வாய்தா விமர்சனம்: வாய்தா சலிக்காத விசாரணையில் சாதகத்தையும், பாதகத்தையும் ஏற்படுத்தும் தீர்ப்பு | ரேட்டிங் – 2.5/5

0
116

வாய்தா விமர்சனம்: வாய்தா சலிக்காத விசாரணையில் சாதகத்தையும், பாதகத்தையும் ஏற்படுத்தும் தீர்ப்பு | ரேட்டிங் – 2.5/5

வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ள படம் வாய்தா. இப்படத்தை இயக்கியிருக்கிறார் மகிவர்மன். சி.எஸ்.இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி, பாடல்கள்- இயக்குநர் ராஜு முருகன், உமா தேவி, மணி அமுதன், நவகவி, மகிவர்மன், சண்டை-சுப்ரீம் சுந்தர், உடைகள்-சீனு, தயாரிப்பு மேலாளர்-செல்வா, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

தெருவில் சலவை தொழில் செய்து வரும் முதியவரை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெரிய மனிதரின் மகன் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதி விடுகிறார். இதனால் படுகாயமடையும் முதியவரின் மருத்துவ செலவை கொடுக்குமாறு அந்த ஊர் அரசியல்வாதி பக்கத்து கிராமத்து பெரிய மனிதரிடம் இழப்பீடு கேட்கிறார். இந்த பஞ்சாயத்து மோதலாக மாறி வழக்கு போடுமளவிற்கு சென்று விடுகிறது. நீதிமன்றத்தில் அந்த பெரியவருக்கு நியாயம் கிடைத்ததா? அவரை பகடை காயாக வைத்து நடத்தும் ஜாதி அரசியல் என்ன? வழக்கு முதியவருக்கு சாதகமாக அமைந்து இழப்பீடு கிடைத்ததா? என்பதே க்ளைமேக்ஸ்.

நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் கிராமத்து கதையில் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி படத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை பிரதானமாக வைத்து விபத்து இழப்பீட்டை மையப்படுத்தி அதில் சாதி, காதல் என்ற கிளைக்கதையோடு சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், ஏற்ற தாழ்வுகளையும், அவலங்களையும் தோலுரித்து காட்டி ஒடுக்கப்படும் சமுதாயத்திற்கு எங்குமே நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை சில நிறை குறைகளோடு சொல்ல வந்த கருத்தை நெத்தியடி போல் சொல்ல முயற்சித்திருப்பதற்காகவே இயக்குனர் மகிவர்மனை பாராட்டலாம்.

மொத்தத்தில் வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் வாய்தா சலிக்காத விசாரணையில் சாதகத்தையும், பாதகத்தையும் ஏற்படுத்தும் தீர்ப்பு.