விடுதலை பாகம் 2 சினிமா விமர்சனம் : விடுதலை பாகம் 2 முடிவடையாத அரசியல் சூழ்ச்சியாகும் | ரேட்டிங்: 3/5

0
1312

விடுதலை பாகம் 2 சினிமா விமர்சனம் : விடுதலை பாகம் 2 முடிவடையாத அரசியல் சூழ்ச்சியாகும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேதன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா மற்றும் பலர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
இயக்குனர் : வெற்றிமாறன்
இசை : இளையராஜா​
ஒளிப்பதிவு இயக்குனர் : ஆர் வேல்ராஜ்
கலை இயக்குனர் : ஜாக்கி
படத்தொகுப்பு : ராமர்
ஆடை வடிவமைப்பாளர் : உதாரா மேனன்
சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா ரூ பிரபு
ஒலி வடிவமைப்பு : டி உதயகுமார்
ஒலி விளைவுகள் : பிரதாப்
ஏகுஓ : ஆர் ஹரிஹரசுதன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஜி மகேஷ்
இணை தயாரிப்பாளர் : வி மணிகண்டன்
தயாரிப்பாளர் : எல்ரெட் குமார் (ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்)
பத்திரிக்கை தொடர்பு : டி.ஒன், சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்.

வெற்றி மாறனின் விடுதலை பாகம் 1 -ல் விஜய் சேதுபதி ஒரு சக்தி வாய்ந்த வாத்தியார் பெருமாள் உருவமாக காட்டப்படுகிறது. விடுதலைப் பகுதி 2 -ல் விஜய் சேதுபதியின் புரட்சித் தலைவர் பெருமாள் தொடர்ச்சியில் முழு பார்வைக்கு வருகிறார். விடுதலைப் பகுதி 1 முடிவடைந்த இடத்திலிருந்து தொடர்கிறது.
புரட்சித் தலைவரான பெருமாள் (விஜய் சேதுபதி) காவலர் குமரேசன் (சூரி) உதவியுடன் காவல்துறையினரால் ரகசியமாக கைது செய்யப்படுகிறார். தலைமைச் செயலாளர் சுப்பிரமணியன் (ராஜீவ் மேனன்) மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பெருமாளை கேம்ப்புக்கு அழைத்து செல்லப்படுகிறார். மறுபுறம் பெருமாள் வேறு இடத்திற்கு மாற்றும் செய்தி கசிந்து, அவரது ஆதரவாளர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, போலீசார் அவரை அடர்ந்த காடு வழியாக நகர்த்த முயற்சிக்கின்றனர்,  காட்டு பாதையில் சேத்தன் தலைமையில் பெருமாள் கைவிலங்கிடப்பட்டு ஜீப்பில் பயணிக்கிறார்கள். ஜீப்பை காவலர் குமரேசன் ஓட்ட போலீஸ் குழுவிடம் தனது காதலையும் சமூக அரசியல் போராட்டத்தின் கதையை விவரிக்கத் தொடங்குகிறார். பெருமாள் இடதுசாரிக் கட்சியாகத் தூண்டப்படுவதையும், நக்சலைட்டாக மாறுவதையும் வெளிப்படுத்த கடந்த காலத்துக்குச் செல்கிறது. ஒரு நில உரிமையாளரின் கொடுமையால் அதிர்ச்சியடைந்த பெருமாள் ஒரு இடதுசாரிக் கட்சியில் சேர்ந்து அதன் தொழிற்சங்கத்தில் இணைக்கப்படுகிறார். அவர் மகாலட்சுமியை (மஞ்சு வாரியர்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மக்கள் மத்தியில் கட்சியின் பணி கடுமையான தள்ளுமுள்ளுகளுக்கு இட்டுச் செல்கிறது, இது பெருமாள் தனது வழிகாட்டியான கேகே (கிஷோர்) இடமிருந்து விலகி ஆயுதமேந்திய கிளர்ச்சியை மேற்கொள்ள நிர்பந்திக்கிறார். மேலும் கதையை தொடாந்து விவரிக்கும் போது வாத்தியார் பெருமாள் ரத்தத்தில் நனைந்த, சித்தாந்தம் சொட்ட சொட்டச் சொல்லும் கதை, அவரை கைப்பற்றிய கான்ஸ்டபிள் குமரேசனை எப்படி பாதிக்கிறது? இந்நிலையில், பெருமாளின் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்க்கொள்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

புரட்சித் தலைவர் வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம், பள்ளி ஆசிரியர் முதல் சட்டத்தை மதிக்கும் நபர், கம்யூனிஸ்ட் போராளி, சங்கம் அமைக்கும் தொழிற்சங்கவாதி, ஆயுதப் போராட்டக் குழுத் தலைவர் எனப் பல பரிமாணங்களில் வித்தியாசமாகக் காட்டப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியராக இருந்து கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட மனிதராகவும், காதலன், ஒரு கணவன், என அவர் மாறுவது திறம்பட சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவரது அமைதியான நடத்தை அவரது உயரிய கொள்கைகளுடன் இணைந்து ஒரு காந்த செயல்திறனை உருவாக்குகிறது. நுட்பமான நடிப்புத் திறமையைத் தவிர, அவரது டயலாக் டெலிவரியில் வெளிவரும் அவரது சக்திவாய்ந்த வரிகள், அனைவரிடமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்க வைக்கிறது.

அசாதாரண சூழ்நிலையில் சிக்கிய ஒரு சாதாரண மனிதனின் போராட்டங்களை சித்தரிக்கும் சூரி, இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்றாலும், குமரேசன் கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வலுவான விருப்பமுள்ள மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் ஒரு நுணுக்கமான நடிப்பைக் கொடுக்கிறார், அவரது காட்சிகள் நன்றாகக் கையாளப்பட்டு கதைக்கு ஆழம் சேர்க்கின்றன.

பண்ணை அடிமைத்தனத்தை எதிர்க்கும் கருப்பனின் கொலை வாத்தியார் பெருமாளின் மனதை எப்படி பாதிக்கிறது என 10 நிமிட காட்சியில் வரும் கென் கருணாஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதே போல தன்னுடைய ஈகோவினால் மட்டுமே செயல்படும் காவலர் கதாபாத்திரத்தில் சேத்தன் உடல்மொழி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

ராஜீவ் மேனன், தலைமைச் செயலாளராக, ஒரு சக்திவாய்ந்த அதிகாரியின் உடல் மொழியையும், மாடுலேஷனையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா உட்பட அனைத்து நடிகர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறார்கள் மற்றும் , நேர்த்தியான நடிப்பால் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர்.

இளையராஜாவின் ஸ்கோர் சினிமா அனுபவத்தை மேம்படுத்தி பதற்றத்தை அதிகப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், கரடுமுரடான நிலப்பரப்புகளையும், கொந்தளிப்பான உணர்ச்சிகளையும் தனக்கே உரிய தனித்துவமான பாணியில் மூச்சடைக்கக் கூடிய காட்சிக் கோணங்களுடன் படம்பிடித்துள்ளார்.

எடிட்டர் ராமரின் எடிட்டிங் பிரமிக்க வைக்கிறது; அது கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கிறது. ஆனால், முதல் பாதி மெதுவாகத்தான் நகர்கிறது.
கலை இயக்குனர் ஜாக்கி, ஆடை வடிவமைப்பாளர் உதாரா மேனன், சண்டைக்காட்சிகள் அமைத்த பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு ஆகியோர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

முதல் படம் குமரேசன் கதை என்றால், 2ம் பாகம் பெருமாளின் கதையாகவே விரிகிறது. கதை நன்கு தெரிந்திருந்தாலும், சாதிவெறி, அதிகாரம் எப்பொழுதும் அந்தஸ்தைத் தக்கவைக்க முயல்கிறது, அதிகாரம் என்பது ஊழல்வாதிகளுக்கும் காவல்துறை ஒடுக்குமுறை யாளர்களுக்கும் ஒரு கருவியேயன்றி வேறில்லை என்று உணர்ச்சிப்பூர்வமான வசனங்களுடன் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். விஜய் சேதுபதியின் இறப்பை மையமாக வைத்து மீண்டும் புரட்சி வெடிக்கும் என விடுதலை பாகம் 3 -க்கான லீடுடன் முடித்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை பாகம் 2 முடிவடையாத அரசியல் சூழ்ச்சியாகும்.