லவ் விமர்சனம்: லவ் தமிழ் பதிப்பு, ரசிகர்களுக்கு ஏமாற்றம் | ரேட்டிங்: 2.5/5
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ். இந்தப் படத்தில் பரத் வாணி போஜன் விவேக் பிரசன்னா பிக் பாஸ் டானி ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார்.
திவ்யா (வாணி போஜன்) ஒரு வருங்கால கணவர்கள போகும் அஜய்யை (பரத்) சந்திக்கிறார், மேலும் அவர் தொழிலில் அனைத்தையும் இழந்ததால் அவர் ஒரு சிறந்த தேர்வாக இருக்காது என்று அவரது தந்தையின் எச்சரிக்கையை மீறி அவரை திருமணம் செய்து கொள்ளத் தேர்வு செய்து மணம் முடிக்கிறார். திவ்யாவின் அன்பான தந்தையால் பரிசளிக்கப்பட்ட ஒரு குடியிருப்பில் வசிக்கிறார்கள். திருமணமாகி ஓரிரு வருடங்கள், தம்பதியருக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுகிறது. கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். ஒரு நாள், திவ்யா கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். கிளினிக்கில் இருந்து தன் கணவனை அழைத்தாலும் பதில் வரவில்லை. வீட்டிற்குத் திரும்பியதும், சமையல் அறையில் சாப்பிட்டுப் போட்ட தட்டுகள் கிடப்பதையும், அஜய் குடித்துவிட்டு வீடியோ கேம் விளையாடுவதையும் அவள் காண்கிறாள். அவள் கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறாள். திவ்யாவுக்கும் அஜய்க்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு விரைவில் உடல் ரீதியான சண்டையாக மாறுகிறது, அதன் விளைவாக, கைகலப்பில் கணவன் தற்செயலாக மனைவியை தள்ளும் போது, அவள் பெரிய போட்டோ ஃபிரேமில் தலை மோதி கண்ணாடித் துண்டு பட்டு திவ்யா இறந்துவிடுகிறாள், குடிபோதையில் இருக்கும் அஜய் திடீரென்று எதிர்பாராத அதிர்ச்சியில் திகைக்கிறான். அவள் உடலை குளியலறைக்கு இழுத்துச் சென்று அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.