லோக்கல் சரக்கு சினிமா விமர்சனம் : சந்தர்ப்ப சூழ்நிலை வாதிகள் உலா வரும் சமுதாயத்தில் பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது லோக்கல் சரக்கு| ரேட்டிங்: 2.5/5

0
107

லோக்கல் சரக்கு சினிமா விமர்சனம் : சந்தர்ப்ப சூழ்நிலை வாதிகள் உலா வரும் சமுதாயத்தில் பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது லோக்கல் சரக்கு| ரேட்டிங்: 2.5/5

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் பிரமாண்ட தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.

இதில் யோகி பாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இசை வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் விவேக, கலை முஜ்பூர் ரகுமான், இயக்கம் எஸ்.பி.ராஜ்குமார். மக்கள் தொடர்பு ‘கிளாமர்’ சத்யா.

பொறுப்பில்லாத நடுத்தர குடும்பத்தலைவர் நாயகன் தினேஷ், மற்றும் யோகி பாபு நண்பர்கள். தினேஷ், வேலைக்கு ஏதும் செல்லாமல் எப்போதும் குடி குடி என்று மதுக்கு அடிமையாக இருக்கிறார். சரக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதும் சரக்கு அடிக்கும் போது யோகி பாபு கம்பெனி கொடுக்கிறார். இந்நிலையில் தன் வீட்டிற்கு அருகில் குடி வரும் நாயகி உபாசனா, தினேஷை பார்த்ததும் ஒரு நொடி முழிக்கிறார். தினேஷை பார்த்து நாம் இதற்கு முன் சந்தித்து இருக்கிறோமா என்று கேட்கிறார். தினேஷ் இல்லை என் சொல்லி விட்டு அவரிடம் பணம் வாங்கி குடிக்கிறார். ஒருநாள் அவரது தங்கை தன்னுடன் வேலை பார்க்கும் சென்றாயனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தினேஷ் தங்கையுடன் சமாதானம் ஆகி, நாயகி உபாசனா மற்றும் சென்றாயனுடன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு ஒருவர் தினேஷ் மற்றும் உபாசனவை பார்த்து திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சொல்ல. சுற்றி இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.  தினேஷ்க்கும் உபாசனாவுக்கும் திருமணம் எப்படி நடந்தது என்பதை அந்த மனிதர் சொல்ல, அந்த கதை என்ன மற்றும் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

90 சதவீத காட்சிகளில் படம் முழுக்க குடித்துக் கொண்டு போதையில் மிதக்கும் கதாபாத்திரத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் உபாசனா தன்னுடைய கதாபாத்திற்கு சிறப்பு செய்துள்ளார். படத்தின் ஹைலைட்டான க்ளைமேக்ஸ் காட்சியில் உபசனா நேர்த்தியான நடிப்பு வழங்கியுள்ளார்.

யோகி பாபு, சென்றாயன், இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பு மீட்டரை சிறப்பாக கையாண்டு உள்ளனர்.

சரக்கு போதையில் படம் சூழலும் போது சாம்ஸ் காமெடியில் அசத்தி நம்மை காமெடி போதையில் வைத்து இருக்கிறார்.

மேலும் ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, வினோதினி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் யதார்த்தமான நடிப்பை தந்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இசை வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் விவேகா, கலை முஜ்பூர் ரகுமான், ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

படத்தொகுப்பாளர் ஜே.எப்.கேஸ்ட்ரோ குடிபோதையில் சுழலும் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருந்தால் படம் இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கும்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பில்லாமல் குடிபோதையில் ஊர் சுற்றி, எப்போதும் குடிக்கு அடிமையாகும் போது, அந்த குடும்பம் எப்படி பல சிக்கலில் மாட்டுகிறது என்பதை கதை களமாக வைத்து, பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை அழுத்தமாக சொல்லி, எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து நகைச்சுவையோடு படைத்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.

மொத்தத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை வாதிகள் உலா வரும் சமுதாயத்தில் பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது லோக்கல் சரக்கு.