லைசன்ஸ் விமர்சனம் : லைசன்ஸ் பெண் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் சிங்கப் பெண்| ரேட்டிங்: 2.5/5

0
186

லைசன்ஸ் விமர்சனம் : லைசன்ஸ் பெண் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் சிங்கப் பெண்| ரேட்டிங்: 2.5/5

ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரித்து கணபதி பாலமுருகன் இயக்கி உள்ள திரைப்படம் ‘லைசென்ஸ்’.
நடிகர்கள் : ராஜலக்ஷ்மி செந்தில், ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன், பழ கருப்பையா, ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – காசி விஸ்வநாதன், இசை – பைஜூ ஜேக்கப், எடிட்டர் – வெரோனிகா பிரசாத், மக்கள் தொடர்பு – கே எஸ் கே.செல்வாலைசென்ஸ் என்பது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்து துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியரைப் பற்றிய கதை. காவல்துறையில் இன்ஸ்பெக்டரின் (ராதாரவி) மகள் பாரதி (ராஜலக்ஷ்மி செந்தில்). அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவர், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடி வருகிறார். தன் நெருங்கிய பள்ளி தோழி தன் கண் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதைப் பார்த்து அந்த குற்றவாளிகளுக்கு தன் தந்தை  தண்டனை வாங்கி கொடுக்க வில்லை. அதனால் 16 வருடங்களாக தன் தந்தையிடம் பேசாமல் மனவேதனையுடன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாரதி, 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்கிற பொதுநல மனுவை தொடர்கிறார். அதனால் பல இன்னல்களை சந்திக்கிறார். குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்காக அவர் இந்த தடைகளைத் தாண்டி போராடுகிறார். ஒரு அரசு பள்ளி ஆசிரியர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக்க் கேட்கிறார்? அதன் முடிவு என்ன ஆனது..? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக போராடும் கதாபாத்திரத்தில், ராஜலக்ஷ்மி செந்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி, மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். நாம் பள்ளியில் படித்த போது நமக்குப் பாடம் நடத்திய ஆசிரியை போல் எதார்த்தமாக தெரியும் அவர் நடிப்பில் பல இடங்களில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பாரதியின் பாசமிகு தந்தையாகவும் வரும் ராதாரவி நிறைவான நடிப்பு வழங்கி உள்ளார்.
வழக்கை விசாரிக்கும் பெண் நீதிபதியாக கீதா கைலாசம், உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.
என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன், பழ கருப்பையா, ஜீவா ரவி என அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
பைஜூ ஜேக்கப் இசை மற்றும் பின்னணி இசையில் ஒரு சமூக அவலத்தை வணிகத்தளம் இல்லாமல் காட்சிகளோடு ஒன்றி இருக்கிறது.
காசி விஸ்வநாதனின் கேமராவும் கேமரா கோணங்கள் படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.
வெரோனிகா பிரசாத் கதையின் முக்கியத்தை உணர்ந்து கச்சிதமாக எடிட் செய்துள்ளார்.
மொத்தத்தில் ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் என்.ஜீவானந்தம் தயாரித்திருக்கும் லைசன்ஸ் பெண் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் சிங்கப் பெண்.