விருந்து விமர்சனம் : விருந்து திருப்புமுனையுடன் த்ரில்லிங் கலந்த அறுசுவை | ரேட்டிங்: 3/5

0
368

விருந்து விமர்சனம் : விருந்து திருப்புமுனையுடன் த்ரில்லிங் கலந்த அறுசுவை | ரேட்டிங்: 3/5

நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாமர கண்ணன்.

இதில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர்,  ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்: தினேஷ் பள்ளத், இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ்  பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா, மக்கள் தொடர்பு – சரண்.

ஜான்(முகேஷ்) நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபர், தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மலைப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். ஆறு மாதங்கள் கழித்து ஜானின் மனைவி எலிசபெத்திற்கு வாகன விபத்து ஏற்பட, இறக்கும் தருவாயில் காப்பாற்ற வரும் ஆட்டோ டிரைவர் ஹேமந்த்திடம் (கிரிஷ் நெய்யர்) கொலைக்கான காரணத்தை சொல்லி விட்டு உயிரை விடுகிறார். ஹேமந்த் எலிசபெத்தின் மகள் பெர்லி ( நிக்கி கல்ராணி) மற்றும் மாமா பாலனை தேடி கண்டுபிடித்து எலிசபெத் சொன்ன விஷயத்தை சொல்கிறார். அதே சமயம் பெர்லியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த பாலன், ஹேமந்துடன் மலைப்பிரதேசத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு பெர்லியை அனுப்பி வைக்கிறார். அங்கேயும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த வாகனத்தில் தப்பிக்கும் இருவரையும் விடாமல் துரத்துகின்றனர். இருவரையும் நிதி ஆலோசகர் தேவன் (அர்ஜுன்) காப்பாற்றி தன் வீட்டில் தங்க வைக்கிறார். அதன்பின் பெர்லி தேவனின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு அவரை கொல்ல முயற்சிக்கிறார். பெர்லியின் கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கும் தேவன், பெர்லியை சமாதானம் செய்து தன் நோக்கத்தை தெரிவிக்கிறார். தேவன் பெர்லியிடம் சொன்ன தகவல்கள் என்ன? பெர்லியும், தேவனும், ஹேமந்தும் சேர்ந்து மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்தார்களா?  எதற்காக கொலைவெறி தாக்குதல்கள் பெர்லியின் பெற்றோர்கள் மீதி நடத்தினார்கள்? எதற்காக? பெர்லிக்கும் மர்ம கும்பலுக்கும் தொடர்பு என்ன? என்பதே படத்தின் சந்தேகங்கள் சூழ்ந்த திருப்புமுனை.

அர்ஜுன் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், கொலை முயற்சியிலிருந்து தப்பித்து சண்டையிடுவது, க்ளைமேக்ஸ் காட்சியில் பல புரியாத புதிர்களுக்கு கொடுக்கும் விளக்கத்தால் படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்து சிறப்பாக செய்துள்ளார்.

பெற்றோர்களை இழந்து தவிக்கும் மகளாக நிக்கி கல்ராணி தன் துயரத்திற்கு காரணமானவர்களை தேடிச் செல்வதும், சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பதும், இறுதியில் உண்மையான குற்றவாளியை கண்டு திடுக்கிடும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

மற்றும் தயாரிப்பாளர்  கிரீஷ் நெய்யர்  ஆட்டோ டிரைவர் ஹேமந்தாக முக்கிய சாட்சியாக படம் முழுவதும் அவருடைய கதாபாத்திரம் வருமாறு பார்த்துக் கொள்கிறார்.

வில்லனாக ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் ஆகியோர் படத்தின் கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ், பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு த்ரில்லர் படத்திற்கான பங்களிப்பை நேர்த்தியுடன் கையாண்டுள்ளனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கும் தாமர கண்ணன் நாம் பத்திரிகை செய்திகளாக படித்து விட்டு கடந்து போகும் பல கசப்பான சம்பவங்களை காட்சிகளாக நம் கண்முன் நிறுத்தியுள்ளார். அதில்; வெளியுலகின் காட்சிகளை மட்டுமே பார்த்து பழகியவர்கள், அவர்கள் முன் காணாத உலகம் இருப்பதாகவும், பல மர்மமான விஷயங்கள் சாத்தான், நரபலி போன்றவற்றை நம்பி தனி உலகமாக வாழும் மனிதர்களின் நடவடிக்கைகள், பழி வாங்குதல் கலந்து த்ரில்லராக கதைக்களத்தை கொண்டு சென்று நேர்மறையாக திடுக் திருப்பங்களுடன் கதையை முடித்துள்ளார் இயக்குனர் தாமர கண்ணன்.

மொத்தத்தில் நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து திருப்புமுனையுடன் த்ரில்லிங் கலந்த அறுசுவை.