ஷாட் பூட் த்ரீ விமர்சனம் : ஷாட் பூட் த்ரீ குழந்தைகளுடன் காண வேண்டிய பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 2.5/5

0
317

ஷாட் பூட் த்ரீ விமர்சனம் : ஷாட் பூட் த்ரீ குழந்தைகளுடன் காண வேண்டிய பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 2.5/5

யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ

இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹுட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா ஆகியோர் நடித்துள்ளனர். நான்கு குழந்தைகளுடன் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ‘மேக்ஸ்’ நடித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு- சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை-ராஜேஷ் வைத்தியா, எடிட்டிங்-பரத் விக்ரமன், கலை- ஆறுசாமி, சண்டை-சுதேஷ், நிர்வாக மேற்பார்வை-அருண்ராம் கலைச்செல்வன்,  நிர்வாக தயாரிப்பு- வெங்கடேஷ்  சடகோபன், இணை தயாரிப்பு-முகில் சந்திரன், தயாரிப்பு நிர்வாகி- கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன், பிஆர்ஒ- நிகில்.

ஒரு நாயின் மீது அதீத பாசம் கொண்ட ஒரு சிறுவன் கதையைச் சொல்கிறது “ஷாட் பூட் த்ரீ”. கைலாஷ் ஒரு நாயை வளர்க்க விரும்புகிறார், ஆனால் அவரது தாயார் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். கைலாஷ் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களான பல்லவி மற்றும் பல்லுவின் உதவியுடன் மேக்ஸ் என்ற செல்ல நாயைப் பிறந்தநாள் பரிசாக பெறுகிறார். அம்மாவுக்கு விஷயம் தெரிய வர, முதலில் மறுக்கிறார். பின்னர் கைலாஷ் மேக்ஸ் வளர்க்க சம்மதிக்கிறார். பிறந்தநாள் அன்று கைலாஷின் அம்மா அப்பா வேலை விஷயமாக அருகில் உள்ள ஊருக்கு செல்கிறார்கள். வீட்டில் கைலாஷ் மற்றும்  அவனது நண்பர்களான பல்லவி மற்றும் பல்லு மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேக்ஸ் காணாமல் போகிறது. கைலாஷும் அவனது நண்பர்களும் மேக்ஸை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இதனிடையே தெரு நாய்கள் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வருகிறது. அதனால் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் பிடித்து கொன்று விட மாநகராட்சியின் நாய் வண்டி வலம் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? காணாமல் போன மேக்ஸ் என்ன ஆனது? மேக்ஸ் திரும்ப கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

அம்மா சியாமளாவாக சினேகா, தந்தை சுவாமிநாதனாக வெங்கட் பிரபு, தல குமாராக யோகி பாபு, பூவையார் ரமணனாக, பல்லவியாக ப்ரணிதி, கைலாசமாக கைலாஷ் ஹீட், பல்லுவாக வேதாந்த் வசந்தா, மருத்துவர் சேகராக அருணாசலம் வைத்தியநாதா, பைரவாவாக சாய் தீனா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக நான்கு குழந்தை நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பு அனைவரின் மனதை நெகிழ வைக்கும். கதையின் நாயகனாக மேக்ஸ் என்கிற நாயின் பங்களிப்பு கூடுதல் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்தியா இசை மற்றும் பின்னணி இசை, எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோரின் கச்சிதமான தொழில்நுட்ப பங்களிப்பு, பெரிய அடுக்குமாடி குடியிருப்பு அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை, சுவாரஸ்யமாக நகர பலமாக அமைந்துள்ளது.

ஷாட் பூட் த்ரீ ஒரு மனதைக் கவரும் கதையைக் கொண்டுள்ளது. பணம் மற்றும் பதவி மட்டுமே முக்கியம் என்று என்னும் மக்கள் ஒரு சில மணிநேரம் தங்கள் குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டிய முக்கியத்தை சொல்வதுடன், அன்பு, பச்சாதாபம். பாசம் மற்றும் விலங்குகள் பராமரிப்பின் முக்கியத்துவம் போன்ற அம்சங்களை திரைக்கதையாக அமைத்து ஒரு மனதைக் கவரும் கதையைக் படைத்துள்ளார் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் – அருணாச்சலம் வைத்தியநாதன்.

மொத்தத்தில் யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ குழந்தைகளுடன் காண வேண்டிய பொழுதுபோக்கு சித்திரம்.