விடாமுயற்சி சினிமா விமர்சனம் : விடாமுயற்சி அஜித்தின் துணிச்சலான புதிய முயற்சி, அதன் விடாமுயற்சியால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தீவிரமான மர்ம த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
அஜித் குமார் – அர்ஜுன்
த்ரிஷா கிருஷ்ணன் – கயல்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் – ரக்ஷித்
ரெஜினா கசாண்ட்ரா – தீபிகா
ஆரவ் – மைக்கேல்
ரவி ராகவேந்திரா – டாக்டர் மனோகர் சந்திரசேகர்
ரம்யா சுப்ரமணியன் – அனு
நிகில் சஜித் – நிகில்
சஞ்சய் கணேஷ் சரவணன் – பிஜு
தொழில்நுட்ப குழு :
தயாரிப்பாளர் – சுபாஸ்கரன்
பேனர் : லைகா புரொடக்ஷன்ஸ்
லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை – ஜி கே எம் தமிழ் குமரன்
இயக்குனர் – மகிழ் திருமேனி
இசை – அனிருத்
ஓளிப்பதிவாளர் – ஓம் பிரகாஷ்
எடிட்டர் – என் பி ஸ்ரீகாந்த்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – மிலன்
ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர்
ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன்
ஏகுஓ – ஹரிஹரசுதன்
ஆடியோகிராபி – டி உதய்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன்
பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா
தயாரிப்பு நிர்வாகி – ஜே கிரிநாதன் மற்றும் கே ஜெயசீலன்
ஸ்டில்ஸ் – ஜி ஆனந்த் குமார்
பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில், கயல் (த்ரிஷா) தன் கணவன் அர்ஜுனுடன் (அஜித் குமார்) ஏற்பட்ட மனஸ்தாபங்கள் காரணமாக விவாகரத்து பெற விரும்புகிறார். விவாகரத்து பெறும் வரை தன் தாய் வீட்டில் இருக்க முடிவெடுக்கும் கயலை அவரது வீட்டில் விட காரில் சாலைப் பயணத்தை தொடங்குகிறார்கள். தம்பதிகளின் பாலைவன சாலை பயணத்தின் போது, திடீரென எங்கிருந்தோ ஒரு கார் குறுக்கே பாய்ந்து வர இந்த ஜோடி பயணிக்கும் கார் கிட்டத்தட்ட மோதுகிறார்கள். ஒரு சிறு முறைப்புக்கு பின் இரண்டு கார்களும் தொடர்ந்து பயணப்படுகிறது. அடுத்த பெட்ரோல் பங்க் நிறுத்தத்தில் பெட்ரோல் நிரப்ப கார் வந்த போது மீண்டும் அந்த கார் அங்கு வருகிறது. காரில் வந்தவர்கள் அர்ஜுனுடன் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்கள். அதே நேரத்தில் பங்கில் உள்ள கடையில் கயலுக்கு, தீபிகா (ரெஜினா கஸன்ட்ரா) அவரது கணவன் ரக்ஷித் (அர்ஜுன்), அறிமுகம் கிடைக்கிறது. பெட்ரோல் பங்க் நிலையத்தை விட்டு வெளியேறி தொடர்ந்து பயணிக்கும் ஜோடி செல்போன் சிக்னல் இல்லாத அந்த பாலைவன பாதையில், கார் பழுதாகி நின்று விடுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அவர்களின் செல்போன் சிக்னல் பெற முடியாத நிலையில், அவர்கள் நடுவழியில் சிக்கிக் கொள்கிறார்கள். விரைவாக, அந்த பைத்தியக்கார கும்பல் கார் மீண்டும் அவர்கள் தவிக்கும் பாதையில் அவர்களை நோக்கி வேகமாக வருகிறார்கள். பின்னர் பக்கவாட்டில் மெதுவாகச் சென்று, வெறுப்பேற்றியபடி சென்று, பிறகு அவர்களை நோக்கித் மீண்டும் திரும்பி நிற்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, அங்கே ஓரு கண்டெய்னர் லாரி சம்பவ இடத்திற்கு வருகிறது. அவர்களை பார்த்து எதிரில் நின்ற கார் அங்கிருந்து புறப்படுகிறது. லாரியில் வரும் ரக்ஷித்தும், அவரது மனைவி தீபிகாவும் அடுத்த நகரம் வெகு தொலைவில் உள்ளது என்று விளக்குகிறார்கள். ஆனால் அவர் அவர்களை சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்ல முடியும், அங்கு அவர்கள் ஒரு தொலை பெசியில் தொடர்பு கொண்டு, ஓரு இழுவை வண்டியை அழைத்து வந்து காரை நகரத்திற்குள் எடுத்துச் செல்ல முடியும் என்கிறார்கள். கயலை அழைத்துச் சென்று, அருகிலுள்ள ஹோட்டலில் விடுவதாகச் சொல்கிறார்கள். தயக்கத்துடன், அர்ஜுன், கயலை ரக்ஷித், அவரது மனைவி தீபிகாவுடன் செல்ல அனுமதிக்கிறார், அதே நேரத்தில் அவர் ஜீப்பையும் அவர்களின் அனைத்து பொருட்களையும் பார்த்துக் கொள்ள அங்கேயே இருக்கிறார். நேரம் கடந்து செல்கிறது, இழுவை வண்டி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அர்ஜுன் மீண்டும் காரை பார்க்கும்போது இரண்டு கம்பிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறார். சில நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் சாலையில் ரக்ஷித், அவரது மனைவி தீபிகா கூறிய உணவகத்தை நோக்கி பயணிக்கிறார்.அவர் விரைவாக அந்த உணவகத்தைக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அங்கு தன் மனைவி கயல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பாரில் இருந்தவருக்கு கயலைப் பார்த்ததாக நினைவில் இல்லை, அங்கு உள்ள வாடிக்கையாளர்களும் பார்க்க வில்லை என்று சொல்கிறார்கள். அர்ஜுன் பீதியடைய தொடங்குகிறார். கயலுக்கு என்ன ஆயிற்று? ரக்ஷித் மற்றும் தீபிகா ஜோடி கயலை என்ன செய்தார்கள்? அவர்கள் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அஜித் அவரது வழக்கமான வெகுஜன-செயல்பாட்டிலிருந்து ஒரு துணிச்சலான ஹீரோயிசத்தை உடைத்து மென்மையானவராக காதல், பதற்றம், உணர்ச்சி, மற்றும் உணர்வை உடல் மொழி மூலம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு வித்தியாசமான சாலைப் பயணக் கதையோடு தடையின்றி ஒருங்கிணைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸ் காட்சிகள் நெருங்கும் போது ரசிகர்கள் எதிர்பார்த்த ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி விடுகிறார்.
காதல் மனைவி கயல் கதாபாத்திரத்தில் த்ரிஷா அழுத்தமான நடிப்பு வழங்கி உள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனும், ரெஜினா கசாண்ட்ராவும் முக்கிய கதாபாத்திரங்களாக கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி த்ரில்லிங்கான கதை களத்தை பரபரப்புடன் நகர்த்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
ஆரவ், நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன், டாக்டர் மனோகர் சந்திரசேகர் மற்றும் ரம்யா சுப்பிரமணியன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தங்கள் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசை மற்றும் பின்னணி இசை, த்ரில்லர் படத்திற்கு தேவையான பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஸ்டைலான ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் சண்டை காட்சிகள், பாலைவன சாலை பயணத்தின் நடக்கும் சம்பவங்கள் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பை கூட்டி காட்சிபடுத்தியது படத்தின் சிறப்பம்சமாகும்.
1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான பிரேக்டவுனின் ரீமேக்கான விடாமுயர்ச்சி, சஸ்பென்ஸ், ஆக்ஷன், பதற்றம் மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதை அமைத்த இயக்குனர் மகிழ் திருமேனி நம் தமிழ் சினிமாவுக்கு ஏற்றது போல் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த தீவிரமான த்ரில்லர் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து இருக்கும்.
மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் விடாமுயற்சி அஜித்தின் துணிச்சலான புதிய முயற்சி, அதன் விடாமுயற்சியால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தீவிரமான மர்ம த்ரில்லர்.