வாஸ்கோடகாமா திரைப்பட விமர்சனம் : வாஸ்கோடகாமா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு தலைவலி என்ற தண்டனையை நிச்சயம் பெற்று தரும் | ரேட்டிங்: 1.5/5
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆர்ஜிகே.
இதில் நகுல், அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார், முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன்பாப், நமோ நாராயணா, ஆர். எஸ்.சிவாஜி, லொள்ளு சபா சேஷு, பயில்வான் ரங்கநாதன், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்து அருண் என்.வி இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
நல்லது கெட்டது – கெட்டது நல்லது என்ற உலகில் அமைக்கப்பட்ட வாஸ்கோடகாமா, தலைகீழ் சமூகத்தில் போராடும் நேர்மையான வாசுதேவனைப் பற்றிய கதை. தனிப்பட்ட சோகம் தாக்குதலுக்குப் பிறகு, அவர் நன்மை செய்ததற்கான தண்டனை பெற்றுச் குற்றவாளிகளின் சொர்க்கமான சிறைச்சாலைக்கு செல்கிறார். வாசு இந்த வினோதமான உலகத்தில் அபத்தமான சவால்களை எதிர்கொள்கிறார். நல்லவர்கள் எல்லாம் நன்மை செய்ததற்கான தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறார்கள். தீயவர்கள் எல்லாம் சிறைக்கு வெளியே இருந்து கொண்டு அநியாயங்கள் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் உலகத்தில் வாசுதேவனுக்கு அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதை கற்பனையைப் பின்னணியாக்கி ஒரே குழப்பமாக நமக்கு தலை சுற்றும் வகையில் சொல்கிறது வாஸ்கோடகாமா.
நகுல், அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார், முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன்பாப், நமோ நாராயணா, ஆர். எஸ்.சிவாஜி, லொள்ளு சபா சேஷு, பயில்வான் ரங்கநாதன், படவா கோபி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் என்.எஸ்., இசையமைப்பாளர் அருண் உட்பட அனைத்து கலைஞர்களும் அப்படியே வாத்து கூட்டம் செல்வது போல இயக்குனர் சொன்னதை அப்படியே நடிப்பின் மூலம் செயல் படுத்தி உள்ளனர்.
அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் டத்தோ. பா.சுபாஸ்கரன் சிக்கியது நினைத்து வருத்தப்பட வேண்டிய விஷயம்.
ஏதோ படம் கிடைத்தால் போதும் என்பதற்கு இது போன்ற கதைக்களத்தை நகுல் இனி வரும் காலங்களில் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் காணாமல் போய் விடுவார். நகுல் ஒரு நல்ல கலைஞன் என்பதால் தெரியப்படுத்துகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் சினிமா தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் மிகவும் அரிது. அந்த வரிசையில் ஒரு நல்ல படம் தயாரிக்க முன் வந்த 5656 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் டத்தோ. பா.சுபாஸ்கரன் அவர்களிடம் வாஸ்கோடகாமா மாறுபட்ட முழுக்க முழுக்க காமெடி கலந்த கதைக்களம் என்று நம்ப வைத்து தயாரிப்பாளரை கவிழ்த்து விட்டார் இயக்குனர் ஆர்ஜிகே.
மொத்தத்தில் 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ.பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ள வாஸ்கோடகாமா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு தலைவலி என்ற தண்டனையை நிச்சயம் பெற்று தரும்.