வர்ணாஸ்ரமம் விமர்சனம் : வர்ணாஸ்ரமம் ஆணவ படுகொலையை அப்பட்டமாக தோலூரித்து காட்டும் அதிர்ச்சி கலந்த அசத்தல் படம் | ரேட்டிங்: 4/5
சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லௌர் டே தயாரித்திருக்கும் வர்ணாஸ்ரமம் படத்தில் சிந்தியா லௌர் டே, ராமகிருஷ்ணன், பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, ஏ.பி.ரத்னவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி. ஒளிப்பதிவு:- பிரவீணா.எஸ், பாடல்கள்- உமாதேவி, இசை :- தீபன் சக்கரவர்த்தி, சண்டைப்பயிற்சி :-ராஜேஷ்கண்ணா,நிர்வாக தயாரிப்பு :-ஏ.பி.ரத்னவேலு, எடிட்டர் :- கா. சரத்குமார், கலை :- புத்தமித்திரன், தயாரிப்பு மேற்பார்வை :-எம். பாலமுருகன் , மக்கள் தொடர்பு:- என்.விஜயமுரளி.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைப் பற்றி கேள்விப்பட்டு தமிழகத்திற்கு வருகை தரும் அமெரிக்க பெண் புலனாய்வு பத்திரிகையாளர் கன்யா டி அல்மைடா, தனக்கு உதவியாக அக்ஷயா, ஆட்டோ டிரைவர் சிங்காரம், ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து ஆவணப்படம் எடுக்க செல்கிறார். அவர் கேள்விப்படும் ஆணவக் கொலைகள் சம்பந்தபட்ட காதலர்களை சந்தித்து பேட்டி எடுக்கிறார். முதலில் கலெக்டர் கனவோடு இருக்கும் ஏழை காதலன் அவனை விரும்பும் உயர்சாதி காதலி, கோபஉணர்ச்சி மிகுதியால் பெற்றோர்களை கொன்று விட்டு ஜெயிலில இருக்கிறார்.இரண்டாவது கட்டிட தொழிலாளியின் மகன் மேல்சாதிப் பெண்ணை காதலிக்க, அதனால் குடும்ப உறவில் பிரச்னை ஏற்பட்டு அந்தப் பெண் இறக்க, அண்ணன் ஜெயிலுக்கு செல்கிறார். மூன்றாவதாக காதலால் பெற்றோர்களால் கைவிடப்பட அனாதையாகும் ஒரு இளம் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புத்தி பேதலித்து கொலை செய்ய, அவளுக்கு பிறக்கும் குழந்தையை வளர்க்கும் காதலன். எதிர்பாராத சந்திப்பு, நிர்பந்தத்தால் காதலிக்க தொடங்கும் ஜோடிகள் பெற்றொர்களுக்கு பயந்து ஊரை விட்டே ஒடிப் போக நினைக்க, அவர்களை தேடி வரும் காதலியின் தந்தையுடன் செல்ல சம்மதிக்கும் ஜோடிகள் என்று நான்கு வெவ்வேறு ஜாதி கலப்பு காதல் ஜோடிகளுக்கு ஏற்பட்ட அநீதிகளை பதிவு செய்யும் போது ஏற்பட்ட சிரமங்கள், சிக்கல்கள், அரசியல் குறுக்கீடுகள், அவமானங்களை தாண்டி ஒரு வெளிநாட்டுப்பெண் படம் எடுக்க முடிந்ததா? இல்லையா? தீர்வு கிடைத்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
அமெரிக்க பெண் நிரூபர் கன்யா டி அல்மைடாவாக தயாரிப்பாளர் சிந்தியா லௌர்டே படத்தில் முக்கிய புள்ளியாக இருந்து படத்தில் வரும் காட்சிகளில் நிறைவான பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தில் பாடலும் பாடியிருக்கிறார்.
ஒரு காதல் ஜோடிக் கதையில் நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ராமகிருஷ்ணன் தனித்து நிற்கிறார்.
பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, ஏ.பி.ரத்னவேல் மற்றும் பலர் படத்திற்கு உறுதுணையாக இருந்து கதைக்களத்திற்கு உதவி செய்துள்ளனர். காட்சிகளுக்குகேற்ப அனைவரின் பங்கும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.
படத்தின் நான்கு வித கோணங்களில் கதைக்களம் பயணிக்க ஒவ்வொரு கதையையும் குழப்பாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார் பெண் ஒளிப்பதிவாளர் பிரவீணா.
தீபன் சக்கரவர்த்தியின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பலம். பறையிசை காட்சிகள் அமர்க்களம்.
சண்டைப்பயிற்சி :-ராஜேஷ்கண்ணா, எடிட்டர் :- கா. சரத்குமார், கலை :- புத்தமித்திரன் இவர்களின் பங்களிப்பு கூடுதல் சிறப்பு.
வெளிநாட்டுப் பெண் எடுக்கும் ஆவணப்படத்தை மையமாக வைத்து நான்கு வகை கலப்பு காதல், ஆணவக்கொலை, சாதிவெறி, பழி வாங்குதல், தண்டனை, குடும்ப உறவுகள் என்று பலதரப்பட்ட கோணங்களில் அலசி ஆராய்ந்து, அதை தைரியமாக மையக்கருவாக எடுத்திருக்கும் இயக்குனர் சுகுமார் அழகர்சாமிக்கு பாராட்டுக்கள். பெற்றோர்கள் சம்மதித்தாலும், உறவுகள் வற்புறுத்தலால் வேறுவழியின்றி சம்மதிக்க மறுத்து சொந்த பிள்ளைகளை காவு கொடுக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தா விட்டாலும் சிந்திக்க வைக்கும் அளவிற்கு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார் அழகர்சாமி.
மொத்தத்தில் சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லௌர் டே தயாரித்திருக்கும் வர்ணாஸ்ரமம் ஆணவ படுகொலையை அப்பட்டமாக தோலூரித்து காட்டும் அதிர்ச்சி கலந்த அசத்தல் படம்.