விரூபாக்ஷா திரைவிமர்சனம்: விரூபாக்ஷா திகில், த்ரில், சஸ்பென்ஸ் கலந்து திருப்பங்களுடன் கூடிய வித்தியாசமான த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் விரூபாக்ஷா திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்ஷா’.
இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா, சுனில் , ராஜீவ் கனகலா, பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய், கமல் காமராஜு, சாய் சந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சம்ஹத் சாய்நூதீன், இசை – ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத், திரைக்கதை- சுகுமார், தமிழ் பதிப்பிற்கு வசனம்- என்.பிரபாகர், எடிட்டிங்-நவின் நூலி, மக்கள் தொடர்பு – யுவராஜ்.
1979ல் தொடங்கும் கதைக்களத்தில் ருத்ரவன கிராமத்தில் இருக்கும்; குழந்தைகள் திடீரென்று இறக்கின்றனர். அதே சமயம் ஒரு வீட்டில் இருக்கும் தம்பதி ஒரு பெண் குழந்தையை வைத்து மாந்திரீக பூஜையில் ஈடுபடுவதை பார்க்கும் கிராமத்து மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்வினை செய்தவர்கள் இவர்கள் என்று நினைத்து மற்ற குழந்தைகளை காப்பாற்ற அவர்களை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து தீயீட்டு கொலுத்தி விட இறக்கும் தருவாயில் அந்தப்பெண் ஒரு சாபத்தை கொடுக்கிறாள். அதன் பின் 12 வருடங்களுக்கு பிறகு 1991ல் சூர்யா (சாய் தரம் தேஜ்), தனது தாயுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ருத்ரவன கிராமத்திற்கு வருகிறார். ருத்ரவனத்தின் ஊர் தலைவரின் மகள் நந்தினியை (சம்யுக்தா மேனன்) பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். அம்மன் கோயில் திருவிழா தொடங்கும் நேரத்தில் கருவறையில் ஒருவர் மரணமடைய, தீட்டு ஏற்பட்டுவிட்டதாக எட்டு நாட்கள் கோயில் திறக்க தடை செய்யப்பட்டு, அஷ்ட திக்பந்தனம் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு கிராம மக்கள் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நேரத்தில் தொடர்ச்சியாக நான்கு மர்மமான மரணங்கள் திடீரென்று கிராமத்தில் நடக்கின்றன, மேலும் மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ருத்ரவனத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? தொடர் மரணங்களுக்கு காரணம் என்ன? சூர்யா மர்மத்தை எப்படி அவிழ்த்தார்? அவர் உண்மையைக் கண்டுபிடிப்பாரா? இதையெல்லாம் செய்வது யார்? நந்தினி பாதிக்கப்பட காரணம் என்ன? நந்தினியின் குடும்பம் எது? நந்தினி கிராமத்தினருக்கு எதிரியாக மாறியது ஏன்? கிராமத்தினரை பழி வாங்கும் சாபம் என்ன? என்பதே விருபாக்ஷாவின் அதிர வைக்கும் முடிவு.
சாய் தரம் தேஜ் முதல் முறையாக விருபாக்ஷாவுடன் திரில்லர் வகையை முயற்சித்து சூர்யாவாக தனது வாழ்க்கையில் சிறந்த நடிப்பை வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல புதுபிரவேசம். அவரது கிளாசிக் விண்டேஜ் தோற்றத்துடன், முதல் பாதி ரொமன்டிக் ஹீரோவாக வந்து அதன் பின் மர்மத்தை கண்டுபிடிக்கும் ரோலில் வித்தியாசத்தை காட்டி அசத்தியுள்ளார்.
சம்யுக்தா மேனன் ஒரு அற்புதமான முக்கிய கதாபாத்திரத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நந்தினியாக அவர் காதல் பாதையில் மட்டுமல்ல, கிராமத்து பெண்ணாக அவரது தோற்றம் மற்றும் அவரது நடிப்பு சுவாரசியமாக இருக்கிறது. அவர் வலிப்பு நோயால் அவதிப்படும் போதும், மாந்தீரிக சக்தி ஆட்கொள்ளப்படும் போதும் ஏற்படுத்தும் மாற்றங்களை திறம்பட காட்சிப்படுத்தி பயமுறுத்தி அழகான ராட்சசியாக மிளிர்கிறார்.
ராஜீவ் கனகலாவுக்கு வழக்கமான ரோல் கிடைத்துள்ளது. அஜய் அகோராவாக நம்மை வசீகரிக்கிறார். சாய் சந்த், அபினவ் கோமதம், சோனியா சிங், ரவிகிருஷ்ணா, கமல் காமராஜு ஆகியோர் கொடுத்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். சுனில் தொடக்கத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றினாலும் கதை முன்னோக்கி செல்லும்போது முக்கியத்துவத்தை இழக்கிறார்.
இது தொழில்நுட்ப மதிப்புகளில் உயர்ந்தது. விருபாக்ஷாவின் இரண்டாவது ஹீரோ அஜனீஷ் லோக்நாத் இசை என்று சொன்னால் அது மிகையாகாது. கதையின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட இத்தகைய உற்சாகமூட்டும் ஒலி விளைவுகளுக்காக குழுவிற்கு பாராட்டுக்கள். விருபாக்ஷாவில் உள்ள ஒலி விளைவுகள் த்ரில் மற்றும் பயமுறுத்துவது உறுதி.இந்த ஒலி விளைவுகளின் உதவியுடன் அற்புதமாக இயக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் உள்ளன.
சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு பிரமாதம் மற்றும் தேவையான ஆழத்தை அளிக்கிறது.அற்புதமான காட்சிகள். கதையின் பெரும்பகுதி இரவிலும் காட்டிலும் நடக்கிறது. மற்றும் பிறருடன் சேர்ந்து படத்திற்காக இவர் உழைத்த அனைத்து உழைப்பிற்காகவும் பாராட்டப்பட வேண்டும். நவின் நூலி எடிட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
‘விரூபாக்ஷா’ 1990 களில் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டு ஒரு முழு கிராமமும் சூனியத்தால் பாதிக்கப்படுவதைக் கதை சித்தரிக்கிறது. ஒரு கிராமத்தில் தண்டிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து ஒரு வாரிசு பழிவாங்கும் செயலுக்காக வருவது விருபாக்ஷாவைப் பற்றிய கதைக்களம். திறனைப் பெறுகிறது.நல்ல கதைக்களம், நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு, துடிப்புடன் கூடிய ஒலி விளைவுகள் மற்றும் நேர்த்தியான கார்த்திக் வர்மா தண்டு இயக்கம் ஆகியவை இதன் துருப்புச் சீட்டுகளாகும். லவ் ட்ராக்கின் வழக்கமான தன்மையும் இங்குள்ள பாடலும் படத்தின் ஓட்டத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக வருகிறது. கதையை எழுதிய விதமும், எழுத்தின் ஆழமும் அருமை. கார்த்திக் வர்மா தண்டு தனது கதையை திரையில் திறம்பட முன்வைக்க தொழில்நுட்ப மதிப்புகளை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார். அஷ்ட திக்பந்தனத்தின் கூறுகளும், நான்கு மர்மமான மரணங்கள் மற்றும் ரயில் விபத்து பற்றிய சில்லிட்ட சித்தரிப்பு ஆகியவை இந்த த்ரில்லருக்கு தொனியை அமைத்தன. படத்தின் எந்த ஒரு காட்சியும், எந்த நொடியும் நமக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் கதையை இறுக்கமான திரைக்கதையுடன் எடுத்துரைப்பதில் இயக்குனர் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்தந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்து. ட்விஸ்ட்களை யூகிக்க முடியாத வகையில் இயக்குனர் காட்டிய விதத்தை பாராட்ட வேண்டும், ஒவ்வொரு முறையும் ட்விஸ்ட் வெளிப்படும் போது குறிப்பாக கிளைமாக்ஸ் நீங்கள் எதிர்பார்த்ததை விட மிக அருமையாக கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு.
மொத்தத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் விரூபாக்ஷா திகில், த்ரில், சஸ்பென்ஸ் கலந்து திருப்பங்களுடன் கூடிய வித்தியாசமான த்ரில்லர்.