வல்லான் சினிமா விமர்சனம் : வல்லான் ஒரு மிதமான புலனாய்வு த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
389

வல்லான் சினிமா விமர்சனம் : வல்லான் ஒரு மிதமான புலனாய்வு த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் : சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே.

எழுதி இயக்கியவர் – வி.ஆர்.மணி சேயோன்
தயாரிப்பாளர் – டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காய​த்ரி
தயாரிப்பு – விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட்
நிர்வாக தயாரிப்பாளர் – அசோக் சேகர்
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – சந்தோஷ் தயாநிதி
படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்
கலை – சக்தி வெங்கட்ராஜ். எம்
ஸ்டண்ட் – விக்கி
பாடல் வரிகள் – உமாதேவி
நடனம் – கல்யாண், சந்தோஷ்
பாடியவர்கள் – கார்த்திக் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்
ரைட்டிங் அசோசியேட் – அரவிந்த் சச்சிதானந்தம்
ஒலிக்கலவை மற்றும் வடிவமைப்பு – எஸ்.சிவகுமார்
ஆடை வடிவமைப்பாளர் – நிகிதா நிரஞ்சன்
ஒப்பனை கலைஞர் – ஏ.கோதண்டபாணி
பத்திரிக்கை தொடர்பு – (ஏய்ம்) சதீஷ், சிவா

சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ள இளம் தொழிலதிபரான ஜோயல் (கமல் காமராஜ்) தனது ஈசிஆர் பண்ணை வீட்டில் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட கொலையை காவல்துறை விசாரிக்கும் போது விசாரணையில் எந்தவித துப்பு கிடைக்காமல் காவல்துறை தடுமாறுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி திவாகரிடம் (சுந்தர் சி) ஒப்படைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக இந்த வழக்கு, ஜோயலின் நிறுவனத்தில் மர்மமான ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு காணாமல் போன தனது சொந்த வருங்கால மனைவியான ஆதியாவுடன் (தான்யா ஹோப்) இணைகிறது. இதனிடையே, ஒரு மாடல் (ஹெபா படேல்), வீட்டு பணிப்பெண், மரணத்தில் முடியும் ஒரு குழந்தையின் விபத்து, ஜோயலின் நிறுவனத்தில் ஜோயலுக்கும் அவரது மனைவி அனிதாவுக்கும் இடையேயான அதிகார போராட்டம், மத போதனையை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மதபோதகரான ஆரோக்கியராஜ் தலைமையில் ஒரு தனி சாம்ராஜ்யம் என பல திடுக்கிடும் தகவல்கள் தடயங்களும் கிடைக்கிறது. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து  திவாகர் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்? கொடூர கொலைக்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

சுந்தர் சி ஒரு திடமான திவாகர் கதாபாத்திரத்தில் ஒரு நிலையான, அடக்கமான இருப்பைக் சோகமான முகபாவனையுடன் தெளிவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.

தான்யா ஹோப்பின் திரை இருப்பு குறைவு. வில்லன் வேடத்தில் கமல் காமராஜ், ஹெபா படேல், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே. ஆகியோர் திரைக்கதையின் நகர்வுக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

கிரைம் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் கதை களத்திற்கு ஒளிப்பதிவாளர் மணி பெருமாள், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். எம், ஸ்டண்ட் இயக்குனர் விக்கி உட்பட அனைவரும் சிறப்பான தொழில்நுட்ப பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

வழக்கமான மர்ம கொலை டெம்ப்ளேட்டை கையாண்ட இயக்குனர் வி.ஆர். மணி சேயோனின் திரைக்கதையில் சஸ்பென்ஸ், சதித்திட்டம், திடீர் திருப்பம் நிறைந்து இருந்தாலும் கிரைம் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லருக்கான விறுவிறுப்பு மிக குறைவு.

மொத்தத்தில் விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி இணைந்து தயாரித்திருக்கும் வல்லான் ஒரு மிதமான புலனாய்வு த்ரில்லர்.