வேட்டையன் சினிமா விமர்சனம் : வேட்டையன் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு க்ரைம் ஆக்ஷன் திரில்லர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:-
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி எம் சுந்தர், அபிராமி, ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன்
படக்குழு:-
எழுத்து மற்றும் இயக்கம் : டி.ஜே.ஞானவேல்
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர் : எஸ்.ஆர்.கதிர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : கே.கதிர்
சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
திரைக்கதை : பா. கிருத்திகா
கலை இயக்குனர் : சக்தீ வெங்கட்ராஜ்
நடன இயக்குனர் : தினேஷ்
ஆடை வடிவமைப்பு : பெருமாள் செல்வம், அனு வர்தன், தினேஷ் மனோகரன்
இணை இயக்குனர்கள் : மகேந்திரன், செந்தில்குமார் கேசவன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் மு அஹ்மத், சதீஷ் (ஏய்ம்)
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ் பி அதியன் (ரஜினிகாந்த்) தார்மீகக் கோடுகளைக் கடந்தாலும் நீதி வழங்குவதில் நம்பிக்கை கொண்டவர். ‘தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று நம்புகிறார். அநீதிக்கு எதிராக உறுதியாக நிற்கும் துணிச்சலான அரசுப் பள்ளி ஆசிரியை சந்தியாவை (துஷாரா விஜயன்) சந்திக்கும் போது அவரது வாழ்க்கை ஒரு கொந்தளிப்பான திருப்பத்தை எடுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் அவள் கொலை செய்யப்படுகிறாள். அரசுப் பள்ளி ஆசிரியை சந்தியாவின் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குக்கு அவசரமாக நீதி வழங்க முயலும் போது, ஊடகங்கள், அரசியல் மற்றும் பொது அழுத்தங்களுக்கு அடிபணிந்து, ஒரு அப்பாவி மனிதனை குற்றவாளி என்று நினைத்து அதியன் கொன்றுவிடுகிறார். மனித உரிமைகளுக்காக போராடும் நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்), என்கவுண்டர் கொலைகளுக்கு எதிரானவர், மேலும் ‘அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி’ என்று நம்புகிறார். சத்யதேவ் அதியனை உண்மையுடன் எதிர்கொள்ளும் போது, பேரழிவிற்குள்ளான அதியன் சந்தியாவின் உண்மையான கொலையாளியை கண்டுபிடித்து, தன்னால் கொல்லப்பட்டவன் ஒரு அப்பாவி என நிரூபித்து நீதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆயத்தமாகும் போது அதிகாரம் மற்றும் அரசியல் பலம் கொண்ட ஒரு பெரும் புள்ளி நடராஜ் (ராணா டக்குபதி) இந்த கொலைச் சம்பவத்திற்குப் தொடர்பு உள்ளதை அறிகிறார். சந்தியாவை கொன்றது யார்? ஒரு அப்பாவியின் மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு வழக்கில் கவனக்குறைவாக அதியன் எப்படி சிக்கினார்? உண்மையான குற்றவாளியை அம்பலப்படுத்த அவர் என்ன செய்வார்? மேலும் நடராஜ் (ராணா டக்குபதி) கதையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளார்? போன்ற கேள்விகளுக்கு வேட்டையன் பதில் சொல்லும்.
வலிமையான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினிகாந்தின் சித்தரிப்பு வழக்கம் போல், வசீகரமாக உள்ளது. அவர் ஒரு பெரிய தவறை ஒப்புக் கொள்ளும் ஒரு பாத்திரத்தில், அவரது வழக்கமான ஸ்டைல் மற்றும் மென்மையான வெகுஜன தருணங்கள் மற்றும் சென்ட்டிமெண்ட் காட்சிகளில் ஜொலிக்கிறார். அதிரடி காட்சிகளில் மட்டும் அவரது இருப்பு சரியாக ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது.
அமிதாப் பச்சனும் ஒரு சக்திவாய்ந்த பங்கை வழங்கி தனது பாத்திரத்தில் தன்னை ஆழமாக மூழ்கடித்து, கதைக்கு ஈர்ப்பு சேர்க்கிறார்.
ராணா டகுபதி, ஒரு சாதுரியமான தொழிலதிபர், கல்வி முறையை பணமாக்குவதை நோக்கமாகக் கொண்டவராக பெரிய அளவில் மெருகேற்றப்படாத அழுத்தம் இல்லாத வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
ஒரு புத்திசாலித்தனமான, தந்திரமான முன்னாள் திருடன் பேட்ரிக் அலியாஸ் பேட்டரி (ஃபஹத் ஃபாசில்) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ் பி அதியனுக்கு மிகவும் நம்பகமான இன்ஃபார்மர் மற்றும் தொழில்நுட்ப நிபுணராக கலக்கி உள்ளார். மிக சுவாரசியமான அவரது கதாபாத்திரம் பல காட்சிகளுக்கு நகைச்சுவையையும் தந்து கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
திரைக்கதையின் வலுவான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
யூடியூப் சேனல் நடத்தும் ரஜினிகாந்தின் மனைவியாக மஞ்சு வாரியர் கதாபாத்திரம் படத்தில் வீணடிக்கப்பட்டு உள்ளது.
அபிராமி, ரோகிணி, கிஷோர், ஜி எம் சுந்தர், ரமேஷ் திலக், ரக்ஷன் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
அனிருத்தின் பின்னணி இசை படத்தை அசைபோட வைக்கிறது. எமோஷனல் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆழம் தேவைப்பட்டது.
ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர், சண்டைப் பயிற்சி அன்பறிவ், பிலோமின் ராஜ், கலை இயக்குனர் சக்தீ வெங்கட்ராஜ், நடன இயக்குனர், தினேஷ் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுடன் புலனாய்வு திரில்லிங்கான திரைக்கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கி உள்ளார் இயக்குனர் டி.ஜே.ஞானவேல்.
மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள வேட்டையன் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு க்ரைம் ஆக்ஷன் திரில்லர்.