வெப்பன் சினிமா விமர்சனம் : வெப்பன் கூர்மை இல்லை | ரேட்டிங்: 2.5/5

0
810

வெப்பன் சினிமா விமர்சனம் : வெப்பன் கூர்மை இல்லை | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் : சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா, மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – மில்லியன் ஸ்டுடியோ
இயக்கம் – குகன் சென்னியப்பன்
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – பிரபு ராகவ்
எடிட்டிங் – கோபி கிருஷ்ணா
ஸ்டண்ட் – சுதேஷ்
மக்கள் தொடர்பு : டிஒன், அப்துல் நாசர்.

இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கு வருகை தந்தபோது இந்தியாவில் முடிவடையும் நாஜிகளால் உருவாக்கப்பட்ட மனிதநேயமற்ற சூப்பர் ஹியுமன் சீரம் பற்றிய மாற்று கற்பனை வரலாற்றைப் பற்றிய விவரிப்புடன் தொடங்குகிறது. போஸ் அதன் விபரீத விளைவுகள் காரணமாக அந்த யோசனையை  நிராகரிக்க அவருடன் சென்ற மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் சீரத்துடன் இந்தியா வருகிறார். அவரது மரணத்தின் போது நாஜிகளிடம் இந்த சீரம் கிடைக்க கூடாது என்று அதை தனது மகனுக்கு செலுத்திவிட்டு இறந்துபோகிறார். அதன் பின், அக்னி (வசந்த் ரவி) என்ற யூடியூபர் ஒரு சிறுவனின் அமானுஷ்ய திறன்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரும் தேடலுடன் தொடர்கிறது. முகமூடி அணிந்த மனிதன் அக்னியை சிறைபிடித்து விசாரிக்கப்படும்  ஃப்ளாஷ் பேக் காட்சிகளுடன் நேரியல் அல்லாத பாணியில் கதை விரிவடைகிறது. இதற்கிடையில், டி கே (ராஜீவ் மேனன்), பிளாக் சொசைட்டி பிரிவு 9 க்கு தலைமை தாங்குகிறார். இது செல்வந்தர்கள் மற்றும் அதிகார வெறி கொண்ட நபர்களைக் கொண்ட இந்த சமூகம், மனிதநேயமற்ற சக்திகளின் பலத்தை சுரண்ட முயல்கிறது. தேனியில் நடந்த ஒரு அதிசய நிகழ்வை அறிந்து தன் சேனலுக்காக கண்டெண்ட் வேண்டும் என்று அக்னி தன் குழுவினருடன் பயணிக்க, மற்றொரு புறம் அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து டி கே தன் ஆட்களுடன் சூப்பர் ஹியூமன் பிடிக்க பயணிக்கிறார். அதே நேரத்தில் தேனியில் காட்டுக்குள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும் சத்யராஜ் யார்? எதற்காக காட்டுக்குள் வாழ்கிறார்? யார் இந்த சூப்பர் ஹியூமன்? போன்ற கேள்விகளுக்கு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரஸ்யம் இல்லாத பதிலுடன் கதை நகர்கிறது.

வசந்த் ரவி தீவிரமான அக்னியாக முதல் பாதியில் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஓர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இரண்டாம் பாதியில் வரும் சத்யராஜ், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையை நேர்த்தியான நடிப்பால் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்.

வில்லனாக டி கே கதாபாத்திரத்தில் ராஜீவ் மேனன் துளியும் எடுபடவில்லை.
தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா, மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன் ஆகிய துணை கதாபாத்திரங்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு, சுதேஷ் ஸ்டண்ட், ஜிப்ரானின் இசை மற்றும் பின்னணி இசை தொழில்நுட்ப ரீதியாக பாராட்டும்படி உள்ளது.

எடிட்டர் கோபி கிருஷ்ணா குழப்பத்துடனும் தெளிவின்மையுடனும் நேரியல் அல்லாத பாணியில் எடிட் செய்துள்ளார்.

அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் சூப்பர் ஹியூமன் விஷயத்தை வைத்து தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஹாலிவுட் தரத்திற்கு படத்தை வழங்கிய இயக்குனர் குகன் சென்னியப்பன் திரைக்கதையில் கோட்டை விட்டதால் பார்வையாளர்களை ஈர்க்க தவறிவிட்டது. இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுக்கப்பட்டு முடித்திருக்கும் அவர் முதல் பாகத்தில் செய்த தவறுகளை சரி செய்து இரண்டாம் பாகத்தை விறுவிறுப்புடன் படைப்பார் என நம்புவோம்.

மொத்தத்தில் மில்லியன் ஸ்டுடியோ தயாரிக்கும் வெப்பன் கூர்மை இல்லை.