விமானம் சினிமா விமர்சனம் : விமானம் ஒரு உணர்வுபூர்வமான பாச பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
388

விமானம் சினிமா விமர்சனம் : விமானம் ஒரு உணர்வுபூர்வமான பாச பயணம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்
சமுத்திரக்கனி – வீரையா
மாஸ்டர் துருவன் – ராஜு
மீரா ஜாஸ்மின் – ஸ்வேதா
அனசுயா பரத்வாஜ் – சுமதி
தன்ராஜ் – டேனியல்
ராகுல் ராமகிருஷ்ணா – குட்டி
நான் கடவுள் ராஜேந்திரன் – ராஜேந்திரன்
தொழில் நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர்: சிவ பிரசாத் யானாலா
தயாரிப்பு: கிரண் கொரபதி  & ZEE ஸ்டுடியோஸ்
இசை: சரண் அர்ஜுன்
ஒளிப்பதிவு இயக்குனர்: விவேக் கலேபு
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்
வசனங்கள்: பிரபாகர்
கலை இயக்குனர்: ஜே. கே. மூர்த்தி
பாடலாசிரியர்: சிநேகன்
இணை தயாரிப்பாளர்: வீணா கொரபதி
நிர்வாக தயாரிப்பாளர்: ஹனுமந்த் ராவ் போயபதி
மக்கள் தொடர்பு : யுவராஜ்வீரய்யா (சமுத்திரக்கனி) என்ற ஊனமுற்ற மனிதர், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலனியில் பொது கழிப்பறை வளாகம் ஒன்றை கவனித்து வருகிறார். உடல் ஊனமுற்றவராக இருந்தாலும், முச்சக்கர வண்டி ஓட்டி தன்னிறைவாக வாழ்க்கை வாழ்பவர் வீரய்யா. அவர் சமுதாய கழிப்பறையை சுத்தம் செய்து நிர்வகித்து மகன் ராஜுவை (மாஸ்டர் துருவன்) நேர்மையான கடின உழைப்பால் வளர்க்கும் கதைதான் விமானம். ராஜு புத்திசாலி மட்டுமல்ல நல்ல நடத்தை கொண்ட குழந்தை,  விமானங்களில் அதிக ஈடுபாடு கொண்டு எப்போதும் விமானப் பயணத்தை பற்றி கனவு காண்பவர். ராஜுவின் மிகப்பெரிய கனவு விமானத்தில் ஏறி வானத்தில் உயரப் பறப்பது. தொடர்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். ஆட்டோ டிரைவர் தன்ராஜ் (டேனியல்), அவரது மகன் ஐன்ஸ்டீன், செருப்புத் தொழிலாளி குட்டி (ராகுல் ராமகிருஷ்ணா) மற்றும் பாலியல் தொழிலாளியாக சுமதி (அனசுயா பரத்வாஜ்) ஆகியோர் காலனியின் மற்ற முக்கிய  கதாபாத்திரங்கள். விமானப் பயணம் பற்றி கனவு காண்பது ஏழைகளுக்கு முடியாத காரியம், ஆனால் நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து சாதிக்க முடியும் என்று வீரய்யா தன் மகன் ராஜுவிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ராஜு கடினமாகப் படித்து பைலட் ஆக முடிவு செய்கிறார். எல்லாம் நல்லபடியாக நடப்பதாகத் தோன்றும் போது ஒரு சோகம் ஏற்படுகிறது. ராஜு திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். டாக்டர் வீரய்யாவிடம்  மகனின் உடல்நிலை குறித்து பேரழிவு தரும் செய்தியை வெளிப்படுத்துகிறார். அதாவது ராஜு இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், நீண்ட நாள் உயிர் வாழ போவதில்லை என்று தெரிவிக்கிறார். ஏழைக்குடும்பத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரகனி தனது மகனின் ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். மகனுக்காக சிறு சிறு வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்க்க முயற்சிக்கிறார். இதனிடையே சமுத்திரகனியின் வாழ்க்கையில் பல பிரச்சனை குறுக்கே வருகிறது. இறுதியில் தனது மகனின் விமானத்தில் பறக்கும் ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? குழந்தையின் கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தன் மகனை சந்தோஷப் படுத்தவும், அவனது கனவுகளை நனவாக்கவும், ஊனமுற்ற அப்பாவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். யதார்த்தமான மற்றும் அவருடைய ஒவ்வொரு உணர்ச்சியையும் இயல்பான வெளிப்பாடுகளுடன் முழு படத்தையும் தன் தோளில் சுமந்துள்ளார். அவர் கடவுளை திட்டும் காட்சி அவர் நடிப்பின் அளவைக் காட்டுகிறது.
அவரது மகனாக நடித்த மாஸ்டர் துருவன், இயல்பாகநடித்துள்ளார். சமுத்திரக்கனியுடன் இணைந்து காட்சிகளை உயர்த்தியுள்ளார். அவருடைய நண்பர் ஐன்ஸ்டீனாக நடித்த குழந்தையும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
விபச்சாரி வேடத்தில் அனுசுயா, ஆட்டோ டிரைவராக தன்ராஜ், செருப்புத் தொழிலாளியாக ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பு  திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் சிறப்பு தோற்றத்தில்  விமான பணிப்பெண்ணாக முக்கியப் பங்கு வகிக்கிறார்.
சரண் அர்ஜுன் இசையில் கவிஞர் சிநேகனின் பாடல் வரிகள் சிறப்பு.
 
 விவேக் கலேபுவின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலைக்கும் முன்னுரைக்கும் பொருந்துகிறது.
 
 எடிட்டிங் டேபிளில் மார்த்தாண்டன் கே வெங்கடேஷ் சில காட்சிகளுக்கு கத்தரி கோலை பயன்படுத்தி இருக்கலாம்.
இயக்குனர் சிவ பிரசாத் யானலா அப்பா-மகன் பிணைப்பு பற்றி உணர்ச்சிகரமான கதையைச் சொல்ல விரும்பி ஆனால் அதைச் சுற்றி ஈர்க்கக்கூடிய திரைக்கதையை எழுத தவறிவிட்டார். சில காட்சிகள் மற்றும் தருணங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஆனால் சிவபிரசாத் பார்வையாளர்களை கவர்ந்திருக்கவில்லை.
மொத்தத்தில் கிரண் கொரபதி  & ZEE ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள விமானம் ஒரு உணர்வுபூர்வமான பாச பயணம்.