லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் விமர்சனம் : லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் குற்றவாளிகளை கோபத்துடன் எதிர்கொள்ளும் பார்வையற்றவரின் திரில்லிங் என்கவுண்டர் | ரேட்டிங்: 3/5
லேசி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரிப்பில் லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் படத்தில் பரத், அனூப் காலித், விவியா சந்த், அடில் இப்ராஹிம்,அனு மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனிஷ்குமார். இசை-கைலாஷ் மேனன், ஒளிப்பதிவு-சினு சித்தார்த், எடிட்டிங்-பிரவீன் பிரபாகர், சண்டை-தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பு-அருண் ராமவர்மா, லைன் புரொட்யுசர்-சக்திவேல் கல்யாணி, பிஆர்ஒ-குமரேசன்.
வீட்டில் தனியாக ஒரு சிறுமி இருக்க, திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, கொள்ளையர்கள்; ஆறு பேர் உள்ளே நுழைகின்றனர்.அவர்களை சிறுமி செல்போனில் படம் பிடிப்பதை அறிந்து அவளை கொன்று விட்டு வீட்டில் டைம் பாம்மை வைத்து தகர்த்து விட்டு சென்று விடுகின்றனர். சிறிய திருட்டுக்களாக செய்து கொண்டிருக்கும் கும்பல், ஒரு பெரிய ஜாக்பாட் கொள்ளை நடத்த திட்டமிடுகின்றனர். கேரள எல்லையில் இருக்கும் வீட்டில் கொள்ளையடித்தால் லைஃபில் செட்டிலாகிவிடலாம் என்று நான்கு பேரும் அந்த வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே பார்வையற்ற பரத் இருப்பதை பார்த்து அதிர்ந்தாலும், அவருக்கு தெரியாமல் லாக்கரில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர். இவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? கொள்ளையர்களை பரத் எதிர்கொண்டு வீழ்த்தினரா? பரத்திற்கும் இந்த கொள்ளையர்களுக்கும் இருக்கும் பகை என்ன? யார் வென்றார்கள்? என்பதே க்ளைமேக்ஸ்.
பார்வை குறைபாடுள்ள ஷானாக பரத் படத்தில் பிரமாதமாக அதகளம் பண்ணுகிறார்.இதில் இன்னுமொரு பவர் பேக் பெர்ஃபார்மென்ஸ{டன் ஆக்ஷன் களத்துடன் கவனமாக கையாண்டு சிறப்பு செய்துள்ளார்.
படத்தில் ரேச்சல் என்ற முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விவியா சாந்த், அந்த பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார் கதையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவதில் இந்த பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் விவியா அதை நேர்த்தியுடன் மற்றும் முழுமையான எளிமையுடன் கையாண்டுள்ளார்.
திருடர்களாக நடிக்கும்; லூக்காவாக வரும் அனூப் காலித், ராகுலாக வரும் அடில் இப்ராஹிம் மற்றும் ஷமீராக வரும் அனு மோகன் ஆகிய மூன்று பேரும் எதிர்பார்த்ததை வழங்குகிறார்கள்.
இசை-கைலாஷ் மேனன், ஒளிப்பதிவு-சினு சித்தார்த், எடிட்டிங்-பிரவீன் பிரபாகர் ஆகியோர் படத்தின் முக்கிய த்ரில்லிங்கான காட்சிகளுக்கு உத்திரவாதமான பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளனர்.
தினேஷ் காசி சண்டை காட்சிகள் அசத்தல் ரகம்.
இயக்குனர் சுனிஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை கவனத்தை சிதற விடாமல் நல்ல த்ரில்லரை உருவாக்கி நடிகர்களை தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும் சரி, கதையாக இருந்தாலும் சரி, அவர் எல்லா முடிவுகளையும் சரியாக எடுத்து படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நேர்த்தியுடன் சொல்லியிருப்பதில் வெற்றி பெறுகிறார்.
மொத்தத்தில் லேசி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரிப்பில் லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் குற்றவாளிகளை கோபத்துடன் எதிர்கொள்ளும் பார்வையற்றவரின் திரில்லிங் என்கவுண்டர்.