லாந்தர் சினிமா விமர்சனம் : லாந்தர் – மந்தமான ஒளி | ரேட்டிங்: 2/5

0
269

லாந்தர் சினிமா விமர்சனம் : லாந்தர் – மந்தமான ஒளி | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் :
விதார்த் – ஏசிபி அரவிந்த்
ஸ்வேதா டோரத்தி – ஜானு
விபின் – நாகுல்
சஹானா – மஞ்சு
பசுபதி ராஜ் – சிதம்பரம்
கஜராஜ் – டாக்டர் மேத்யூஸ்
மீனா புஷ்பராஜ் – நீலவேணி
மதன் அர்ஜுனன் – முத்து

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் – சஜிசலீம்
எடிட்டர் – பரத் விக்ரமன்
ஒளிப்பதிவு – ஞான சௌமதர்
இசை – எம்.எஸ். பிரவீன்
ஸ்டண்ட் – விக்கி
கலை இயக்குனர் – கல்லை தேவா ஜி
ஆடைகள் – முத்துவேல்
னுஐ ரூ ஏகுஓ – நாக் ஸ்டுடியோஸ்
ஃபிலிம் மிக்ஸ் – உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு – ஏ. சதீஸ் குமார்
பேனர்- எம் சினிமா தயாரிப்பு
தயாரிப்பு – ஸ்ரீ விஷ்ணு
நிர்வாகத் தயாரிப்பு – பாஸ்கர் ஜி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

கோயம்புத்தூர் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. ஏசிபி அரவிந்த் (விதார்த்), கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை அதிரடியாக கைது காவல் நிலையத்தில் அடைத்து விட்டு, தனிமையில் இருக்கும் போது மிகவும் பயந்த நிலையில் மயங்கி விழும் சுபாவம் கொண்ட தனது மனைவி ஜானுவுடன் (ஸ்வேதா டோரத்தி) இருக்க சீக்கிரம் வீட்டிற்குச் செல்கிறார். அதே போல மறுபுறம் நகுல் (விபின்) மற்றும் மஞ்சு (சஹானா) என்ற மற்றொரு ஜோடியை காட்டுகிறார்கள். அன்று இரவு ரெயின் கோட் அணிந்த ஒரு நபர் கொடூரமான தாக்குதலில் ஈடுபடுவதாக செய்தி வர, காவலர் ஒருவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் ஒரு பாலத்தின் அடியில் தலைக்கு மேல் ஒரு முக்காடு மற்றும் கையில் இரும்பு தடியுடன், தடுமாறி நடந்து கொண்டிருப்பதை காண நேர்கிறது, அந்த நபரை பார்த்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓடி  காவல் நிலையத்திற்கு  வந்து, மற்ற எல்லா காவல்துறை அதிகாரிகளையும் மீண்டும் நிலையத்திற்கு அழைக்கிறார்! அவர்கள் வந்ததும் முக்காடு மற்றும் கையில் இரும்பு தடியுடன், அலைந்து திரிந்த சைக்கோவை பற்றி அவர்களுக்குத் தெரிவித்து, அவரை பிடிக்க அனைவரும் ஒன்றாக செல்லும்படி வலியுறுத்துகிறார். இவரைப் பிடிக்க செல்லும் போலீஸ் அதிகாரிகளையும் அந்த மர்ம நபர் தாக்கி விட்டு தப்பித்து விடுகிறான். அதையடுத்து ஏசிபி அரவிந்த் தீவிரமாக இந்த நபரை பிடிக்க முயற்சிக்கிறார். அன்று இரவு மர்மமான முறையில் நடக்கும் கொலை சம்பவங்கள் காவல்துறைக்கு ஆட்டம் காட்டுகிறது. யார் இந்த சீரியல் கில்லர்? இந்த சீரியல் கில்லரை ஏசிபி அரவிந்த் பிடித்தாரா? சீரியல் கில்லர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? போன்ற கேள்விகளுக்கு மீதிக்கதை பதில் அளிக்கும்.

விதார்த் போலீஸ் அதிகாரியாக தனது பங்கை மிகவும் உறுதியுடன் நடித்திருக்கிறார்,  இருந்த போதும் பலவீனமாக கதைக்களத்தை தேர்வு செய்ததை அவர் தவிர்த்து இருக்கலாம்.

அவருடைய மனைவி ஜானுவாக ஸ்வேதா டோரத்தி அழகாக இருக்கிறார் தவிர பெரிய அளவில் பேசும் படி அவரது கதாபாத்திரம் அமையவில்லை.

விபின் கதாபாத்திரத்தில் நகுல் கதைக்களத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மனைவி மஞ்சுவாக சஹானா படத்தின் பிற்பாதியில் அழுத்தமான மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பைக் கொடுக்கிறார். இருப்பினும், பலவீனமான திரைக்கதை காரணமாக, அவரது கடின உழைப்பு பார்வையாளர்களை சென்றடைவது கடினம்.

இருளுக்கு ஒளி தந்துள்ளது ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும் மட்டும்.
சொதப்பலான திரைக்கதையை நேரியல் அல்லாத பாணியில் முடிந்த அளவுக்கு ஒட்ட வைத்துள்ளார் எடிட்டர் பரத் விக்ரமன்.

ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையை நான் லீனியர் கதை மூலம் சொல்லும் போது விறுவிறுப்பான திரைக்கதை ரொம்ப முக்கியம். அதை முற்றிலும் கோட்டை விட்டார் இயக்குனர் சஜிசலீம்.

மொத்தத்தில் எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் ஸ்ரீ விஷ்ணு தயாரித்துள்ள லாந்தர் – மந்தமான ஒளி.