லெக் பீஸ் சினிமா விமர்சனம் : ‘லெக் பீஸ்’ தரமான காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3/5

0
329

லெக் பீஸ் சினிமா விமர்சனம் : ‘லெக் பீஸ்’ தரமான காமெடி கலாட்டா | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
யோகி பாபு, வி.டி.வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, சாம்ஸ், மதுசூதன் ராவ், ஸ்ரீநாத், மணிகண்டன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : ஸ்ரீநாத்
தயாரிப்பு நிறுவனம் : ஹீரோ சி​னிமாஸ்
தயாரிப்பு : சி.மணிகண்டன்
இசை : பிஜோர்ன் சுர்ராவ்
பாடல் வரிகள் – விக்னேஷ் ராமகிருஷ்ணன், ஷபீர் மற்றும் பிஜோர்ன்
குரல்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிஜோர்ன்
கதை திரைக்கதை வசனம் : எஸ்.ஏ. பத்மநாபன்
ஒளிப்பதிவு : மசானி
எடிட்டர் : இளையராஜா.எஸ்
ஸ்டண்ட்: ஷார்ப் சிவா
நடனம்: ராதிகா
வாடிக்கையாளர்: தாமோதரன்
கலை: முஜீப்
மக்கள் தொடர்பு : சதீஷ்

சென்னையில் ரமேஷ் திலக் பிரபல நடிகர்களின் குரலில் பேசும் திறமை கொண்டவர் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை ஓட்டுகிறார். மணிகண்டன் தெரு தெருவாக சென்று சவுரி முடியை விலைக்கு வாங்குபவர்.கருணாகரன் கிளி ஜோசியர். மற்றும் ஸ்ரீநாத் பேய்களை விரட்டும் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டை ரமேஷ் திலக், ஸ்ரீநாத், மணிகண்டன், கருணாகரன், காண்கிறார்கள். இந்த 2000 ரூபாய் நோட்டை எப்படி பங்கு போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட அதை வைத்து பக்கத்தில் இருக்கும் பாரில் சென்று குடிக்க முடிவு செய்கின்றனர். அப்படியே நெருங்கிய நண்பர்களாக ஆகிறார்கள். இந்த பாரை தாதா மொட்டை ராஜேந்திரன் நடத்தி வருகிறார். பாரில் அவர்கள் கொடுக்கும் அந்த 2000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என தெரிய வருவதால் பிரச்சனை ஏற்படுகிறது. அத்துடன் இந்த 4 பேரை  பிடித்து வைத்து ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். அப்பொழுது பாரில் எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அதில் தாதா மொட்டை ராஜேந்திரன் மற்றும் கூட்டாளிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த 4 நண்பர்களும் தப்பி செல்கிறார்கள். அங்கு நடந்த கொலை சம்பவத்துக்கு இந்த நான்கு பேர் தான் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கொலைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்த 2000 ரூபாய் நோட்டின் மூலம் வந்த இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதே ‘லெக் பீஸ்’ படத்தின் மீதிக்கதை.

சவுரி முடி வியாபாரம் செய்யும் குயில் என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன், கிளி ஜோதிடராக கருணாகரன், பேய் விரட்டுபவராக ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக ரமேஷ் திலக் ஆகியோர் அந்தந்த வேடங்களுக்கு சரியாகப் பொருந்தினர். மற்றும் படம் முழுவதும் தங்கள் நகைச்சுவையால் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பார் மேலாளராக வரும் யோகி பாபு மற்றும் ரவி மரியா படம் முழுவதும் அவர்களுக்கே உண்டான ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார்கள்.

விடிவி கணேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என அனைவரும் காமெடி கலந்த சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

பட்ஜெட்டை மீறி ஒளிப்பதிவாளர் மசானியின் ஒளிப்பதிவு தரமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளது.

எடிட்டர் இளையராஜா.எஸ் மற்றும் இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசை மற்றும் பின்னணி இசை நகைச்சுவை நிறைந்த க்ரைம் திரில்லருக்கு உற்சாகத்தை சேர்க்கிறது.

காமெடி மற்றும் குற்றத் திரில்லரை கருப்பொருளாகக் கொண்டு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எஸ்.ஏ. பத்மநாபன் எழுதியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீநாத் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு வேடத்தையும் ஏற்று அதை ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக மாற்றியுள்ளார்.

மொத்தத்தில் ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ள ‘லெக் பீஸ்’ தரமான காமெடி கலாட்டா.