ஷூட் தி குருவி விமர்சனம் : ஷூட் தி குருவி காமெடி திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
385
SHOOT THE KURUVI REVIEW

ஷூட் தி குருவி விமர்சனம் : ஷூட் தி குருவி காமெடி திரில்லர் | ரேட்டிங்: 3/5

தயாரிப்பாளர்கள் – கே.ஜே.ரமேஷ், சஞ்சீவி குமார்

கலைஞர்கள் பட்டியல்:

அர்ஜை -குருவி ராஜன்

சிவ ஷா ரா -கோவிந்த்

ஆஷிக் ஹ{சைன் – ஷெரிப்

ராஜ்குமார் ஜி – பேராசிரியர்  மித்ரன்

சுரேஷ் சக்ரவர்த்தி – துறவி

மணி வைத்தி – முன்னாள் பெண் தோழி கணவர்

சாய் பிரசன்னா – சூர்யா

ஜிப்ஸி நவீன் – ரவி

கதை திரைக்கதை இயக்கம் : மதிவாணன்

இசை : மூன்ராக்ஸ்

ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்

படதொகுப்பு : கமலக்கண்ணன் கே

கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை

ஒலி வடிவமைப்பு : ஜான் பெனியல், பூபாலன் தங்கவேல்,  பிரவீன்

பாடல்கள் : எஸ்.கே சொல்லிசை கவிஞன்

சண்டை பயிற்சி : ஓம் பிரகாஷ்

ஆடை வடிவமைப்பு : பூர்வா ஜெயின்

விளம்பர வடிவமைப்பு : NஓவுபுநுN ராகுல் னநளபைளெ

தயாரிப்பு மேற்பார்வை : பி. செல்லதுரை

தலைமை தயாரிப்பு மேற்பார்வை : எஸ். சேதுராமலிங்கம்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

கதை:
2032 மங்க@ரில் உள்ள கல்லூரியில் 2032-ல் பிரபல ரவுடியும் கொலையாளியுமான குருவி ராஜன் பற்றி ஆராய்ச்சி செற்கிறார்கள். அவர்களுக்கு போதுமான தகவல் கிடைக்காததால் ஏற்கனவே குருவி ராஜன் பற்றி புத்தகம் எழுதிய பிரபல பேராசிரியரிடம் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். முதலில் மறுக்கும பேராசிரியர் மாணவர்கள் ஒரு கிழிக்கப்பட்ட புகைப்பட துண்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்து குருவி ராஜான் கதையை சொல்கிறார். சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு பயங்கர கொலைக்காரன் குருவி ராஜான். இன்னொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஷெரிப். அவரது கனவில் தோன்றும் துறவி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார். அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக குருவி ராஜான் ஒரு கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே ஷெரிப் தாக்கி விடுகிறார். அதன்பிறகு, இவர்கள் வாழ்வில் என்ன நடந்தது? துறவி சொன்ன அந்த 5 டார்கெட்டுகள் என்ன? அதை ஷெரிப்  செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அர்ஜை குருவி ராஜன் மிரட்டலான காபாத்திரத்திலும், ஆஷிக் ஹ{சைன் – ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஷிக் ஹ{சைன், மற்றும் கோவிந்த் கதாபாத்திரத்தில் ஷா ரா இருவரும் நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
பேராசிரியராக வரும் ராஜ்குமார் ஜி, துறவியாக சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்சி நவீன் என அனைத்து நடிகர்களும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நல்ல தேர்வு.

தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் ஒரே அறைக்குள் பெரும் பகுதியை கட்சிதமாக காட்சிப்படுத்திய பிரண்டன் சுஷாந்த்தி ஒளிப்பதிவு, கமலக்கண்ணன்.கே யின் படதொகுப்பு, சரவணன் பிரான்மலை கலை, ஜான் பெனியல், பூபாலன் தங்கவேல்,  பிரவீன் ஒலி வடிவமைப்பு, எஸ்.கே சொல்லிசை கவிஞன் பாடல்கள், ஓம் பிரகாஷ் சண்டை அமைப்பு, பூர்வா ஜெயின் ஆடை வடிவமைப்பு மூன்ராக்ஸின் இசை ஆகியோரின் பங்களிப்பு ஆக்ஷன் படத்திற்கான உணர்வை எளிதாக எற்படுத்துகிறது.
காமெடி கலந்த க்ரைம் கதையில் ட்விஸ்ட் கலந்து சுவாரசியமான திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் படி இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவாணன்.

மொத்தத்தில் கே.ஜே.ரமேஷ், சஞ்சீவி குமார் தயாரித்திருக்கும் ஷூட் தி குருவி காமெடி திரில்லர்.