார். தனது விருப்பத்திற்கு மாறுவதற்கான பயணத்தில் பல தடைகளை எதிர்கொள்ளும் கலை தனது வாழ்நாள் கனவை அடைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கலையாக கவின் அழகான பள்ளி மாணவன் மற்றும் நடிகராக வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக போராடும் முரட்டுத்தனமான கல்லூரி மாணவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போராட்டம், வலி, தோல்வி ஆகியவை நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம், டயலாக் டெலிவரி முதல் உடல் மொழி வரை அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்.

பாண்டியனாக நடித்திருக்கும் லால் தான், பாசமிகு தந்தையாக தன் நடிப்பால் எப்போதும் போல நம் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அதே போல அம்மா கமலாவாக கீதா கைலாசம் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு சில காட்சிகளில் நம் கண்களை குளமாக்குகிறார்.

மீரா மலர்க்கொடியாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் சுரபியாக அதிதி போஹங்கர் இருவரும் கதையின் நாயகிகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். கவின் உடன் அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

மாறன் (அன்வர் பாய்), காதல் சுகுமார் (சுகுமார்), நிவேதிதா ராஜப்பன் (செல்வி), தீப்ஸ் (குலாபி), ராஜா ராணி பாண்டியன் (சுரபி அப்பா), சஞ்சய் ஸ்வரூப் (சன்னி வர்மா), தீரஜ் (ஆபீஸ் பாஸ்) உட்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து, அளவான நடிப்பின் மூலம் உணர்ச்சிகரமான திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

படத்தின் ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை என்று தான் சொல்ல வேண்டும். யுவனின் இசையில் “மெலோடி” பாடல் அருமை, மற்றும் கிளைமாக்ஸ் சிங்கிள் ஷாட் காட்சியில் சிறந்த பின்னணி இசையும் படத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது.

கதை 90 மற்றும் 2000களில் நடக்கிறது. அந்த காலகட்டத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசின் பிரேம்கள் நம்மை அழைத்து சொல்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் படம் இன்னும் சற்று விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

நடிகனாக வேண்டும் என்று கனவு காணும் சிறுவன் வாழ்க்கையில் கனவுகளைத் பின்தொடர்வதற்கான அடிப்படைச் செய்தி பார்வையாளர்களிடையே வலுவாக எதிரொலிக்கிறது, மேலும் இயக்குனர் இளன் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான பந்தத்தை அழகாக திரைக்கதை மூலம் இளம் பார்வையாளர்களை கவர்கிறார்.

மொத்தத்தில் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் ‘ஸ்டார்’ – ஜொலிக்கிறான்.