வீராயி மக்கள் விமர்சனம் : வீராயி மக்கள் உணர்ச்சிகள் நிறைந்த குடும்ப ஒற்றுமையை உடைக்கும் பாசிகளும், வக்கிரங்களும் தங்கியிருக்கும் மனதிலிருந்து ஈரத்தையும், கண்ணீரையும் மீட்டெடுக்கும் | ரேட்டிங்: 3/5
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா.
இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன், பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ்.
அறந்தாங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் கணவனை இழந்த வீராயி (பாண்டி அக்கா) தனது 4 பிள்ளைகளை பாடு பட்டு பாசத்துடன் வளர்க்கிறார். மூத்த மகன் வேல.ராமமூர்த்தியும் ஒரு தந்தை போல் தனது 2 தம்பி ம்றறும் சகோதரி (தீபா ஷங்கர்) பாசத்துடன் அன்போடு வளர்க்கிறார். அதன்பின் வழக்கம் போல திருமணத்திற்கு பிறகு இரண்டாவது மருமகள் (செந்தி குமாரி) தன் மாமியார் மூத்த மருமகள் (ரமா) உயர்வாகவும், தன்னை இழிவாக நடத்துவதாக எண்ணி மூத்த மருமகள் மேல் உள்ள பொறாமையால் குடும்பத்தில் சண்டை ஏற்படுகிறது. ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகள் உறவில் விரிசல் ஏற்பட்டு பஞ்சாயத்து வரை சென்று அனைவரும் பிரிகிறார்கள். தம்பி மாரிமுத்து அவரது மனைவி செந்தி குமாரி குழந்தைகளுடன் தனி வீட்டில் வசிக்கிறார்கள். நாளுக்கு நாள் செந்தி குமாரி வேல.ராமமூர்த்தியின் குடும்பத்தினரை அவமானம் படுத்தும் வகையில் வசைபாடுகிறார். இந்நிலையில், வெளியூரிலிருந்து வேல.ராமமூர்த்தியின் மகன் அய்யனார் (சுரேஷ் நந்தா) தனது கிராமத்திற்கு வந்த போது, அவரது குடும்பத்தாருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் அவரது சித்தப்பா மாரிமுத்து சித்தி செந்தி குமாரி வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே சண்டை நடப்பதைக் காண்கிறார். குடும்பத்தில் அனைவரும் மீண்டும் ஒன்று சேர அய்யனார் முயற்சிக்கிறார். அப்போது ஒரு நாள் அய்யனார் கோபத்தில் தனது தந்தையிடம் குடும்பம் பிரிவுக்கு அவர் தான் காரணம் என்று கூறுகிறார். மகன் அய்யனார் கூறியதை கேட்ட தாய் ரமா அவனிடம், அவனுடைய தந்தை மற்றும் பாட்டி வீராயி மக்கள் பற்றிய பின்னணிக் கதையுடன் அவர் விவரிக்கும் போது அதில் நடக்கும் ஒரு சம்பவத்தால் அவர்களின் குடும்பம் எப்படி சிதறியது என்பதை அறிந்து கொள்கிறார். வீராயி யார்? சகோதரர்களுக்கும் சகோதரிக்கு இடையே பிளவை ஏற்படுத்துவது என்ன? வீராயி மக்கள் எப்படி மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் மீதிக்கதை.
ராமமூர்த்தி, மாரிமுத்து, ‘வீராயி’பாண்டி அக்கா, சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, தீபா ஷங்கர், ஜெரால்டு மில்டன் உள்ளிட்ட அனைவரும் தனித்துவம் வாய்ந்த மன மற்றும் தார்மீக குணங்கள் கொண்ட குடும்ப ஆளுமையின் அதே கதாபாத்திரத்தில் குடியிருந்து கிராமத்து மக்களின் உணர்ச்சிகளை திரையில் கொண்டு வருவதில் அனைவரும் எளிதில் வெற்றி பெற்றுள்ளனர்.
எம்.சீனிவாசனின் ஒளிப்பதிவில் படம் முழுக்கக் காட்சியமைப்புகள் அவ்வளவு இயல்பாக இருந்தது. கிராமத்து உணர்வைப் படம் முழுக்கப் பின்னணி இசையாக தூவி இருந்தார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, மற்றும் எடிட்டர் முகன் ரத்த சொந்தங்கள் அன்பையும், பாசத்தையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம்.
மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியுடன் நெருங்கிய குடும்பம் மண்ணுக்கும் மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவுகளையும், பதட்டங்களும் எதிர்கொள்கிறது. இறுதியில் குடும்பத்தில் ஒரு சோகத்தைத் தாக்கிய பிறகு மன்னிப்பு மூலம் மீண்டும் ஒன்றிணைக்கிறது, குடும்ப பிணைப்புகளின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. திரைக்கதையின் பெரிய பலமே ஒவ்வொரு தனிநபரும் இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு தங்களை தாராளமாகப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்ததுதான்.
மொத்தத்தில் ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் உணர்ச்சிகள் நிறைந்த குடும்ப ஒற்றுமையை உடைக்கும் பாசிகளும், வக்கிரங்களும் தங்கியிருக்கும் மனதிலிருந்து ஈரத்தையும், கண்ணீரையும் மீட்டெடுக்கும்.