ஷூ விமர்சனம்: ஷூ வேகமாக ஒடும் முயற்சியில் தடுமாறுகிறது | ரேட்டிங்: 2/5

0
144

ஷூ விமர்சனம்: ஷூ வேகமாக ஒடும் முயற்சியில் தடுமாறுகிறது | ரேட்டிங்: 2/5

நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து தயாரிக்க யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய, விஜய் டிவி பாலா, பிரியாகல்யாண், ஆண்டனி தாசன், டோனி, செம்மலர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். ஜெகப் ரத்தினராஜ், ஜெமின்ஜாம் ஐயனேத் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-சுரேஷ், பாடல்கள்-முத்தையா, சண்டை- ராக் பிரபு, பிஆர்ஒ- நிகில்.

டைம் டிராவல் ஷ_வை கண்டுபிடிக்கும் திலீபன் சோதனை முயற்சியின் போது தொலைத்து விடுகிறார். அந்த ஷூ யோகிபாபுவிடம் கிடைக்கிறது. அதே சமயம் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுமைகளுக்கு உட்படுத்தும் கும்பலிடம் சிறுமி பிரியா சிக்கிக் கொள்கிறார். எப்படி அந்த சிறுமி மற்ற குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுத்து தப்பிக்க வைக்கிறாள்? ஷூ திலீபனுக்கு மீண்டும் கிடைத்ததா? அதனை வைத்து திலீபன் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய, விஜய் டிவி பாலா, பிரியாகல்யாண், ஆண்டனி தாசன், டோனி, செம்மலர் மற்றும் பல சிறுமிகள் படத்திற்கு முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஜெகப் ரத்தினராஜ், ஜெமின்ஜாம் ஐயனேத் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ் இசையும் படத்திற்கு பலம்.

விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் இறுதிக் காட்சிக்கு தேவை.

குழந்தைகள் கடத்தல், டைம் டிராவல் ஷ_, குழந்தைகள் பாலியல் தொல்லை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் கல்யாண். இதில் எதை முதன்மையாக சொல்வது என்பதில் தடுமாறி ஷூவை தொலைத்தது போல் திரைக்கதையையும் தொலைத்து விட்டு தேடியுள்ளார் இயக்குனர் கல்யாண்.

மொத்தத்தில் நிட்கோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் தயாரிப்பில் ஷூ வேகமாக ஒடும் முயற்சியில் தடுமாறுகிறது.